/* ]]> */
Dec 072011
 

7.12.2011  அன்று இரவு புதியதலைமுறை சானலில் நேர்படப் பேசு நிகழ்ச்சியில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை மிகவும் காரசாரமாக விவாதிக்கப்பட்டது . நேரலை நிகழ்ச்சியான இதில் கூடலூர் அச்சுதன் அவர்களும் எழுத்தாளர் திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களும் விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர் .

திரு. அச்சுதன் அவர்கள் கொஞ்சம் டிப்ளமேட்டிக்காகப் பேசினார் . பிறகு திரு. மனுஷ்யபுத்திரன் அவர்களிடம் பிரச்சினை குறித்து கேள்விகள் கேட்கப்பட்டது . மிக ஆவேசமாகவும் உண்மையான அக்கறையோடும் பேசினார் மனுஷ்யபுத்திரன் . ஒரு நேர்மையான , தார்மீகக் கோபமும் சமூகத்தின் மீதான அக்கறையும் வெளிப்பட்டது அவர் பேச்சில் .

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் வன்முறையைத் தூண்டுவதே அரசியல் வாதிகள் தான் என்றும் , ஊடகங்கள் இவ்விவகாரத்தை விற்று காசாக்குகின்றன என்றும் வெகுண்டார் . கேரளமும் தமிழகமும் ஒன்றை ஒன்று மொழி , வரலாறு மற்றும் பொருளாதார ரீதியாக சார்ந்திருக்கும் போது இந்த விவகாரம் சுமுகமாக, விரைவாக சரி செய்யப்படாவிட்டால் கர்நாடகாவும்  தமிழகமும் போல கேரள- தமிழக உறவு சிக்கல் மிகுந்த ஒன்றாகும் என்பதில் சந்தேகமேயில்லை என்றார் .

எழுத்தாளர்கள் , சிந்தனையாளர்கள் , படைப்பாளிகள் இவ்விவகாரத்தில் தீவிரமாக இறங்கி போராட வேண்டும் . ஆனால் எப்பொழுதுமே நம் நாட்டில் சிந்தனையாளர்களும் படைப்பாளிகளும் தோற்கடிக்கப்பட்டு தான் வருகிறார்கள் . பூகம்பத்தினால் அணைக்கு ஆபத்து வரும் என்று பேசும் பட்சத்தில் பூகம்பத்தினால் நாட்டில் உள்ள எல்லா அணைகளுக்கும் தான் பாதிப்பு நேரிடும் ! மேலும் முல்லைப்பெரியாறு அணை மிக உறுதியான பழமையான கட்டுமான அமைப்புக் கொண்டது அது காலத்தினால் மேலும் இறுகத்தான் வாய்ப்பு உள்ளதே தவிர சிதிலம் அடையாது எனவே இந்த பயம் தேவையற்றது என்றார் .

இதற்கான தீர்வாக என்ன சொல்ல விரும்புகிறார் என்று கேட்கப்பட்டதற்கு:

இந்த விவகாரத்தை பெரிதாக்கி, வன்முறையைத்தூண்டும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கடுமையாக முழங்கினார் .

இது அரசியல்வாதிகளைத் தாண்டி மக்கள் தீர்த்துக் கொள்ள வேண்டிய விஷயம் எனவே கேரளம் தமிழகம் இரு பக்கமும் உள்ள சமூக இயக்கங்கள் பேசி இதற்கான ஒரு சுமுகமான முடிவை எடுக்க வேண்டும் என்றார் .

பூசி மெழுகாமல் ஒரு படைப்பாளிக்கே உரிய நெஞ்சுரத்துடன் பேசிய மனுஷ்யபுத்திரனுக்கு வாழ்த்துக்கள் .

மூன்றாம்கோணம் தீபாவளி மலரில் வெளியான அவருடைய பேட்டியில் இத்தனை கோபம் ஏன் உங்களுக்கு என்ற என் கேள்விக்கு -

“கோபம் என்பது சொரணை என்பதன் அடையாளம். ஒட்டுமொத்த சமூகமே மொளனமாக  அநீதிகளோடு இணங்கிப் போகும்போது கலைஞர்கள், எழுத்தாளர்களின்  கோபமே மிஞ்சியிருக்கும் ஒரே நம்பிக்கை. சமூகத்தை பிரதிபலிப்பதல்ல ஒரு கலைஞனின் பணி. அதன் பாசாங்குகளை சுண்டுவதும்  அதன் கள்ள மொளனங்களைத் திறப்பதும்தான் எனது வேலையாக கருதுகிறேன்.

நாம் வாழும் காலம் மிகவும் கடினமானது. உண்மையும் பொய்யும் ஒரே மாதிரி காட்சியளிக்கும் காலம். நமது தத்துவார்த்த அரசியல் நம்பிக்கைகள் உடைந்துபோய்விட்டன. அறம் சார்ந்த , நீதியுணர்வு சார்ந்த குரலை  நமது கவிகள்தான் கால காலமாக முன்னெடுத்து வந்திருக்கிறார்கள். நாமார்க்கும் குடியல்லோம் என்று சொன்னவனின் மரபிலிருந்துதான் நானும் வருகிறேன். இங்கே கோபம் என்பது ஒரு எதிர்வினை. ஒரு நீதியுணர்ச்சி. இந்த சமூகத்தின் மீது, இந்த வாழ்க்கையின்மீது இருக்கும் எல்லையற்ற காதலை, அன்பைத் தெரிவிப்பதற்குத்தான் இந்தக் கோபம். எனக்கு வேறு வழி தெரியவில்லை.”

என்று அவர் பேசியதை இங்கு நினைவு கூறுகிறேன் . சொல்வதும் செய்வதும் ஒன்றே என்றிருப்பவன் , வாழ்பவன் தானே ஒரு  படைப்பாளி ..ஒரு சிந்தனையாளன் ?

..ஷஹி..

மனுஷ்யபுத்திரன் , முல்லைப் பெரியாறு அணை , முல்லைப் பெரியாறு அணை விவகாரம், திரு . அச்சுதன் , கேரள தமிழக கூட்டமைப்புத் தலைவர் , நந்தகோவிந்த், பூகம்பம், கேரளதமிழ உறவு

manushyaputhiran, mullai periyar dam issue, achuthan, kerela tamilnadu, tremors, earthquake

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>