/* ]]> */
Jun 172013
 

சினிமாஞ்சலி : மணிவண்ணன் – நூறாவது நாள் படங்கள் இயக்குநர்

மணிவண்ணன் MANIVANNAN DEAD CINEMANJALI FILMOGRAPHY

MANIVANNAN

அமைதிப்படையில் சத்யராஜை எலக்ஷனில் நிற்க வைத்து சத்யராஜ் வெற்றி பெறும் தருவாயில், அவர் தன் செட்டப் தொடையில் கை போடும்போது ,

“ஊட்டிக்கு தனியாத்தான் போகோணும் போலிருக்கு !” என மணிவண்ணன் சொல்லும்போது சிரிக்காமல் இருக்க யாராலும் முடியாது ! அந்தளவிற்கு அவர் வசனத்தின் டைமிங்க் வீச்சு ஆளைக் கட்டிபோடும் !

கோபுரங்கள் சாய்வதில்லை என கோலாகலமாக தமிழ் சினிமாவில் இயக்குநராய் அவதாரமெடுத்தவர் மணிவண்ணன். படம் ஹிட்டானாலும் , “என்ன, தமிழ் சினிமாவிற்கு இன்னொரு சென்டிமென்ட் டைரக்டர்!” என அலட்சியப்படுத்த எத்தனிக்கையில் , இளமைக்காலங்கள் என்ற காதல் கதை தந்து நிமிர வைத்தார். ஆச்சரியங்கள் அத்துடன் நிற்கவில்லை ! … நூறாவது நாள் என்ற ஆங்கில படங்களுக்கு இணையான ஒரு த்ரில்லர் ! விநியோகஸ்தர்களின் ஆஸ்தான டைரக்டரான மணிவண்ணனை  தமிழ் சினிமாவின் கலாரசிகர்கள்   நிமிர்ந்து பார்க்கத் தொடங்கியது அப்போதுதான் .  பாலவன ரோஜாக்கள் போல அரசியல் பொறி கலக்கும் படமாகட்டும், சின்னதம்பி பெரிய தம்பி என சிரிப்பு தோரணமாகட்டும், 24 மணி நேரம் என த்ரில்லராகட்டும் முதல் வசந்தம் என்ற மசாலா கலவையாகட்டும் , எந்த ஜானரையும் ஹிட்டடிக்க மணிவண்ணனால் மட்டுமே முடியும். நூறாவது நாள் பட இயக்குநர் மட்டுமல்ல , பல நூறாவது நாள் பட இயக்குநர் மணி !  இளையராஜாவின் கரம் கோர்த்து எண்பதுகளில் திரைவிருந்து படத்த முக்கியமான இயக்குனர் மணிவண்ணன். பாரதிராஜா, பாலசந்தர் , பாக்கியராஜ், பாலுமகேந்திரா என இயக்குநர் ஜாம்பவான்கள் இருந்த காலகட்டத்தில் மக்களிடம் பிரபலமான இயக்குநராக அங்கீகாரம் பெற்ற மற்ற மூன்றே இயக்குநர்களில் ஒருவர் மணிவண்ணன். ( மற்றவ்ர்கள் – சுந்தரராஜனும் ராஜ்சேகரும் ). தன்னுடைய இயக்குனர் செகண்ட் இன்னிங்சில் கிட்டத்தட்ட சத்யராஜின் ஆஸ்தான இயக்குநராக மாறி தன்னைத்தானே ஒரு குறுகிய வட்டத்துக்குள் குறுக்கிக் கொண்டாரோ என நாங்கள் குறைபட்டுக் கொண்ட காலங்கள் உண்டு. ஆனாலும் அந்தக் காலகட்டத்திலும் அமைதிப்படை என்ற அற்புதமான அரசியல் சடைர் தந்து கலக்கியவர் மணிவண்ணன்.

பாரதிராஜாவிக்கு நூறு பக்க விமர்சனக் கடிதமெழுதி அவருக்கே சிஷ்யனாய் சேர்ந்து நிழல்கள் படத்துக்கு கதாசிரியராக உள்நுழைந்தவர் மணீவண்ணன்.  அலைகள் ஓயவ்தில்லை என ஆரம்பித்தவர் , கோபுரங்கள் சாய்வதில்லை என சொந்தக் கொடி நாட்டினார். அவர் நடிப்பு கேரியருக்கும் பாரதிராஜாவே அடித்தளம். கொடி பறக்குதுவில் ரஜினி பட வில்லனாக்கி மணிவண்ணன் என்ற நடிகனின் அந்தஸ்தை உயர்த்தியவர் பாரதிராஜா. அவர் டைமிங்க் சென்ஸ் வெடி டயலாக்குகள் தியேட்டரில் விசில் அள்ளியதில் காமெடி ட்ராக் பக்கம் உரிமை கொண்டாடினார் மணி. அவ்வை சண்முகியில் அந்த முதலியார் கேரகடர் எல்லாம் மறக்க முடியுமா ! அமைதிப்படையில் தலைவராக உள்ளூர் தேர்தலில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை வம்புக்கிழுப்பதிலும் அதே படத்தில் தொண்டனாய் ஜட்டி துவைக்க போட்டி போடுவதிலுமே மணியின் நடிப்பு ரேஞ்ச் பரவி விரிவது தெரியும் ! சங்கமத்தில் ஆலாலகண்டா பாடலுக்கு ஆடி குணசித்திர வேடத்தில் நம்மை உருக வைக்கவும் தவறவில்லை மணி.  50 படம் எடுக்க காத்திருந்ததை போல நாகராஜ சோழன் ரிலீசுக்கு சில நாட்களுக்கு பிறகு மணியை மரணம் தழுவியிருக்கிறது !

மணிவண்ணன் ஒரு நடிகனாய், இயக்குநராய் மட்டுமல்லாமல் சமுதாய சிந்தனை கொண்ட ஒரு கலைஞனாயும் இருந்தார். தமிழீழம் பிறக்காதா என தவம் கிடந்த பலரில் அவரும் ஒருவர். என்னுடலை புலிக்கொடி போர்த்த வேண்டும் என விரும்பினார். 15.06.2013 அன்று மாரடைப்பால் காலமான மணிவண்ணன் உடலை புலிக்கொடி போர்த்தி அலங்கரித்தனர்.

ஊட்டிக்கு தனியாத்தான் போகணும் போலிருக்கு என நம்மை சிரிக்க வைத்த மணி இப்போது தனியாக போக எத்தனித்த இடம் தமிழ் சினிமாவை அழ வைத்திருக்கிறது ! ஆனாலும் மணி தனியாக எங்கும் போக முடியாது ! அவரின் டைமிங்க் டயலாக்குகளும் பல ஜானர் ஹிட்டுக்களும் என்றும் அவர் பேர் சொல்லும் !

———————-

நடிவில் சில காலம் மூன்றாம் கோணத்தில் எழுதாமல் இருந்த என்னை

“மணிவண்ணனுக்கு அஞ்சலி எழுதுடா !” என உரிமையாகக் கேட்டு எழுத வைத்த என் நண்பன் ராஜுக்கு நன்றி !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>