/* ]]> */
Jun 202013
 

மணிவண்ணன் சாவுக்கு  பாரதிராஜா தான் காரணமா ?

 

மணிவண்ணனின் அப்பா:
மணிவண்ணனின் மறைவு அவருடன் பழகியவர்களைத் தாண்டி, ரசிகர்களைத் தாண்டி, அவருடன் கருத்துவேறுபாடு கொண்டவர்களையும்கூட கலங்கவைத்துவிட்டது.
மணிவண்ணன் ஒரு டைரக்டர், எழுத்தாளர், நடிகர் மட்டுமல்ல,.சமூக சிந்தனை கொண்ட ஒரு அரசியல்வாதியும்கூட.  கோவை மாவட்டம் சூலூரைச் சேர்ந்த இவர், பள்ளிக் காலத்தில், முதலில் திமுக, பின்னர் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்களில் மூழ்கிப் போய், தன்னுடைய 21-ம் வயதில் ’கருப்பைய்யா’ என்ற இயக்கத்தை நடத்தினார். பின்னர் சென்னை புறப்பட்டு வந்தவர், பாரதிராஜாவின் ‘கிழக்கே போகும் ரயிலை’ப் பார்த்துவிட்டு அவருக்கு ஒரு மிக நீண்ட கடிதம் எழுதி, அவர் அழைத்ததும் சென்று அவரிடமே ஐக்கியமாகிவிட்டவர்.  நடிப்பு , டைரக்ஷன் என்ற அவருடைய திரையுலக வரலாறு அனைவரும் அறிந்ததே.50-வது படமாக ‘ நாக ராஜசோழன் எம்.ஏ. எம்.எல்.ஏ.’வை வெளியிட்டபின்பு தன்னுடைய மகன் ரகுவண்ணனை வைத்து ஒரு படம் ,சத்யராஜை ஒரு படம் எடுக்க நினைத்தவர், அதற்குள் காலமானார்.

manivannan bharathiraja

manivannan bharathiraja

மணிவண்ணனின் மரணத்துக்கு அவருக்கு பாரதிராஜாவால் ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்றும் பேச்சு அடிபடுகிறது. பாராதிராஜாவால் அறிவிக்கப்பட்ட சில போராட்டங்களை மற்றவர்கள் தங்களது அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக்கொண்டதாக அவருக்கு வருத்தம் இருந்தது. காவிரிப் பிரச்சினைக்கான போராட்டத்தை விஜயகாந்த்தும்  இலங்கைத் தமிழர் போராடட்த்தை சீமானும் தங்களது சுய அரசியல் லாபத்துக்காகப் பயன்படுத்திக் கொணட்னர். அதனால்  இனிமேல் போராட்டங்களையே அறிவிக்கப்போவதிலலை என்று பாரதிராஜா சினந்துகொண்டார். பாரதிராஜாவுக்கு தன்னுடைய சிஷ்யன் மணிவண்ணன் சீமான் அரசியலில்  அவதாரம் எடுக்கத் துணை போவது பிடிக்கவில்லை. அதனால் மணிவண்ணனுடன் பேசுவதையே தவிர்த்துவிட்டார். பாரதிராஜாவை ‘அப்பா; அப்பா’ என அழைக்கும் மணிவண்ணனால், பாரதிராஜாவின் புறக்கணிப்பைத் தாங்க முடியவில்லை. ஆனால், சீமானுடனான தன்னுடைய நிலைப்பாட்டையும் மாற்றிக்கொள்ளவில்லை.
வேதனை தாங்க முடியாமல் ஒரு எஃப்.எம். ரேடியோசிட்டி பேட்டியில் அழுதுவிட்டார் மணிவண்ணன். ” அரசியல் ரீதியாகப் பிரிவு இருந்தாலும்.என் ரெண்டாவது தாய்; என் ரெண்டாவது தந்தை பாரதிராஜாதான்” என்றவர் பேட்டி மூலம் பாராதிராவுக்கே உருக்கமான கோரிக்கை வைத்தார். ” என் நேசத்துக்குரிய அப்பா, வணக்கம். உங்க ஆசீர்வாதத்தால், அரவணைப்பால், நான் நல்ல நிலையில் இருக்கேன். எனக்கு நீங்கதான் கல்யாணம் பண்ணிவச்சீங்க. நான் வளர்ந்துட்டேன். என் மகளுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டேன்.  மகனுக்கு கல்யாணம் ஆகப் போவுது. நான் எவ்வளவு பெரிய டைரக்டரா இருந்தாலும் எத்தனை
பேர் சிலாகிச்சாலும், நான் எப்பவுமே பாரதிராஜா அஸிஸ்டென்ட்தான்” என்று கதறி அழுகிறார். “என்மேலே கோபமா இருந்தா ஒரு அறை விட்டிருங்க. என்கூட பேசாம  இருக்காதீங்க”என்று உருக்கமுடன் சொல்லியிருந்தார்

மேலும்,” பாரதிராஜாவுக்கு தான் மட்டுக்தான் டைரக்டர்னு நெனப்பு. மத்தவங்களை ஒரு பொருட்டா மதிக்க மாட்டார்.”என்றும், ” ரூம்ல உட்கார்ந்து வசனம் எழுதிக் கொடுக்கும்போது நல்லா இருக்குன்னு பாராட்டுவார். அதே வசனத்தை ஷூட்டிங் ஸ்பாட்டில் சொல்லும்போது ‘என்னய்யா வசனம் இது’ ன்னு ரைட்டிங் பேடை தூக்கி வீசுவார். என பாரதிராஜா குறித்து தன் அனுபவங்களை  மேடைகளில் சொல்லியிருந்தார்.
இந்நிலையில் ஒரு பத்திரிக்கை கேள்வி பதிலில், மணிவண்ணன் பற்றிய கேள்விக்கு பதிலளித்த பாரதிராஜா” அவன் அதிகமா பொய் சொல்வான். பிச்சைக்காரப் புத்தி”என்று கூறியிருந்தார். இந்த பதிலைப் படித்த அத்தனை பேரும் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு பதில் கேட்டு 2 நாட்கள் மீடீயாக்கள் மணிவண்ணனின் செல்போனை முற்றுகையிட அவருக்கு மிகுந்த மன உளைச்சலாகிவிட்டது. இந்த மன உளைச்சல்தான் அவர் மரணத்துக்கு காரணம்
என்கிறார்கள்.
இது சம்பந்தமாக இயக்குனர் சீமானிடம் பேசும்போது ,அவர் தெரிவித்தது,” எதனால் மரணம் ஏற்பட்டது என நான் மருத்துவர்களிடம் கேடட்போது, எதிர்பாராத மன உளைச்சல்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக இதயத்தில் பாதிப்பு  ஏற்படுத்தியுள்ளது என்றனர். அதனால் விமர்சனங்கள் அவரது இதயத்திற்கு பாதிப்பை ஏறபடுத்தியிருக்கலாம். வாய்ப்பிருக்கிறது.
இறப்பதற்கு முதல்நாள் இரவு 10 மணிக்கு அப்பா பாரதிராஜா எழுதியவைகள் குறித்து அழுதபடியே என்னிடம் வருத்தப்பட்டார். “என்றார். “அப்பாதானே” என்று அவரைத் தேற்றினேன் “ஆமாம்…அப்பாதானே அதற்கு வருத்தப்படக்கூடாது” என்று அவரே அவரைத் தேற்றிக்கொண்டார். ஆனாலும் மன அழுத்தம் அவரைப் பாடாய்ப் படுத்தியது. என்று புரிந்துகொள்ளமுடிந்தது” என்றார்.
பாக்யராஜிடம் இதுபற்றிக் கேடட்போது,” மணிவன்னன் நல்ல படைப்பாளி. வித்தியாசமான புத்தகங்களைப் படிக்கிற படைப்பாளி.எழுத்தாளர்;பேச்சாளர். எனக்குப் பிறகுதான் அவர் பாரதிராஜாவிடம் சேர்ந்தார். ஆனால் பாதிராஜாவுக்குப் பிடித்தமானவராக இருந்தார். பாரதிராஜாவின் கோபம் என்பது குழந்தைக் கோபம் மாதிரி. தன் படத்துல ஸ்க்ரிப்டுல ஒர்க் பண்றவங்க, திறமையானவுங்க தன்னைவிட்டுப் போகும்போது கோபப்படுவார். எல்லார் மேலேயும் பாரதிராஜா கோபப்படமாட்டார் தனக்குப் பிடிச்சவங்க மேலேதான் ரொம்பக் கோபபபடுவார். ஓவர் அஃபெக்ஷனில் பேசுறது பாரதிராஜாவோட பழகக்ம். பாரதிராஜா மணிவண்ணனைப் பத்தி சொன்ன நேரத்துல மணிவண்ணனின் துயர மரணம் நிகழ்ந்துருச்சு. அதுதான் வருத்தமா இருக்கு” என்றார்.
எது எப்படி இருந்தாலும் அதிகமான வெறுப்பு ,கோபதாபங்கள் இவை பொது வாழ்வுக்கு நல்லதல்ல. ‘உன் அயலானை நேசி ‘என்னும் போதனைகள் இங்கு எடுபடுமா?

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>