/* ]]> */
Sep 012011
 

மங்காத்தா

 

மங்காத்தா

மங்காத்தா

மங்காத்தா விமர்சனம் – மங்காத்தா திரை விமர்சனம் – மங்காத்தா சினிமா விமர்சனம்


நடிப்பு :

அஜித், த்ரிஷா, அர்ஜுன், ப்ரேம்ஜி, அஞ்சலி, லக்ஷ்மி ராய்

Cast : Ajith Kumar, Trisha Krishnan, Arjun, Premji,a

மங்காத்தா

பாடல்கள் : கங்கை அமரன்

Lyrics : Gangai Amaren

இசை : உவன் ஷங்கர் ராஜா

Music Director : Yuvan Shankar Raja

தயாரிப்பு : தயாநிதி அழகிரி

Producer : Dhayanidhi Alagiri

இயக்கம் : வெங்கட் பிரபு

Director : Venkat Prabhu
மங்காத்தா

எதிர்பார்ப்புகள் :

தல அஜித்தின் 50வது படம்.

தல அஜித் டபுள் ரோல் இல்லாமல் நெகடிவ் ரோல் செய்யும் படம்.

அர்ஜுன் குணசித்ர வேடத்தில் தோன்றும் படம்.

இந்த படத்தின் நாயகி த்ரிஷா இதை “பாய்ஸ் படம்” என வர்ணித்த படம்.

கதை : ஐபிஎல் பெட்டிங்கில் கோடி கோடியாக கட்டப்படும் பணத்தை ஒரு கில்லாடி செட்டியார் (பசங்க புகழ் ஜெயப்பிரகாஷ்) அமுக்க நினைக்க அதே பணத்தை அவரிடமிருந்து பறிக்க புறப்படுகிறது ஒரு கும்பல். அந்த கும்பலில் வந்த சேர்கிறார் தல அஜித். அவர் ஒரு சஸ்பெண்டட் இன்ஸெக்டர்.

பணத்தை அடிக்க செட்டியார் மகள் த்ரிஷாவை மடக்குகிறார் அஜித்.இதற்கிடையில் இந்த கும்பலை பிடிக்க போலீஸ் அர்ஜுன் களமிறங்க, அத்ற்கப்புறம் ஜெட் வேகத்தில் போகிறது “மனி மனி மனி” வேட்டை.
அஜித் + மங்காத்தா

நடிப்பு:

அஜித் : தலக்கு இது புது களம். சால்ட் அண்ட் பெப்பர் ஹேர்ஸடிலில் நெகடிவ் கேரக்டரில் தல தீபாவளி கொண்டாடுகிறார். அவர் சொல்லும் “ஐ எம் அ பேட் மேன்” “மனி மனி மனி” டயலாக்குகள் கைதட்டல் பெறுகின்றன. ஆக்ஷன் சீன்களில் புகுந்து விளையாடுகிறார் அஜித். ஐம்பதாவது படத்திற்கென்று ஸ்பெஷலாக உழைத்திருக்கிறார். அது நடிப்பிலும், ஆக்ஷனிலும், ஸ்டைலிலும் சூப்பராய் வெளி வந்திருக்கிறது.

அஜித் த்ரிஷா

த்ரிஷா : த்ரிஷாவே சொன்னபடி இது பாய்ஸ் படம். அதிக ஸ்கோப் இல்லை. ஆனால் டூயட் காட்சிகளில் அழகாய் தோன்றுகிறார்.

ஜெய்ப்பிரகாஷ் : மனுஷன் என்ன ரோல் கொடுத்தாலும் பின்னுகிறார். தமிழ் திரையுலகிற்கு இன்னொரு நாசர் பிரகாஷ்ராஜ்!

அஞ்சலி : வைபவின் ஜோடியாக வருகிறார் . கம்மி காட்சிகளிலேயே வந்தாலும் அழகில் மனதை அள்ளுகிறார்.

ஆன்ரியா : அர்ஜுன் மனைவியாக நானும் இருக்கிறேன் என அட்டெண்டன்ஸ் கொடுக்கிறார்.

அர்ஜுன் : ஆக்ஷன் கிங்குக்கு இது கிட்டத்தட்ட ரீ என்ட்ரி. அந்த “வாய்யா தல” “வாய்யா ஆக்ஷன் கிங்கு” அஜித் அர்ஜுன் காம்பினேஷன் காட்சிகள் சூப்பர்.

இசை :

யுவன் தான் இப்போதைக்கு தமிழ் திரை இசையில் இன்ஃபார்ம் பேட்ஸ்மேன். பாடல்களிலும் ரீ ரெக்கார்டிங்கிலும் அடித்து தூள் கிளப்புகிறார். ஆனால் அந்த கேசினோ பிஜி “ராயல் கேசினோ” பின்னணி இசையை நினவு படுத்துகிறது. பாடல்களில் “விளையாடு மங்காத்தா ” “வாடா பின்லேடா” பட்டையை கிளப்புகிறது.

மங்காத்தா

கேமரா :

ஆக்ஷன் காட்சிகளில் தூள் பரத்துகிறது. அந்த கேசினோ டைப் க்ளூமினஸ் நல்ல எஃபக்ட் !

இயக்கம் :

வெங்கட் பிரபு தேறிவிட்டார். மங்காத்தா விளையாட்டாய் விடலை பிள்ளையாய் சுற்றிக் கொண்டிருந்த ஜாலி இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு கிராடுவேஷன் படம் என வைத்துக் கொள்ளலா. ஒரு பெரிய ஹீரோ… அவருக்கு அம்பதாவது படம்… அதுவும் நெகடிவ் கேரக்டர். ஆனால் அந்த பிரஷரையெல்லாம் தன் ஜெட் வேக திரைக்கதை மூலம் அநாயசமாய் சமாளிக்கிறார். ஆனால் என்னதான் கிரிப்பிங்க் திரைக்கதையும் ஆக்ஷன் சீக்வென்சும் நம் மனதை கட்டிப் போட்டாலும் ரெண்டே முக்கால் மணீ நேர நீள படம் கொஞ்சம் ஓவருங்கண்ணா.. கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்!

அஜித் மங்காத்தா

பார்க்கலாமா :

நாங்க அஜித ரசிகரா?

நீங்கள் ஆக்ஷன் பிரியரா?

ஆங்கில டைப் கான் ஸ்டோரி பிடிக்குமா?

இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுக்கு உங்கள் பதில் ஆமாம் என்றிருந்தால் “ஓடிப் போய் உடனே பாருங்க !

ajith mankatha

ஃபைனல் வெர்டிக்ட் :

ஆடிப்பாரு மங்காத்தா ! தல ரசிகா! உடனே

ஓடிப் பாரு மங்காத்தா !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>