/* ]]> */
Jul 302011
 

 

 

 


 

                    


முழு முதற் கடவுளான கணபதியின் அணைப்பில், திராத விளையாட்டுப் பிள்ளையான கண்ணனின் அற்புதக் காட்சி கருவறையிலேயே மனம் நிறையக் காணமுடிகிறது.அருள்மிகு மகாகணபதி கோயில்.மள்ளியூர் கேரளா மூலவர் கணபதிகண்ணன் ஊர் மள்ளியூர் கோயிலின் சிறப்பம்சம் : மாமாவின் மடியில் மருமகன் இருந்தால் கூட ஒத்துக் கொள்ளலாம்.மருமகனின் மடியில் மாமா அமர்ந்திருப்பதைப் பார்க்க முடியுமா. இந்த அதிசயத்தைக் காண வேண்டுமானால் கேரள மாநிலம் மள்ளியூர் மகா கணபதி கோயிலுக்கு செல்ல வேண்டும். இங்கே கணபதியின் மடியில் கண்ணன் வீற்றிருக்கும் கோலத்தைக் காணலாம். குழந்தையாக இருப்பதால் மருமகன் மடியில் மாமா அமர்ந்து விட்டார் போலும்.[Gal1]


ஆதிமூலமும் ஆதிநாயகனும் சேர்ந்திருக்கும் இந்த அற்புதத்தை பார்த்து பார்த்து ருசித்துக் கொண்டே இருக்கலாம். கர்ப்பக்கிரகத்திலேயே இப்படி ஒரு அபூர்வக்காட்சி கிடைக்கிறது.முக்கிய திருவிழாக்கள் விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தல வரலாறு: ஆர்யபள்ளி மனை வடக்கேடம் மனை ஆகிய இரு குடும்பத்தினரும் இணைந்து ஒரு மேற்கூரை இல்லாத சிறிய சுற்றுச்சுவர் கட்டி நடுவில் கணபதியை வைத்தனர். ஒருமுறை இவ்விரு குடும்பங்களுக்கும் மிகவும் கஷ்டம் ஏற்பட்டது.கோயில் பராமரிப்பு பாதிப்புக்குள்ளானது. அவர்கள் கணபதியை பக்தியோடு வழிபாடு செய்து வந்தனர். இதற்கு கட்டணம் உண்டு.


இவர்களது வம்சாவழியில் வந்த சங்கரன் நம்பூதிரி குருவாயூரப்பன் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அவர் தினமும் இந்த கணபதி கோயில் முன் அமர்ந்து கிருஷ்ணனின் பெருமைகளைப் பற்றி வேதவியாசரால் அருளப்பட்ட பாகவதத்தை பாராயணம் செய்து வந்தார். கிருஷ்ண பகவான் விக்ரகம் செய்து கணபதியின் மடியில் அமர்த்தினார். இவரை கணபதி தன் துதிக்கையால் அரவணைத்திருப்பதை போன்ற வடிவமைப்பைப் பார்த்தால் மெய்சிலிர்க்கும்.


வழிபாடு: இங்கு முக்கிய வழிபாடு முக்குற்றி புஷ்பாஞ்சலி ஆகும்.முக்குற்றி எனப்படும் செடியை 108 என்ற எண்ணிக்கையில் வேரோடு பறித்து ஒருவகை வாசனை திரவத்தில் மூழ்கவைத்து விடுவார்கள். பின் அதை எடுத்து விநாயகர் மந்திரம் ஓதி வழிபாடு செய்கிறார்கள். இப்படி செய்வதனால்எப்படிப்பட்ட தோஷத்திலிருந்தும் விடுபடலாம் என கூறப்படுகிறது. ஒரு நாளில் ஐந்து முறை மட்டும் இந்த வழிபாடு செய்யப்படுவதால் முன்பதிவு செய்ய வேண்டும்.
இந்தப் பூவை மூக்குத்திப்பூ என்று சிறுவயதில் கை நிறையப் பறித்து கம்மல், மூக்குத்தி, மோதிரம் வளையல், கொலுசு என ஒட்டி விளையாடியது மனதில் ஓடியது.


 இறைவனுக்கு உகந்த தச மலர்களுள் – ஒன்றாம். ஆஹா இத்தனை மருத்துவ குணமுள்ள மலர்களையா கைநிறைய வைரமாய் பறித்து விளையாடியிருக்கிறோம்! மூக்குத்திப்பூ மேலே காத்து உட்கார்ந்து பேச, அதைக் காணும் மனம் தெம்மாங்கு பாடிய மலரும் நினைவுகள் மலர்ந்தன.

 Mukkutti


இதுதவிர நோயிலிருந்து விடுபட தடி பச்சரிசி மாவு நைவேத்தியம் என்னும் வழிபாடு செய்யப்படுகிறது.


            


திருமணத்தடை நீங்குவதற்காக செவ்வாய் வௌளிக்கிழமைகளில் சுவாமிக்கு அணிவிக்கப்படும் பழமாலை மிகவும் சக்தி வாய்ந்தது. இதற்கும் முன்பதிவு உண்டு.குழந்தை பாக்கியத்திற்காக பால்பாயாசம் படைக்கப்படுகிறது.பித்ரு கடன் செய்பவர்கள் இங்கு சதுர்த்தியூட்டு சோறு காய்கறி படையல் எனப்படும் வழிபாடைச் செய்கிறார்கள்.எல்லா வழிபாட்டுக்கும் கோயிலிலேயே பணம் செலுத்த வேண்டும். வெளியில் இருந்து வாங்கிச் செல்லும் பொருட்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
kalasam_wஆயிரம் செம்பு கலச ஜல அபிஷேகம் செய்யப்படும் வழிபாடு பல தடங்கல்களை நீக்கும் இந்த அபிஷேகம், அபிஷேகப்பிரியரான சிவனின் மகனுக்கு விஷேஷமாகச் செய்யப் படுகிறது. ஒரு நாளுக்கு இரண்டு முறையே நடைபெறும் இந்த பூஜைக்கு முன்பதிவும், நிகழ்த்துபவரின் முன்னிருப்பும் அவசியம்.
சகஸ்ர கலசாபிஷேகமும் சிறப்பாக செய்யப்ப்டுகிறது.கர்பக்கிரகத்தில் மாலை அர்ப்பணிக்கலாம்.தேங்காய் உடைத்தல் அனைத்து தடைகளையும் தகர்க்கும் வழிபாடாகும்.


    


மண்டல மகரவிளக்கு காலங்களில் விளக்கேற்றுத்ல், புஷ்பாஞ்சலி, மாலை வழ்ங்குதல் சிறப்பாகும்.


கோயில் சுற்றுப்பகுதியில் சாஸ்தா மகாவிஷ்ணு துர்க்கை அந்தி மகாகாவலன் யட்சி நாகர் சன்னதிகள் உள்ளன. இருப்பிடம் கோட்டயத்தில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் 21 கி.மீ. தொலைவில் குறுப்பந்தரை உள்ளது. கோட்டயத்திலிருந்து பஸ்கள் உள்ளன. சங்கீத ஆராதனை:  புல்லாங்குழல் நாயகன் கிருஷ்ணனை மகிழ்விக்கும் நிகழ்ச்சி இங்கு திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. சபரிமலை மகரவிளக்கு காலங்களில் கோயில் முற்றத்தில் உள்ள அரங்கில் இந்தியாவின் பிரபல பாடகர்கள் பாடுகிறார்கள். புதிய பாடகர்களும் இசை கற்பவர்களும் இந்த அரங்கத்தில் தங்களது இசை நிகழ்ச்சியை நடத்தி இறைவனின் அருளைப்பெறுகிறார்கள். இசைநிகழ்ச்சி நடத்துவதற்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

[Image1]pic2
  


Ashtavinayak   Bal Krishna .
 


animated gif flower

 

Tags : Kerala ganapathi temple malliyur mahaganapathin temple a traditional temple for Lord Vinayaga in Malliyur , Kerala where the deity Lord Ganapathi is very powerful and blesses his devotees.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>