/* ]]> */
Oct 042012
 

மது

 

மது

மது

 

ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் கப்பல்களில் வந்த யவனர்களின் மதுக் குப்பிக்கு மயங்கி கிடந்த மன்னர்களின் கதையை சோழமண்டல கடற்கரை வரலாறு சொல்கிறது. மதுவைக் காய்ச்சி வடிகட்டும் முறையை (Distillation) அன்றைய அரேபிய, பாரசீக, ரோம சாம்ராஜ்யங்களில் நிலவி வந்தது. இதில் ஒயினை விடவும் அதிக போதைதரும்‘அல்-கூகுல்’ எனும் திரவத்தை, ஜாபர் இப்னு கையாம் என்பவர் கண்டுபிடித்தார். இவர் ஒரு வேதியல் அறிஞர். இந்த அல்-கூகுல் மருவி அல்கஹால் என்றானது.

ஜாபர் இப்னு கையாம் அதைவொரு மருந்தாகத்தான் பயன்படுத்தினார். 13-ம் நூற்றாண்டில் இத்தாலிமாண்ட் பெல்லியர் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்னால்ட் வில்லோனோவா என்பவர்தான் அதை மதுவாகவும் பயன்படுத்தலாம் என்று கண்டறிந்தார்.

பண்டைய காலத்தில் ஆரியர்கள் கைபர், போலன் கணவாய் வழியாக வரும்போதே சோமபானம் – சுரபானம் என்ற மதுவை தரம் பிரித்து கொண்டு வந்தார்களாம். சுரபானம் அருந்துகின்ற ஆரியர்களை சுரர்கள் என்றும். சுரபானம் அருந்தாத திராவிடர்கள் அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆனால், நம் தொன்மையான இலக்கியங்கள் பலவும் போதைதரும் கள்ளைத் தொடாதே என்றே சொல்கிறது.

இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள் காலத்தில், மேல்வர்க்க மக்களின் உற்சாக பானமாகயிருந்த சீமைச் சாராயத்தை 1937ல் அன்றைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக இருந்த ராஜாஜி அதை தடை செய்து, பூரண மதுவிலக்கை கொண்டுவந்தார்.

தனது தென்னந்தோப்பில் இருந்த நூற்றுக்கணக்கான தென்னைகளில் கள் இறக்கப்படுவதால் அவற்றையெல்லாம் வெட்டிச் சாய்த்தார் பெரியார். இதற்கும் முன்னோடியாக, தான் ஆட்சி செய்யும் பகுதி முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டுவந்த ஒரே மன்னன் மாவீரன் திப்புசுல்தான்.

1974 ல் தமிழக முதல்வராக இருந்த கலைஞர் கள்ளச் சாராயத்தை நல்ல சாராயமாக மாற்றினார். அதாவது,அரசாங்கமே சாராயக் கடைகளை திறந்து ஏலம் விட்டது.

ஆனால், இன்று தமிழ்நாட்டில் மட்டும் மதுபானக் கடைகளால் ஆண்டுக்கு 15 ஆயிரம் கோடி அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. மதுபான கடைகளின் 6696. மேற்பார்வையாளர்கள் எண்ணிக்கை 8,200. விற்பனையாளர்கள் 16 ஆயிரம். உதவியாளர்கள் 6 ஆயிரம். இதை நம்பி வாழும் குடும்பங்கள் 1 லட்சம் என சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.

அதேபோல், தமிழ்நாட்டில் 15லிருந்து 20 வயது வரை 10 சதவிகிதம்பேரும், 20- 30 வயது வரை 35 சதவிகிதம் பேரும், 30-35 வயது வரை 37 சதவிகிதம் பேரும், 35- 50 வயது வரை 18 சதவிகிதம் பேரும் பெருங்குடிமகன்கள் என சமீபத்திய புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

அளவுக்கு அதிகமாக மது அருந்தும்போது மூளையில் நரம்புகளின் வேலைசெய்யும் திறனை குறைத்து, சிந்திக்கும் திறனையும் அது இழக்க வைக்கிறது.

ஆனால்,  தினமும் சிறிதளவு ரெட் ஒயின் அருந்தும் ஆண்களுக்கும் பெண்களுக்கும், பாலுணர்ச்சி அதிகமாய் இருப்பது மேலை நாடுகளில் நடந்த ஆய்வு ஒன்றில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் மிதமான மதுவருந்தி உடலுறவில் ஈடுபடுவதால், அங்கு கூச்சங்கள் குறைந்து கலவியில் நாட்டம் அதிகரிக்கிறதாம்.

இவ்வாறு, எப்பொழுதாவது ஒருமுறை செய்வதில் தப்பில்லை என்றும், அடிக்கடி இதுபோல் ஈடுபட்டால்,மதுவருந்தாமல் உடலுறவில் ஈடுபட முடியாது என்ற நிலையும் ஏற்படுமென்றும், குழந்தைபெறும் எண்ணத்தில் இருக்கும் தம்பதிகளுக்கு இந்தமுறை நல்லதல்ல என்றும் எச்சரிக்கின்றனர்.

மது அருந்துவதால் இரைப்பை நோய்கள், குடல் புற்று, சிறுநீரக செயலிழப்புகள், பக்கவாதம், நரம்பு தளர்ச்சி,ஆண்மைக்குறைவு போன்ற நோய்களுக்கு ஆளாகின்றனர். இதைவிடக் கொடுமை என்னவென்றால் மதுவின் தாக்கத்தால் பல பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கும், கர்ப்பப்பை நோய்களுக்கும் ஆளாகியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாம் உலகப்போருக்குப் பின் பிறந்த இளைய தலைமுறை அமெரிக்கப் பெண்களிடையே மதுவருந்தும் பழக்கம் அதிகரித்திருப்பதாக வாஷிங்டன் பல்கலைக்கழகம் நடத்திய இன்னொரு ஆய்வு தெரிவிக்கிறது. ’போதைக்கு அடிமையாகும் பெண்கள் கடுமையான உடல்நலக் கோளாறுகளை சந்திக்க நேர்கிறது, மதுவருந்தும் ஆண்களைவிட பெண்களுக்கே இதன் பாதிப்பு அதிகமாக இருப்பதால், பெண்கள் தங்கள் ஆயுளின்  பெரும்பகுதியை இழந்து விடுகிறார்கள்’ எனவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த நிலையில் இத்தாலி, பிரான்ஸ் நாட்டில் மதுபானம் குடிப்போருக்கு   தனி வரி விதிக்க தீர்மானித்துள்ளது. இந்த வரி விதிப்புத்  திட்டத்தை இத்தாலி நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ரீனாதோ பால்துசி தீவிரமாக பரிசீலித்து வருகிறார். இந்தச் சட்டம் அமுலுக்கு வந்தால் மதுபானம் குடிப்போர் ஒரு பாட்டிலுக்கு 3 யூரோக்களைக் கூடுதல் வரியாகச்  செலுத்த வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்துக்கு சுமார் ரூ.1,600 கோடி அதிக வருமானம் கிடைக்குமென்று  எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் குடிமகன்கள் குறைய வாய்ப்புண்டாம்.

இதேபோன்று, நம் ஆந்திர மாநிலத்தில் வேளாண் துறை அமைச்சர் டி.கி.வெங்கடேஷ்,  “மது குடித்துவிட்டுவந்து தொல்லை கொடுக்கும் கணவரை, பொது இடத்திற்கு அழைத்துவந்து உதைக்கும் பெண்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு” என அறிவித்திருக்கிறார்.

எது எப்படியே, உலகிலேயே மது விற்பனை அதிகம் ஆகும் இடம் இந்தியா. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகமாக விற்பனையாகிறது. சீனாவில் அபின் சாப்பிட கற்றுக்கொண்ட மக்கள் அதற்காக போரே நடத்தினார்களாம். நம் மக்கள் மதுவுக்கு எதிராக என்ன செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

கே.கண்ணன்.

     9600074777

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>