/* ]]> */
Oct 132012
 

maatraan vimarsanam  மாற்றான் விமர்சனம் -

சினிமா விமர்சனம்

 

maatraan vimarsanam மாற்றான் விமர்சனம்

maatraan vimarsanam மாற்றான் விமர்சனம்

Maatraan Vimarsanam மாற்றான்

நடிப்பு : சூர்யா , காஜல் அகர்வால், சச்சின் , தாரா

 

இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

இயக்கம் : கே வி ஆனந்த்

 

மாற்றான் கதை : ஸைன்டிஸ்ட் தந்தையின் ஜெனடிக் ஆராய்ச்சி தோல்வியால் ஒரே இதயத்துடன் இரு குழந்தைகள் ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய் பிறக்கின்றன. பிறப்பிலேயே இதயம் இல்லா குழந்தையை கொல்ல நினைக்கும் தந்தையிடம் போராடி குழந்தைகளை வளர்க்கிறார் அம்மா. இரு சூர்யாக்கள் வளர்க்கிறார்கள். ஒருவர் அறிவாளி, படிப்பாளி,கவியுணர்வு அதிகம்… சோஷியலிச சிந்தனை சமுதாய அக்கறையும் உண்டு….. இன்னொருவர் ஜாலி பார்ட்டி, பெண்களை வசியம் செய்பவர் … சமுதாய சிந்தனையா அப்படின்னா டைப்….

 

ஜெனெடிக் தந்தை ஆராய்ச்சி முயற்சியில் ஒரு குழந்தைகள் மெமெரி பூஸ்டர் பால் பவுடர் கண்டு பிடிக்க “எனர்ஜியான்” எனற புது ப்ராடக்ட் மார்க்கெட் வசூலை அள்ளுகிறது. அதற்கு போட்டி கம்பெனிகள் …அந்த ஃபார்முலாவை கண்டறிய துடிக்கிறார்கள். அப்படி ஒரு ரஷ்ய பெண் உளவாளியாய் வருகிறார். அவர் சூர்யாக்களை பரிச்சயம் செய்து தகவல்கள் திரட்ட, அவர்தான் வில்லியென நாம் நினைக்க… கதை கொஞ்சம் திரும்பி சூர்யாவின் அப்பாவை வில்லனாக்குகிறது.

இடையில் காஜல் அகர்வாலுடன் கலீல் ஜிப்ரன் கவிதை, டிஸ்கோதே ஆட்டம் என இரு சூர்யாக்களும் ப்ராக்கெட் போட , கவிதையே ஜெயிக்கிறது. ஜாலி சூர்யா ஐடியா கொடுக்க ரிசர்வ்டு சூர்யா காஜலை காதலிக்கிறார். தியேட்டரில் முத்தம் கொடுக்க படாதபாடு படுகிறார்…

நடு நடுவே தந்தையின் கம்பெனி ரகசியம் அறிபவர்கள் மர்மமாய் இறக்க, அந்த ரஷ்யப் பெண் இறப்பதற்கு முன் எடுத்த பென் ட்ரைவ் சமுதாய உணர்வுள்ள சூர்யாவிடம் கிடைக்க, தந்தை ஸ்டீராய்டு கலந்த பாலை குழந்தைகளுக்கு விற்று காசாக்குவது தெரிய வருகிறது. சூர்யா தந்தையிடம் சண்டை போட, இரு சூர்யாக்களிடமுமே இதனால் பிரச்சினை வருகிறது. ஆனாலும் எப்படியோ சேர்ந்து இருவரும் இறந்த ரஷ்ய பெண்ணை பார்த்து திரும்புகையில் சூர்யாவிடம் இருக்கும் பென் ட்ரைவை எடுக்க வரும் கும்பல் இதயம் உள்ள சமுதாய சிந்தனை சூர்யாவை ப்ரைன் டெட் ஆக்குகிறது. இருதய மாற்று அறுவை சிகிச்சை மூலம் அவரின் இதயம் ஜாலி சூர்யாவுக்கு பொறுத்தப்படுகிறது.

காஜலின் துணையோடு உக்ரைன் போய் தந்தையின் வில்லத்தனம் மொத்தமும் அறிந்து வந்து தந்தையை காலி செய்கிறார் சூர்யா…

திரைக்கதை : சுபாவின் வித்தியாச கதையை திரைக்கதை ஆக்கியிருப்பதில் முன்பாதி டபுள் சூர்யா, டிஸ்கோ பாட்டு என ஜாலியாய் போனாலும் பின்பாதி உக்ரைன் , பாலே டான்ஸ் என வித்தியாச சூழல் இருந்தாலும் திணறுகிறது. அதோடு எந்த திருப்பமும் இல்லாமல் எதிர்பார்த்த படியே நகரும் பின்பாதி இது முழு “நீள” படமோ என ஆயாசம் கொடுக்கிறது. அதுவும் உக்ரைனில் வரும் காட்சிகள் ஏதோ எய்ட்டீஸ் டாகுமென்ட்ரி பார்ப்பது போல் இருக்கிறது !

மாற்றான் பாடல்கள் : ஹே நாணி கோணி , கால் முளைத்த பூவே, இரட்டைக் கதிரே, தீயே தீயே என பல பாடல்களில் ஹாரிசின் ஆளுகை தெரிகிறது. கலக்கியிருக்கிறார். கே வி அவற்றை படமாக்கிய விதமும் சூப்பர் ! ஆனால் பின்னணிஇசையில் ஹாரிஸ் திணறுகிறார்.

ஒளிப்பதிவு : என்ன லொகேஷன்ஸ் ! என்ன காட்சியமைப்பு…. உக்ரைனில் உருள்வதாகட்டும், டோரா டோரா அடியில் ஒளிவதாகட்டும், பாடல் காட்சிகளில் பாய்வதாகட்டும்… காமெரே சூப்பரோ சூப்பர் !

நடிப்பு :

சூர்யா : சூர்யா இரட்டை ரோலில் அதுவும் ஒரே ஃப்ரேமில் மாறி மாறி முகபாவம் காட்டி அசத்துகிறார். அதுவும் பிற்பாதியில் ஜாலி சூர்யா இறந்த சகோதரனின் இதயத்துடன் உலா வருகையில் அந்த மென்மையான மாற்றத்தை மிக அழகாய் காட்டியிருக்கிறார். ஃபைட் சீனிலும் ரிஸ்க் எடுத்து கலக்கியிருக்கிறார். அந்த டோரா டோரா ஃபைட் சீன் அதிரடி வேகம் !

காஜல் அகர்வால் : அழகு பொம்மையென்று கூட சொல்ல முடியாது மெழுகு பொம்மை என்றுதான் சொல்ல வேண்டும்… அந்த அளவுக்கு ஸ்டாண்டர்டாய் நாலே நாலு எக்ஸ்பிரஷன் வைத்திருக்கிறார். மாறி மாறி கொடுக்கிறார். பாடல்களில் சிரமப்பட்டு பாலே ஆடுகிறார். மற்றபடி நடிப்பு கிடிப்பு எல்லாம் கிலோ என்ன விலை சார் தான்….

சச்சின் : பாந்த அப்பாவாகவும் கொடூர சைன்டிஸ்டாகவும் அசத்துகிறார். அலட்டல் இல்லாத வில்லன் நடிப்பு!

தாரா : ரொம்ப நாள் கழித்து தமிழில் ! அழுத்த அம்மாவாய் அழகாய் செய்திருக்கிறார் !

இயக்கம் : அயன் கோ என அடுத்தடுத்து ரெண்டு ஹிட்ஸ்… யார் கண் பட்டதோ… யானைக்கு அடி சறுக்கி விட்டது… அதுவும் துண்டுபட்ட சோவியத்துக்குள் படம் நுழையும் போது என்ன செய்வது என குழம்பி திரைக்கதையும் துண்டு துண்டாகிறது… ஒரு நாட்டு சர்வாதிகாரி மீது சூர்யா துப்பாக்கி வைக்கிறாராம். அவரும் மன்னித்து பால் பவுடருக்கு மாற்று மருந்து தருகிற சைன்டிஸ்டை பார்க்க விடுகிறாராம். யூ டூ கேவி?

பிடித்த சில டயலாக்ஸ் :

எனக்கு டயாபடீஸ் … எனக்கு லெக் பீஸ்…

உனக்கு இப்படி ஒரு தக்காளியாடா

அது அப்படித்தான் அக்கா !

ப்ளஸ் :

மாறுபட்ட சூர்யாக்கள் நடிப்பு

ஒட்டிப் பிறந்த இரட்டையர் கான்செப்ட்

ப்ரைன் டெட், இதய மாற்றம் என யோசித்து அறிவியல் நுழைத்திருப்பது !

மைனஸ் :

தொய்வான இரண்டாம் பாகம்

தெளிவில்லாமல் எதிர்பார்த்தபடியே திரைக்கதை

டாகுமென்ட்ரி போலிருக்கும் உக்ரைன் பட காட்சிகள்

பார்க்கலாமா :

நீங்கள் சூர்யா ரசிகரென்றால் ஓகே … ஆனால் அயன் எதிர்பார்ப்பை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு போங்கள் !

நீங்கள் சூர்யா ரசிகர் இல்லையென்றால்… வேண்டாம் சார் ! செகண்ட் ஹாஃப்  தாங்க மாட்டீங்க !

ஃபைனல் வர்டிக்ட் : மாற்றான் ….. ஏமாற்றினான் !

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>