மாற்றான் பாடல்கள் – விமர்சனம் – Maatraan Songs Vimarsanam
மாற்றான் பாடல்கள் என்றதுமே மனதில் ஒரு ஆவல் எட்டிப்பார்த்தது. ஹாரிஸ் ஜெயராஜ், கேவி ஆனந்த் சூர்யா காம்பினேஷன் . ஏற்கனவே அயன் படத்தில் கலக்கிய ஹாட் காம்போ. இதற்கு முன் கோ படத்திலும் ஹாரிசுடன் சேர்ந்து கேவி ஆனந்த் கலக்கியிருப்பார். ஆகவே ஆடியோ சிடியை அதிக விலை கொடுத்து தயங்காமல் வாங்கினோம்.
ஹாரிசுக்கென்று ஒரு பாணி இருக்கிறது. அதை விட்டு வருவார் என நாம் எதிர்பார்ப்பதுதான் தவறு. எனவே ஆரம்பம் முதலே ஹாரிஸ் ஹாரிஸ் தான் என்ற மன நிலையில் தான் பாடல்களை கேட்க விழைந்தோம்.
1. kaal mulaitha poove – Javed Ali , mahalakshmi Iyer
2. Yaaro Yaaro – Karthik , Priya Himesh
3. Theeye Theeye – Aaalap Raju, Charulatha Mani
4. Naani Koni Rani – Vijay Prakash , Karthik, Shreya
5. Rettai Kathire – Krish, Balaji, Mili, Sharmila
என கலக்கலான பாடல்கள்!

maatraan songs download maatraan padal varigal lyrics
கால் முளைத்த பூவே என்னோடு பாலே ஆட வா வா என மதன் கார்க்கி வரிகளில் கால் குதிக்கும் மெட்டில் அதிவேகமாய் துள்ளுகிறது பாட்டு. அப்பா வைரமுத்து போலவே மகனுக்கும் வோல்கா நதி மேல் காதல் போல! இந்தப்பாடல் நிச்சயம் டாப் டென் தான் ! சந்தேகமில்லை.
யாரோ யாரோ தாமரை வரிகளில் மாற்றானின் ஒரே சோக பாட்டு ! கார்த்திக் குரலில் வழக்கமாய் ஈர்க்கும் எமோஷன் குறைகிறது !
தீயே தீயே பாட்டுதான் மாற்றான் பாடல்களில் என்னுடைய சாய்ஸ் ! பா. விஜய் வரிகளில் குறும்பு கொப்பளிக்கிறது ! ஆலாப் ராஜுவின் குரலும் சுசித்ராவின் குரலும் ஒரு தனி மேஜிக் செய்கின்றன .
நாணி கோணி பாடல் தான் மாற்றானில் ஹாரிஸ் நமக்கு தந்திருக்கும் அதிரடி சர்ப்ரைஸ் . விஜய் பிரகாஷும் கார்த்திக்கும் குரலில் சின்க் ஆகா ஸ்ரேயா கோஷல் நடுவில் தேன் தெளிக்கிறார். விவேகாவின் வரிகளில் வேகமும் மெட்டமைப்பும் சரிவர கலக்கியிருக்கிறார்.
ரெட்டைக் கதிரே பாட்டு மாற்றான் படத்தின் டபுள் ஆக்ஷன் ட்ரீட் . இரு சூர்யாக்களும் திரையில் கலக்கும் பாட்டு என்பது இரட்டை கதிரே பாட்டின் வரிகளைக் கேட்டாலே தெரிகிறது. நா முத்துக்குமார் வரிகளும் கலக்கல். மிலி குரலில் அந்த இன்டெர்லுட் அவ்வளவு அழகு !
————————-
Music Piracy is killing Music. Though there are sites offering
free maatraan songs download ,
Always buy Original CD to Kill Piracy !
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





Please comment with your real name using good manners.