ராசிக் கற்கள்:
ஜோதிட சாஸ்த்திரத்தில் ஒன்பது கிரகங்களுக்கும் வகுத்த நவரத்தினங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
1. சூரியன்—மாணிக்கம்.
2. சந்திரன்—-முத்து.
3. செவ்வாய்—-பவழம்.
3. புதன்—-மரகதம்.
4. குரு—-புஷ்பராகம்.
6. சுக்கிரன்—-வைரம்.
7. சனி—-நீலம்.
8. ராகு—-கோமேதகம்.
9. கேது—- வைடூரியம்.
ஆனால், நாம் மேலே குறிப்பிட்ட அட்டவணைப்படி எல்லோருமே ராசிக்கற்களை அணிந்துகொள்ளலாமா என்றால், கூடாது என்றுதான் கூறவேண்டும். அஷ்டமாதிபதியை ராசிநாதனாகக் கொண்டவர்கள், ராசிப்படி கல் அணியலாமா?
உதாரணமாக விருச்சிக லக்னம் மிதுன ராசியில் மரகதத்தை மோதிரமாக் அணியலாமா? கன்னி லக்னம் மேஷ ராசியில் பிறந்த ஒருவர் பவழத்தை அணியலாமா? கூடாது.
கடக லக்னம், கடக ராசி உள்ள ஒருவருக்கு எட்டில் சனி. அவருக்கு சனி தசை ஆரம்பித்த நாலே வருடங்களில் தொழில் சரிவு ஏற்பட்டு குடும்பத்தினரும் பிரிந்து விட்டனர். கையில் நீலக் கல் மோதிரம் அணிந்திருந்த அவர் கூறியதென்னவென்றால், சனி தசை நன்மை செய்ய வேண்டும் என்பதற்காக நீலக்கல் அணியும்படி ஒரு நகைக் கடைக்காரர் கூறியதாகக் கூறினார். கேட்டதும் அதிர்ச்சி அடையாமல் வேறென்ன செய்வது?
அஷ்டமாதிபதியின் கல்லை அணியக்கூடாது என்ற அடிப்படை விஷயம்கூட அறிவுரை சொல்பவர்களிடம் இல்லை. எனவே நவரத்தினங்களில் எதை அணியலாம்; எதை அணியக்கூடாது என்பது பற்றி நமது மேலான ஜோதிட சாஸ்திரம் சொல்வதை நன்கு ஆராய்ந்து பார்த்து கீழ்க்கண்ட உண்மைகளை எடுத்து இயம்பியுள்ளோம்.
1. லக்னப்படியும் ராசிப்படியும் நல்லது செய்ய விதிக்கப்பட்டிருந்த கிரகம் வலிமை குறைந்திருந்தால், அந்தக் கிரகத்துக்குரிய கல்லை அணியலாம்.
2. 6, 8 க்குடையவர்களின் ராசிக்கல்லை கண்ணெடுத்தும் பார்க்கக்கூடாது. பாதகாதிபதியின் ராசிக்கல்லும் அப்படியே. ( பாதகாதிபதி ராசிநாதனாக வந்தாலும் அணியக்கூடாது)
3. லக்னாதிபதி வலிமை குறைந்திருந்தால், அவருடைய ராசிக்கல்லை வலதுகை மோதிர விரலில் அணிவது நல்லது. அவருக்கு ஆறு , எட்டு என மறு ஆதிபத்தியம் இருந்தால், லக்னாதிபதி இருக்கும் இடம், மற்றும் அவரது மூலத் திரிகோணாதிபத்தியம் ஆகியவற்றை வைத்து முடிவெடுக்கவேண்டும்.
4. 5,9 போன்ற யோகாதிபதிகளின் தசை நடக்கும்போது அவர்களின் ராசிக்கல்லை தாராளமாக அணியலாம்.
5. 2,11,4,7,10 பாவங்களின் அதிபதிகள் சுபராகி அவர்களின் தசை நடந்தால், அவர்கள் இருக்கும் இடத்தின்படி ஆராய்ந்து மோதிரம் அணியலாம்.
5. ராகு கேதுக்களின் தசை நடக்கும்போது அவர்கள் இருந்த ராசியின் அதிபதி , லக்ன சுபராகி அவர் வலிமை குறைந்திருந்தால், அந்த ராகு கேதுக்கள் இருக்கும் ராசிக்கு அதிபதியின் கல்லை அணியலாம்.
6. ராகு கேதுக்கள் 3,11ல் இருந்தால், மட்டுமே அவர்றின் ராசிக் கற்களை அணியலாம். அல்லது அவர்கள் லக்ன சுபரின் வேறு வீட்டில் இருந்தால் இருந்தால், அணியலாம். உதாரணமாக மிதுன லக்னத்திற்கு 12ல் ரிஷபத்தில் ராகு இருந்தால் கோமேதகம் அணியலாம்.
7. கேந்திராதிபத்திய தோஷம் பெற்ற , அதாவது கேந்திரத்தில் ஆட்சி, உச்சம் பெற்ற குருவும், புதனும், எந்த பாபர் பார்வையும் , சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருக்கும் நிலையில் அவர்களின் ரத்தினங்களை அணியக் கூடாது. {லக்னம் , கேந்திரத்துக்கும் திரிகோணத்துக்கும் பொதுவானது. லக்கினத்தில் அவர்கள் இருந்தால் தோஷம் இல்லை} .
8. மிதுன, கன்னி, ரிஷபம், துலாம் லக்னக்காரர்கள் ராசிக்கல்லை வெள்ளியில் அணியவேண்டும். மகரம், கும்பம், கடக லக்னக்காரர்கள் ராசிக்கல்லை பஞ்ச லோகத்தில் அணியலாம். தனுசு, மீனம், மேஷம், விருச்சிகம், சிம்ம லக்கினக்காரர்கள் தங்கத்தில் அணியலாம்.
9. ரத்தினங்களைக் கடையில் வாங்கி அப்படியே அணியக்கூடாது. அவற்றை அணியப் போகிறவரின் ராசி, நட்சத்திரப்படி மந்திர உருவேற்றிய பின்பே, அது மோதிரமாக அணியப்பட வேண்டும்.
இப்படியான விதிமுறைகளை ஆராய்ந்த பின்னர், தேவைப்பட்டால், உங்கள் பிறந்த ஜாதகத்துடன் குடும்ப ஜோதிடரின் ஆலோசனைகளைப் பெற்று ராசிக்கல்லை அணிந்தால், தொல்லைகள் நீங்கி நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
Tags : Lucky gemstones as per your rashi and birth , lucky stones as per rasi, ராசிக்கல், ராசி கல், லக்கி ஜெம்ஸ், ராசி, lucky stomes, lucky gems, gemmology,
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments