/* ]]> */
Nov 282010
 
பரமபதம்

விழி சோழி உருட்டுகிறாய்.. 

ஒவ்வொரு முறையும்..

வீழ்வது நானன்றோ?

 

முதல் கட்டம்..

காய் வைத்து.. 

காத்திருக்கிறேன்..  

அடுத்த கட்டம்..

ஆசைக்கட்டம்.

உயரக்கட்டம்..

உச்சக்கட்டம்.  

 

உன் புன்னகை ஏணிகள்..

என் காதல் ஆசை ஏற்றுமோ?

இல்லை அந்த மௌன சர்ப்பங்கள்..

என் வாழ்க்கையை விழுங்குமோ?  

 

நான் இலக்கை.. தொடுவதும்..

விட்டு விடுவதும்..

உன் கையில்..  

 

 

நீயோ..

படம் பார்த்து நகர்த்துகிறாய் காயை..

நானோ..

உன் முகம் பார்த்து நகர்த்துகிறேன்..  

 

 

அணி எதிரெதிரென்றாலும்..

எனக்காய் நீயும்

உனக்காய் நானும்

ஆடுவதுதான் காதலன்போ?  

 

உனக்கு புள்ளி விழுகையில்..

என் காய் நகர்கிறது..  

பக்கம் வந்து ஆடேன்..

ஒரே பக்கம் வந்து ஆடேன்..  

 

இது .. காதல் பரமபதம்..

மேலேறுதலும்..

கீழ் வீழுதலும்..

விளையாட்டாம்..  

இதில் யாதொருவர் தோற்பதுவும்..

இருவருக்குமே வெற்றியாம்..

- பிரியன்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>