/* ]]> */
Apr 292012
 

லீலை திரைவிமர்சனம் LEELAI FILM REVIEW

லீலை விமர்சனம் – லீலை சினிமா விமர்சனம் – Leelai Vimarsanam

 

கர பின்ணனியில் ஒரு ஆள் மாறாட்ட காதல் கதையை அறிமுக இயக்குனர்ஆண்ட்ரூ அழகாக சொல்ல முற்பட்டிருக்கும் படம் “லீலை” சில வருடங்கள் கிடப்பில் இருந்து விட்டு தாமதமாக வெளி வந்திருந்தாலும் கொஞ்சம் கவனிக்க வைத்திருக்கும் படம் …

கார்த்திக் ( ஷிவ் பண்டிட் )கல்லூரி காலத்தில் ஈசி கோயிங் கய் … கார்த்திக்கும் , அவன் காதலித்து கைவிடும் இரண்டு பெண்களின் ரூம் மேட் கருணை மலரும் (மானசி பரேக் ) ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளாமலேயே போனில் சண்டை போட்டுக் கொள்கிறார்கள் …
இரண்டு வருடங்கள் கழித்து இருவரும் எச்.சி.எல் லில் வேறு வேறு தளங்களில் வேலை பார்க்கும் போது எதிர்பாரா விதமாக மறுபடியும் அதே போல போனில் சண்டை வருகிறது …பின் கருணை மலரை நேரில் பார்த்தவுடன் காதல் வயப்படும் கார்த்திக் தன்னை சுந்தர் என் அறிமுகம் செய்து கொண்டு காதல் லீலையை தொடர்கிறான் … இறுதியில் இருவரும் சேர்ந்தார்களா என்பதை சற்றே நீளமாக இருந்தாலும் குழப்பாமல் சொல்லியிருக்கிறார்கள் …

ஷிவ் பண்டிட் ஐ.டி யில் வேலை பார்க்கும் இளைஞராக எளிதில் பொருந்துகிறார் … இயல்பான நடிப்பு அவருடைய ப்ளஸ்…ஆனால் அவர் நடை மட்டும் ஏனோ மலச்சிக்கல் வந்தவர் போல இருக்கிறது …

மானசி பார்த்தவுடன் காதல் வயப்படும் அளவிற்கு அழகில்லை என்றாலும் சிரிப்பாலும் , நடிப்பாலும் கவர்கிறார் … ஷிவ் பண்டிட் போல முகத்தை உம்மென்று வைத்துக்கொள்ளாமல் முக பாவங்களை காட்டி அசத்துவது இவருடைய ப்ளஸ் .ஆனால் பெரிய ஹீரோயினாக வளம் வருவதற்க்குரிய தோற்றம் இவரிடம் இல்லை …
கார்த்திக்கின் தோழி சுஜாவாக நடித்திருக்கும் சுஹாசினி ராஜ் கவனிக்க வைக்கிறார் …சந்தானத்தின் தனி காமெடி ட்ராக் படத்திற்கு பெரிதாய் உதவவில்லை … படத்தோடு இணைந்து சந்தானத்தையும் பயணம் செய்ய விட்டிருந்தால் ரசித்திருக்கலாம் …சதீஸ் சக்ரவர்த்தி இசையில் “காதல ஒரு வரம் ” , ” ஒரு துளி ” பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன … பின்னணி இசையும் ஒ.கே … படத்திற்கு தேவையான அர்பன் லுக்கை வேல்ராஜின் ஒளிப்பதிவு கொடுக்கிறது …

சிம்பிளான ஒரு காதல் கதையை ஸ்டைலாக சொல்லியிருக்கும் இயக்குனரை பாராட்டலாம் … லீட் ஆக்டர்களின் நடிப்பு , பாடல்கள் , ஷிவ் , மானசி இருவரின் கதாபாத்திரங்களையும் சில ஆரம்ப காட்சிகளிலேயே க்யுட்டாக விளக்கிய விதம் , பொறுமையாக அதே சமயம் தெளிவாக பதிய வைக்கப்படும் இருவருக்குமுண்டான காதல் இவையெல்லாம் லீலையை ரசிக்க வைக்கின்றன …
எல்லா சென்டர்களுக்கும் பொருந்தாத கதை பின்னணி , புதுமுகங்களை மையப்படுத்தியே படம் நகர்ந்து ஒரு விதமான சலிப்பை தருவது , சுவாரசியமான காட்சிகள் அதிகம் இல்லாமல் ஒரே லொக்கேஷன்களுக்குள் கதை சுற்றி வருவது இவையெல்லாம் லீலையில் நம்மை லயிக்க விடாமல் தடுக்கின்றன … பெரிய எதிர்பார்ப்பு இல்லாததாலோ என்னவோ லீலை ஏமாற்றவில்லை …
ஸ்கோர் கார்ட் :40 
tags : Movie Review of tamil movie leelai vimarsanam leelai thirai vimarsanam லீலை விமர்சனம் – Leelai Vimarsanam – Leelai Review Cinema Vimarsanam

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>