/* ]]> */
Nov 092011
 

o

  “  பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தின் வகையினானே ” என்ற நன்னூலின் கூற்றுக்கேற்ப உலகில் மாறாத ஒன்று மாற்றம் மட்டுமே … இதை மற்றவர்களுக்கு எளிதில் சொல்லி விடலாம் , ஆனால் நமக்கு வரும் போது தான் அதன் உண்மையான வலியும் , அர்த்தமும் புரியும் …

தொலைபேசியின் வருகைக்கு பிறகு மக்கள் தபால்துறையை எப்படி மறக்கிறார்கள் என்பதை தெளிவாக உணர்த்தும் தேசிய விருது பெற்ற குறும்படமே “ போஸ்ட்மேன் ” … அந்த ஊரே அவனை வெறும் போஸ்ட்மேனாக பார்க்காமல் நண்பனாக , உறவினனாக பார்ப்பதில் மூர்த்திக்கு ரொம்ப பெருமை …

எவராலும் எளிதில் தாங்கிக்கொள்ள முடியாதது தான் நேசிப்பவர்களால் உதாசீனப்படுத்தப்படுவது … இந்த சோகத்தை வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் விசுவலாக விளக்கியதில் இயக்குனர் ஒரு படி மேலே நிற்கிறார் … போஸ்ட்மேனை கண்டுகொள்ளாமல் ஆளாளுக்கு தொலைபேசியில் பிஸியாக இருப்பது ஒரு நல்ல உதாரணம் …

திரைப்படத்திக்குண்டான காதல் , சென்டிமென்ட் , சோகம் , காமெடி  இதையெல்லாம் அழகாக இந்த குறும்படத்தில் புகுத்தியதே இயக்குனரின் சாமர்த்தியம் … பாட்டிக்காக பேரன் எழுவது போல மூர்த்தி எழுதும் கடிதங்கள் க்யூட் ஹைக்கூ …

ஹீரோவாக வரும் இஸ்வரின் முகம் தமிழுக்கு கொஞ்சம் அன்னியமாக இருந்தாலும் முக பாவங்கள் நன்றாக இருக்கின்றன … தீனா காதல் காட்சிகளில் இசைஞானியின் பாடலை உபயோகப்படுத்தியிருந்தாலும் கிளைமாக்ஸ் உட்பட பின்னணி இசையில் மனதை வருடுகிறார் … மற்றொரு முக்கியமான அம்சம் அபிநந்த ராமானுஜத்தின் ஒளிப்பதிவு … ஆற்றுப்படுகையில் போஸ்ட்மேன் சைக்கிள் ஒட்டிக்கொண்டு வருவது கண்கொள்ளா காட்சி …

படத்தை பார்த்து முடித்தவுடன் சின்ன வயதில் தீபாவளி , பொங்கலுக்கு நமக்கு வரும் வாழ்த்து அட்டைகளுக்காக வழி மேல் விழி வைத்து காத்துக்கிடந்த நாட்கள் கண்முன் வந்து போவதை யாரும் தவிர்க்க முடியாது …

இயக்கம் : மனோகர்

தயாரிப்பு : எல்.வி.பிரசாத் அகாடமி

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>