/* ]]> */
Oct 312011
 

குமிழ்வீட்டின் திறவுகோல் – ராகவன்

மழைநீரினால் ஆன
ஒரு குமிழ்வீட்டில்
திண்மையுற அமைந்திருக்கிறது
நட்சத்திரங்கள் பதித்த கதவொன்று
திறப்பதற்கான எந்தக்
குறிச்சொற்களும் காணப்படவில்லை
குமிழ்வீட்டின் சுவர்களில்
சித்திரங்கள் பலவர்ணங்களில்
வரையப்பட்டிருக்கிறது
சுவர்களெங்கும்
அத்தனை வசீகரமில்லை
வர்ணங்களில்
குளிர்தப்பிய வார்த்தைகள்
எரிந்ததில்
ஒரு பார்வை மட்டும் மிஞ்சி
கடந்து வந்து கொண்டிருக்கிறது
தான் நோக்குற்ற ரகசியத்தின்
திறவுகோலை ஏந்தியபடி..

..ராகவன்..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>