/* ]]> */
Dec 052011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: பச்சமலப் பூவு நீ உச்சி மலத் தேனு

படம் : கிழக்கு வாசல் (1990)

பாடியவர் : எஸ். பி. பி

இசை : இளையராஜா

பாடலாசிரியர் : உதயகுமார் (?)

இயக்குநரின் அழகியல் ரசனையின் உச்சம் . ரேவதியின் அலங்காரம் , தீபங்களால் ஒளியேற்றப்பட்டிருக்கும் முற்றத்தின் அழகு ..இப்படி .

ஊஞ்சலில் ஆடுவது போல் பெரும்பாலும் பெண்களைத் தான் காட்டுகிறார்கள் . இளஞ்சிறார்களைத் தவிர வளர்ந்த ஆண்களுக்கு ஊஞ்சல் ஆடுவது அத்தனை ஒன்றும் பிடித்தமானது இல்லை போலும். தானே காலை உந்தி, தன் போக்கை நிர்ணயித்துக்கொள்ளும் தாகம் இப்படியாவது நிறைவேறுகின்றது  தான்  ஆசை கொள்ளச்செய்கிறது ஊஞ்சல் ஆடுவதில் பெண்களை . விண்ணில் ஏறிப் பறக்க வேண்டும் என்ற மோகமும் இப்படித்தீரும்  தானே !

ஒரு தாலாட்டுக்கு உரிய மெட்டு . எளிமையான ,உள்ளம் கவரும் பாடல் வரிகள் . பள்ளி நாட்களெனும் ஆலங்கட்டித்துளிகளைப் பொத்தி வைத்திருக்கும் மன அடுக்கின் பெருமரக் கிளைகள், இம்மாதிரியான பாடல்களின் மென்காற்றில் ,சிலிர்த்து ,சொட்டுச்சொட்டாய் இதயம் நிரப்பும் இதம் ம்ம்ம்…

பச்ச மலப் பூவு நீ உச்சி மலததேனு

குத்தம் கொற ஏது நீ நந்தவனத்தேரு

அழகே பொன்னு மணி சிரிச்சா வெள்ளி மணி

கிளியே கண்ணுறங்கு தூரி தூரி ஹோய்

பச்ச மலப் பூவு …

காத்தோடு மலராட கார்குழல் ஆட

காதோரம் லோலாக்கு சங்கதி பாட (2)

மஞ்சளோ தேகம் கொஞ்ச வரும் மேகம்

அஞ்சுகம் தூங்க கொண்டு வரும் ராகம்

நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்

குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன் ஹோய்

பச்ச மலப் பூவு ..

பூநாத்து மொகம் பாத்து வெண்ணிலா நாண

தாளாம தடம் பாத்து வந்த வழி போக

சித்திரத்துச் சோல முத்துமணி மால

மொத்தத்துல தாரேன் குத்தமென்ன மானே

வண்ணமா வானவில்லில் நூலெடுத்து வாரேன்

விண்ணுல மீண் புடிச்சு சேல தச்சுத் தாரேன் ஹோய்

பச்ச மலப் பூவு ..

ஆங்கிலத்தில் பாடல் வரிகள் :

pachcha malap poovu nee uchchi malath thaenu
kuththangora aedhu nee nandavanath thaeru
azhagae ponnumani sirichchaa vellimani
kiliyae kannurangu dhoori dhoori hoay

(pachcha mala)

kaaththoadu malaraada kaarkuzhalaada
kaadhoaram loalaakku sangadhi paada
manjaloe dhaegam konjavarum maegam
anjugam thoonga konduvarum raagam
nilava vaan nilava naan pudichchu vaaraen
kuyilae poonguyilae paatteduththuth thaaraen hoay

(pachcha mala)

moonaakku mogam paarththu vennilaa naana
thaalaama thadampaaththu vandavazhi poaga
siththiraththuch choala muththumani maala
moththathula thaaraen dhukkamenna maanae
vannamaa vaanavillil nooleduththu vaaraen
vinnila meen pudichchu saela thechchuth thaaraen hoi

(pachcha mala)

தொகுப்பு

..ஷஹி..

tags

கார்த்திக் , ரேவதி , பச்ச மலப் பூவு , கிழக்கு வாசல் , இளையராஜா , உதயகுமார் , எஸ். பி. பி , எஸ். பி. பாலசுப்ரமணியம், பச்ச மலப் பூவு பாடல் வரிகள், பச்ச மலப் பூவு விடியோ , கிழக்கு வாசல் படப் பாடல்கள் ,காலைப் பனியும் கொஞ்சம் இசையும் ,சுகராகம், கார்த்திக் பாடல்கள், ரேவதி பாடல்கள்

karthick, karthik, revathy , kizakku vasal, kizaku vasal songs, ilaiyaraja, uthayakumar , s. p. b, S. P. Balasubramaniyam, pacha mala poovu , pacha mala poovu song lyrics, sugaragam ,karthik songs, revathy songs, kalaip paniyum konjam isaiyum

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>