/* ]]> */
Nov 092011
 

மன உறுதி, தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தின் மொத்த பிறப்பிடமான உலகத்தின் வெற்றிகரமான, தலைசிறந்த இந்திய தொழில் முனைவோர் கிரன்மஜும்தர் ஷா ஆவார். இந்தியாவின் பணக்கார பெண்மணிகளில் இவரும் ஒருவர் ஆவார். இவர் 1953 ஆம் வருடம் பெங்களூரில் மார்ச் மாதம் 23ந்தேதி பிறந்தார்

இவர் தனது பள்ளி படிப்பை பிஷப் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்1968ம் வருடம் முடித்தார். பிறகு மருத்துவ படிப்பை படிக்க நினைத்தார்.ஏனோ அவர் கவனம் உயிரியல் பாடத்தில் சென்று பி.எஸ்.சி ஜுவாலஜி ஹானர்ஸ் படிப்பை மவுண்ட் காராமல் கல்லூரியில் பெங்களூரு பல்கலைகழகத்தில் 1973ம் வருடம் முடித்தார். பிறகு தனது பட்டமேற்படிப்பை மால்டிங் மற்றும் புரூவிங் கல்வியை பல்லாரத் கல்லூரி மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் 1975ம் ஆண்டு முடித்தார்.மெல்போனிலும், ஆஸ்ட்ரேலியாவிலும் சிறிது காலம் பயிற்சி எடுத்துக்கொண்டார், பிறகு தொழில்நுட்ப ஆலோசகராகவும், தொழில்நுட்ப மேலாளராகவும் கொல்கத்தா மற்றும் பரோடாவிலும் சிறிது காலம் பணியாற்றினார்1978ம் வருடம் பயோடெக் கம்பெனியில் பயிற்சி மேலாளர் பதவியை தனது 25ம் வயதில் ஐயர்லாண்டில் பதவிஏற்றார். பிறகு அதே வருடம் பயோடெக் கம்பெனியை 10,000 மூலதனத்தில் தன் வீட்டின் வண்டிகள் நிறுத்தும் இடத்தில்(garage) தொடங்கினார்.
.
70′ல் யாருக்கும் பயோகான் நிறுவனத்தை பற்றி அறிந்திருக்க நியாயமில்லை.
ஆரம்பத்தில் இவர் பல சோதனைகளை எதிர்கொண்டார். இவர் எதிபார்த்துபோல் அவ்வளவு சுலபமாக வங்கிகள் கடன் கொடுக்க முன் வரவில்லை. இவர் பெண் என்பதாலும், சிறு வயது, அனுபவமின்மை என்பதாலும், சோதிக்கப்படாத வணிக மாதிரி என்பதாலும் பல இன்னல்களை சந்தித்தார். ஆரம்பகட்டத்தில் திறமையான மக்களை பணி அமர்த்துவதர்க்கும் சிறமபட்டார். தடையில்லா மின்சாரம், சுகாதாரமான தண்ணீர்.நுண்ணியிரற்ற ஆய்வகங்கள், இறக்குமதி ஆராய்ச்சி உபகரணங்களும்,மேம்பட்ட அறிவியல் திறன்கள் ஆகியவை அரிதான காலகட்டத்தில் தன் கடின உழைப்பால் ஆரம்பித்த ஒரே வருடத்தில் ஐக்கிய அமெரிக்கா,ஐரோப்பா உற்பத்தி மற்றும் ஏற்றுமதி,  செய்யும் இந்தியாவின்முதல் தர கம்பெனி என்று பெய்ர் பெற்றது.புத்திசாலியின் பாதையில் தடைக்கல்லும் படிக்கல்லே என்பது போல், பல இன்னல்களை கடந்து, விடா முயற்சியுடனும், தன்னம்பிக்கையுடனும் அயராது உழைத்து சிகரத்தை எட்டிவிட்டார் நமது கிரன்மஜும்தர் அவர்கள்
நீரழிவு ஆராய்ச்சி மையம், நோய் கட்டிகளின் ஆய்வு,(cancer) தன்னுடல் தாக்கு நோய்(autoimmune disease) ஆகிய வற்றிற்க்கு ம்ருந்துகளும், ஆய்வு கூடங்களும் இந்த பயோகான் நிறுவனத்தில் அடங்கும்.
சமூகத்தில் பொருளாதாரத்தில் நலிந்தபிரிவினர்களின் நலனுக்காக கல்வி,சுகாதாரம், சுற்றுசூழல் ஆகியவற்றிர்காக பயோகான் அறக்கட்டளையை 2004 ம் ஆண்டு தொடங்கினார். 70 ஆயிரம் பேர் நுண் சுகாதார திட்டத்தின் கீழ் சேர்ந்து பயன் பெருகின்றனர்.
அவர் 2007 ஆம் ஆண்டு பெங்களூரில் பூம்மாசந்திரா எனும் இடத்தில் நாராயணா ஹெல்த் சிட்டி வளாகத்தில், நாராயணா ஹிருதயலாவின் டாக்டர் தேவி ஷெட்டியுடன் இணைந்து 1400 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையம் நிருவ உதவினார், அதற்க்கு மஜும்தர் ஷா புற்று நோய் மையம்(MSCC) என்றும் பெயரிட்டார்.இது ஐந்து லட்சம் பரப்பளவில் அமைந்த மிக பெரிய புற்று நோய்க்கான மருத்துவ மையம் ஆகும். இங்கு கழுத்து மற்றும் தலை புற்று நோய்க்கும், மார்பக புற்று நோய்க்கும், கர்பப்பை புற்று நோய்க்கும் சிறந்த சிகிச்சை மையமாகும்.
இவரது முன்னோடியான பணியால், கெளரவமிக்க விருதுகளான 1989ஆம் வருடம் பத்மஸ்ரீ விருதையும், 2005 ஆம் வருடம் பத்மபூஷன் விருதையும் இந்திய அரசாங்கத்தால் இவருக்கு வழங்கப்ப்ட்டது. உலகின் செல்வாக்கான 100 மக்களில் இவரும் ஒருவர் என்று பிரபல டைம் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும் இவர் உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்மணிகளில் ஒருவர் என்று போர்பஸ் பத்திரிக்கையும், முதல் 50 வணிக பெண்மணிகளில் இவரும் ஒருவர் என்று பைனான்சியல் டைம்ஸ் பத்திரிக்கை கொளரவப்ப்டுத்தியுள்ளது.இவர் இந்த விருதுகளல்லாமல் மற்றும் பல எண்ணில் அடங்கா விருதுகளையும் பெற்றுள்ளார்.
பெண் இனத்திற்க்கே பெருமை சேர்க்கும் வகையில் விடாமுயற்ச்சியுடனும், தைரியத்துடனும் போராடி வெற்றியின் சிகரத்தை எட்டியுள்ள நம் கிரன்மஜும்தர் ஷா அவர்களை மென்மேலும் விருதுகளை பெற வாழ்த்துவோம்.
..மாதங்கி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>