/* ]]> */
Aug 152011
 

தந்தையால் விற்கப்பட்டு ஒரே நாளில் ஒன்பது பேருடன் -

கேரளா செக்ஸ் கொடுமை

கேரளா பரவூர் செக்ஸ் வழக்கில் இன்னும் பல அதிர்சிகர உண்மைகள் வெளியாகியுள்ளன. பரவூர் செக்ஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வாக்குமூலம் கேரள போலீசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. சமுதாயத்தில் இன்னும் பெண்கள் எப்படி அடிமைகள் போல நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இந்த வழக்கு ஒரு உதாரணம்.

கேரள செக்ஸ் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் ( பெண்ணின் நலன் கருதி பெயர் வெளியிடவில்லை) ஒரு அடிமையைப் போல தன் தந்தையாலேயே ஒரு ஏஜண்டிடம் பேரம் பேசி ஒரு லட்சத்திற்கு விற்கப்பட்டிருக்கிறாள். இத்தனைக்கும் அவளுக்கு அப்போது பதினாலு வயதுதான். பள்ளி செல்லும் சிறுமி அவள். அவளை “உடம்பு சரியில்லை” என வுகுப்பசிரியையிடம் சொல்லி தந்தையே லீவு வாங்கி விடுவார். பின்னர் முதன் முதலில் அவள் தந்தையும் அந்த ஏஜண்டும் 2010ம் ஆண்டு எர்ணாகுளத்தில் ஒரு ஹோட்டலுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு தேடுவது என்ற பெயரில் கூட்டிக் கொண்டு போனார்கள். ஆனால் அங்கே நடந்ததோ வேறு. அங்கே அந்த பள்ளிச் சிறுமி முதன் முதலில் கற்பிழக்கப்படடாள். இதற்கு பிறகு பணத்தாச பிடித்த அந்த மிருகம் ( அவள் தந்தை) அவளை அடிக்கடி பள்ளிக்கு லீவு போட வைத்தான். ஹோட்டலகளுக்கும் சில பணக்கார ஃப்ளாட்டுகளுக்கும் கூட்டிப் போவதே அவன் வேலை. கஸ்டமர்களிடம் கிட்டத்தட்ட ஒரு அடிமை போல அவர்கள் முன்னால் இந்தப் பெண் நிர்வாணமாய் நிறுத்தப்பட்டு ” சின்ன பொண்ணு; இது தான் முதல் தடவை” என்றெல்லாம் சொல்லி ஏதோ பண்டத்துக்கு விலை நிர்ணயிப்பதைப் போல அவள் விலை நிர்ணயம் செய்யப்படும்.

கடந்தாரா, பளைவட்டோம், தம்மணம், மூணாறு, திருச்சூர், கண்ணூர் என கேரளாவில் சுற்றிய அவள் தந்தை மெல்ல மெல்ல பெங்களூரு, மைசூரு, ஊட்டி, சென்னை என பக்கத்து மாநிலத்திற்கும் மகளை கூட்டிக் கொண்டு போனான். இப்படித்தான் மூணாறில் ஒரு முறை மூன்று கல்லூரி மாணவர்கள் அவளை கற்பழித்தார்கள். ஒரு முறை ஒரு பட இயக்குநர் அவளை மிருகத்தை விட மோசமாய் நடத்தினார். பதினான்கு வயதில் ஒரே நாளில் ஒன்பது காம் வெறி பிடித்தவர்கள் அந்த சிறுமியை சூறையாடிய சம்பவமும் நடந்திருக்கிறது.

இந்த உண்மைகள் கேரளாவில் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அதிர்வு அலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த கேரள செக்ஸ் வழக்கின் பின்னணியில் உள்ள பெரும் பெருச்சாளிகளை கேரள் போலீஸ் தோண்டித் துருவமா என பொறுத்துத்தான் பார்க்க வேண்டும்.

நாடு 65வது சுதந்திர தினம் கொண்டாடுவது இருக்கட்டும் . இன்னமும் அடிமைகள் போல காமவெறி பிடித்த மிருகங்கள் கையில் பந்தாடப்படும் இந்த பெண்களின் அவல நிலையான “ட்ராஃபிக்கிங்க்” எப்போது நிறுத்தப்படும்?

tags : the real truth behind the kerala paravoor sex scandal about a 14 year old schoolgirl forced into prostitution by her father and sold for money and indulged in sex racket.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>