/* ]]> */
Nov 292011
 

தமன்னா

1. தமன்னா, தப்ஸி ஆறு வித்தியாசம்? – ananthu – pesalamblogalam.blogspot.com

தமன்னா மராத்தி மல்கோவா

தப்சி பஞ்சாபி பால்கோவா

தமன்னா அகலம் கம்மி உயரம் அதிகம்

தப்சி அகலம் அதிகம் உயரம் கம்மி

டப்சி

தமன்னா வியாபாரியில் கவர்ச்சியாய் அறிமுகமாகி பின் வேங்கையில் தாவணி கட்டியவர்!

தப்சி ஆடுகளத்தில் அடக்க ஒடுக்கமாய் அறிமுகமாகி இப்போது கவர்ச்சி புயலாய் கலக்குபவர்!

தமன்னாவால் நடிக்க முடியும் !

தப்சியால் அழகாய் சிரிக்க மட்டுமே முடியும் !

தமன்னாவுக்கு தெலுங்கைவிட தமிழ் தான் ஃபோகஸ்

தப்சிக்கு மனவாடே மஞ்சி காரு !

அஞ்சு ஆச்சுங்களா !

ஆறாவது வித்தியாசம்…

ஒருவர் தொலைகாட்சி  குழுமத்தின் அழகு பெட்டகம்

இன்னொருவர் ஆந்திர ஹீரோ ஒருவரின் அந்தரங்க தோழி

எது யார் யாரென்பது ரகசியம் !

2. பிளாட்டினம் விலை ஏறிக் கொண்டே இருக்கிறதே , என்ன காரணம்? ரமா கார்த்திக், ஆலந்துர்

மொதல்ல பால் விலை ஏறினதுக்கு காரணம் சொல்லிட்டு அப்புறம் இதுக்கு காரணம் சொல்லு என்கிறார் மிஸ்டர் பொதுஜனம் !

3.மொதல்ல  கோழி வந்துச்சா இல்லை முட்டை வந்துச்சா ? – B.Ravi, ஈரோடு

போன தபாவும் இதே கேள்வி கேட்டுக்குனியே நைனா ! ஒரு டைப்பா பதில் சொன்னாததான் உடுவியா ? சொல்றேன் கேட்டுக்கோ…

மொதல்ல கோழி வந்துச்சு

அப்புறம் சேவல் வந்துச்சு

அப்புறம் தான் முட்டை வந்துச்சு ஹி ஹி !

beauty queen

4. அழகிப்போட்டிகளால் லாபம் அதிகம் அழகிகளுக்கா? விளம்பர கம்பெனிகளுக்கா? – ராணி கிருஷ்ணன், சென்னை

விளம்பர கம்பெனிகளுக்குத்தான் ! ( அழகிங்க மேல தப்பே சொல்ல மாட்டேனாக்கும் !)

5. எந்த மாதிரி பொண்ணுங்கள ஆண்களுக்குப் பிடிக்கும்? – வித்யா பாஸ்கர், சென்னை

அது நீங்க எந்த மாதிரி ஆண்களுக்கு கேக்குறீங்கங்கறத பொறுத்து இருக்கு…  !

6.  பெண்ணியம்? shahi - asainila.blogspot.com

போற்றப்பட வேண்டியது ! அது பெண்ணாதிக்கமாய் மாறாத வரை !

நகை

7. நம்ம பொண்ணுங்க கொஞ்சம் கம்மியா நகை போட்டா என்ன? – பிரசன்னா, பெங்களூரு

இத நான் ஆதரிக்கறேனுங்க ! நகையின்னு இல்லங்க ! பொண்ணுங்க என்ன கம்மியா போட்டாலும் நான் ஆதரிப்பேனுங்க !

8. ஆற்றில் பம்ப் செட்டில் நீச்சல் அடித்தது உண்டா ? – abhi – abhiyumnanum.blogspot.com

ஆஹா .. அது ஒரு கிராமத்து நயாகரா. பலமுறை விடுமுறைகளில் அந்த பம்பு செட்டுக் குளியலுக்காகவே பல மைல் சைக்கிள் மிதித்திருக்கிறேன் !

9. இப்போ கலைஞர் எப்படி இருக்காரு? – ஆரூரான், கோலாலம்பூர்

தேர்தலில் ஃபெயிலானாலும் பெயிலால் சந்தோஷப்படுபவர் !

இட்லி

10. இட்லி தேங்காய் சட்னி, இட்லி சாம்பார்- பெஸ்ட் காம்போ எது? – செந்தம்ழ்செல்வி, திருப்பதி

இட்லி சாப்பிட்டுக்கிட்டே பேசலாமா? அந்த மொளகாப் பொடி கொஞ்சம் போடுறீங்களா?

—————————————————————————-

 கேள்வி கேட்கும் நண்பர்கள் கேள்விகளை moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு அனுப்பவும் . ப்ளாக் நடத்தும் அன்பர்கள் தங்கள் ப்ளாக் முகவரியுடன் அனுப்பினால் பெயருடன் உங்கள் ப்ளாக்கிற்கும் லிங்க் தரப்படும் !

tags : கேள்வி பதில்கள், சோழன் பதில்கள், கேள்வி, பதில், அரசு பதில்கள், மதன் பதில்கள்,  kelvi padhil, kelvi pathil, kelvi pathil,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>