/* ]]> */
Mar 082012
 

அழகன் நீ
என்ற என் ஒற்றை வார்த்தையில்
துவங்கியது
ஒரு காதலுக்கான ஆரம்பம்
பேச நினைக்கும் சொற்களை
வெட்கம் மறைக்க,
என் சிரிப்பொலி வந்து நிறைக்கிறது
உனக்கும் எனக்குமான இடைவெளியை
ஆசையில் நடுங்கும்
இதயத்தின் ஓசை புலனாவதில்
சிதறுவதை எல்லாம் பொறுக்கி வைத்துக் கொள்கிறாய்
இனி அவற்றைக் கோர்த்து
கவிதை செய்வாய்
ஆதிக் காதலனும் காதலியுமாய்
நீயும் நானும் மாறுகையில்
இடையில் நானில்லை
என்று வெட்கம் இடறி ஓடும்
அந்தக் கணத்தை எதிர்நோக்கி
நிகழ்பொழுதை என் மன இடுக்கில்
வைத்து நசுக்குகிறேன்
காதல் எனக்குள்ளிருந்தும்
ஒரு கவிதையென கசிகிறது …

 

..ஷஹி..

 

tags

love , lovers, love poem , tamil love poem, love poetry , kavithai , kathal kavithai , tamil kathal kavithai

காதல் , காதலர் , காதல் கவிதை , கவிதை

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>