( pic crtsy – markmeynell.wordpress.com )
ஹஜ்ஜினாலாம் பொலிந்த
முகத்திலொரு புன்னகையோடு,
பெயரனுக்குப் பெண் பார்க்க எனையும் அழைத்துச் சென்றாள் மாமி
சேலை சிக்க நடந்த பெண்ணின்
பதின்பருவ முகத்தில்
பாலாய் வழிந்ததென்ன
அச்சமா நாணமா?
உடனிருந்தவள் சொல்ல
ஓதின விபரமும்
சன்னமான சலாமில்
பேசுவாள் என்பதும்
தெளிய..
மிக்கவும் இனிப்பான
மக்கத்து பேரீட்சையோடு
கடுங்கசப்பில் வார்த்தைகள்
கொட்டி நீட்டினாள் மாமி
கண் நிறைக்கும் அழகிக்கும்
சபை நிறக்க நகை
தட்சிணை ஹராம்
சீருக்கான மாதங்கள்
அலுவா, ரமலான்
மஹருத்தொகைக்கென்ன ?
மாப்பிள்ளை மனம் போல
பெண்ணுக்கு அதிலே
பேச்சுக்கென்ன வேலை ?
பரிமாறப்பட்ட உணவு பற்றின அவளின் “ஹலால் தானா?” விசாரிப்பில் பொறுமை சிதறி நொடித்தது பெண்ணுக்கு நன்னியின் முகம்
“சுறாமீன் கருவாடு மக்ரூஹூ
அந்த சாத்துல மட்டும் கொஞ்சம் இறுத்து ஊத்து”
வெட்கம் வழிந்த பெண்ணின் முகத்தில்
வன்மம் வழியக் கண்டு
ஆடியின் முன் நின்றேனோவென
அதிர்ந்தேன் ஒரு கணம்
என் முகமாய்த் திரும்பின அந்த இருள் பொழுது நொடி முதலாய்
பொலிந்திருந்த முகத்தில்
கவிந்த குப்ரைக் கழுவ
ஜம்ஜம்மைக் கொஞ்சமும்
மாமி
தேடுகிறாளே இல்லை !
..ஷஹி..
tags
poem , poetry , tamil poetry , tamil poem , kavithai , muslim woman , muslim women , muslim , islam , haj , mahar
கவிதை , தமிழ் கவிதை , இஸ்லாம் , முஸ்லிம் , இஸ்லாமியப் பெண் , மஹர் , ஹஜ்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments