/* ]]> */
Mar 152012
 

  கவர்ச்சியாக நடிக்க அப்பா அம்மாவிடம்

பர்மிஷன் வாங்கும் நடிகை

வித்யா பாலன் vidya balan

வித்யா பாலன் vidya balan

 சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையைப் படமாக்கிய இந்திப் படம் டர்டி பிக்சர் படத்துக்காக அவார்டு வாங்கிய வித்யாபாலன் தத்ரூபமாக கவர்ச்சிகரமாக நடித்திருக்கிறார். நடிகையைப் முன்னிலைப்படுத்தி எடுத்த முதல்  ஹிந்திப் படம் இது. இந்தப்படம் சூப்பர் ஹிட்டாகவும் ஆனது. இந்தப்படம் வந்ததும், வித்யாபாலனின் மார்க்கெட் எகிறிவிட்டதாம். எப்போதெல்லாம் கவர்ச்சியாக நடிக்கிறாரோ அப்போது அதைத் தெரிவித்து தன் பெற்றோரிடம் பர்மிஷன் வாங்கிவிடும் பழக்கம் வித்யாபாலனுக்கு உண்டாம். இந்தப் படத்துக்கும் அது நடந்ததாம்.

பெரிய இடத்துப் பிள்ளை தயாரிக்கும் ’கண்ணாடி’ படம் இன்னும் முடிவடையவில்லையாம். இன்னும் ஒரு பாடல் படமாக்கப்படவேண்டும். அதற்குள் ஏகப்பட்ட வழக்குகளும் பிரச்சினைகளும்  போதும் போதும்  என்றாகிவிட்டதாம். பெப்ஸி பிரச்சினை வேறு. எப்படி முடிக்கப்போறோம் என்று கையைப் பிசைகிறாராம், பெரிய வீட்டுப் பிள்ளை.

‘தல’  நடிக்கும் ‘டான்’ பட ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடக்கிறதாம். ஷூட்டிங் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பெப்ஸி தொழிலாளர்கள் அமைப்பிலிருந்து குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்களாம். அரை நாள் படப்பிடிப்போடு முடித்துக்கொண்டு ஷூட்டிங் பார்ட்டி கிளம்பிவிட்டதாம். ஆனால், சில தொழிலாளர்கள், ‘ஆரம்ப காலத்தில் தொழிலாள்ர்களுக்காக குரல் கொடுத்த மாஸ் ஹீரோவுக்கே இப்படிப் பண்ணலாமா என அங்கலாய்த்தபடியே அங்கிருந்து நகர்ந்தார்களாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>