/* ]]> */
Nov 152011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் :ஒரு வானவில் போலே

படம் : காற்றினிலே வரும் கீதம்(1978)

இசை: இளையராஜா

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி,

பாடலாசிரியர்: கண்ணதாசன்

எத்தனை பிடித்த பாடல்கள் இருந்தாலும் சதா மனதின் ஆழத்தில் நம் ஆன்மா பாடிக்கொண்டேயிருக்குமே ஒவ்வொருவருக்கும் அவர்களின் விருப்பப் பாடலை..எனக்கானது இது தான். ஒரு காதலை, விருப்பத்தை, ஏக்கத்தை இதை விட அழகாக வேறெந்தப் பாடலும் சொல்லிவிடவில்லை. கவியரசு என்ற பட்டம் ஏன் பார்த்தாயா ? என்று இறுமாப்புடன் மார் தட்டுக்கின்றாரே கண்ணதாசன்.

“கலைமானின் உள்ளம் கலையாமல்

களிக்கின்ற கலைஞன் எங்கே”

இந்த வரிகளில் தொனிக்கும் லயமும் அழகும் ,பெண் உள்ளத்தின் ஆசையை எத்தனை இலைமறை காய்மறையாக சொல்கிறார் ஆசிரியர்..வாவ்! இசையும் தான் மனதை வருடும் பூங்காற்றாக, தென்றலாக இதம். நடிகை கவிதா என்று நினைக்கிறேன்..உடையும் முகபாவமும் செயற்கை என்றாலும் நம் செவிகள் அனுபவிக்கும் சுகத்தில் கண்கள் தானாகக் கிறங்கி இமை தாழ்த்திக்கொள்கின்றன..ம்ம்..ஒரு வானவில் போலே…

ஒரு வானவில் போலே என் வாழ்விலே வந்தாய்

உன் பார்வையால் எனை வென்றாய்

என் உயிரிலே நீ கலந்தாய்

வளர் கூந்தலின் மணம் சுகம் இதமாகத்தூங்க வா

வனராணியின் இதழ்களில் புது ராகம் பாடவா

மடிகொண்ட தேனை மனம் கொள்ள

வருகின்ற முல்லை இங்கே

கலைமானின் உள்ளம் கலையாமல்

களிக்கின்ற கலைஞன் எங்கே

கலைகள் நீ கலைஞன் நான் கவிதைகள் பாடவா

ஒரு வானவில்…

உனக்காகவே கனிந்தது மலைத்தோட்ட மாதுளை

உனக்காகவே மலர்ந்தது கலைக்கோவில் மல்லிகை

இனிக்கின்ற காலம் தொடராதோ

இனியெந்தன் உள்ளம் உனது

களிக்கின்ற சொந்தம் வளராதோ

இனியெந்தன் வாழ்வும் உனது

தொடர்கவே வளர்கவே இது ஒரு காவியம்

ஒருவானவில் போலே..

ஆங்கிலத்தில்:

oru vaanavil poalae en vaazhvilae vandhaay
un paarvaiyaal enai venraay en uyirilae nee kalandhaay

(oru vaanavil)

valar koondhalin manam sugam idhamaagath thoondavaa
vana raaniyin idhazhgalil pudhu raagam paadavaa
madikonda thaenai manam kolla varuginra mullai ingae
kalaimaanin ullam kalaiyaamal kalikkinra kalaignan
engae
kalaigal nee kalaignan naan kavidhaigal paadavaa

(oru vaanavil)

unakkaagavae kanindhadhu malaiththoatta maadhulai
unakkaagavae malarndhadhu kalaik koavil malligai
inikkinra kaalam thodaraadhoa iniyendhan ullam unadhu
kalikkinra sondham valaraadhoa iniyendhan vaazhvum
unadhu
thodargavae valargavae idhu oru kaaviyam

(oru vaanavil)

தொகுப்பு

..ஷஹி…

காற்றினிலே வரும் காதம், ஒரு வானவில் போலே, முத்துராமன், கவிதா, கண்ணதாசன், இளையராஜா, சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி, காதல் பாடல்கள், பாடல் வரிகள், விடியோ

katrinile varum geetham, oru vanavil pole, muthuraman, kavitha, kannadhasan, ilaiyaraja, sugaragam,kalaippaniyum kojam isaiyum, jeyachandran, s.janaki, love songs, song lyrics, tamil song lyrics, video


ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>