கிருஷ்ண உத்சவத்தின் ஐந்தாம் நாளான இன்று இந்திய நடனங்களில் கிருஷ்ணர் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.
கலைமாமணி சைலஜா, கார்திக் ஃபைன் ஆர்ட்ஸ்சின் காரியதரசி சேகர், பரதநாட்டிய கலைஞர் நந்தினி ரமணி, மற்றும் குருபாய் ஸ்ரீ ஸ்ரீஹரி பிரசாத் அவர்கள்
மூன்று நாட்டிய கலைமாமணிகள் இக்கருத்தரங்கில் பங்குகொண்டனர். பேராசிரியர் கலைமாமணி சைலஜாவின் தலைப்பு கிருஷ்ணருக்கு அர்பணம். இவர் பரதநாட்டிய மற்றும் குச்சுபுடி நடனங்களில் முப்பது ஆண்டுகளாக வெற்றிகரமான கலைஞராகவும், ஆசிரியராகவும், நடன இயக்குநராகவும் பணியாற்றிவருகிறார். இவர் குச்சுபுடி நடனத்தை தன் மாணவர்களுடன் பரதநாட்டியத்திற்க்கும், குச்சுபுடிக்கும் உள்ள வித்யாசத்தை கூறி, பாலகோபாலன் என்று தொடங்கும் பாடலுக்கு அபினயம் பிடித்து, பாலகிருஷ்ணனின் லீலைகளை நடித்துகாட்டினார்.
கலைமாமணி சைலஜா
இரண்டாவதாக அபினயம் பிடித்தவர் கலைமாமணி ஸ்ரீமதி கோபிகாவர்மா. அவருக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பு மோகினி ஆட்டத்தில் கிருஷ்ண தரிசனம். பரதநாட்டியத்தின் முதற்கடவுள் நடராஜர் என்றும், மோகினி ஆட்டமும், மணிபுரியும் வைஷ்ணவத்தை வலியுருத்தும் என்று கூறி கண்ணன்- ராதா காதலை, கண்ணன்- சுதாமவின் நட்பையும், முழு சரணாகதிக்கு கஜேந்திரமோட்சத்தின் கதையை அபினயம் பிடித்தும், குருசேத்திர போரில் அர்சுனனுக்கு சேவகனாக சேவை செய்ததற்கு அர்சுனனின் பக்தியும்.குருவாயூர் உன்னி கிருஷ்ணன் உருவான கதையையும் அபினயம் பிடித்தார். ஜெகதோ தாரண, கருணை செய்வாய் பாடலுக்கும், கிருஷ்ணனின் லீலைகளை பாடி அபினயம் பிடித்து, தன் முக பாவங்களால்
வெளிப்படுத்தினார்.
கலைமாமணி கோபிகாவர்மா
மூன்றாவதாக அபிநயம் பிடித்தவர் கலைமாமணி ஸ்ரீகலா பரத். இவருக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பு கிருஷ்ணரின் வாழ்க்கையில் பெண்கள். தேவகி, யசோதை கோபியர்களின் தூய அன்பும், அவர்களுடன் ஆடும் கோலாட்டமும், ஸ்ரீஆண்டாள் பகவான் கிருஷ்ணனின் மேல் உள்ள பக்தி, துரௌபதியின் பக்தி,மீராவின் பக்தி, சத்யபாமா, ருக்மினியின் அன்பும் பக்தியும் அபிநயம் பிடித்து மிக அழகாக நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தார் .
கலைமாமணி ஸ்ரீகலா பரத்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments







Please comment with your real name using good manners.