காலை வணக்கம்
இன்றைய பாடல்: நாதம் என் ஜீவனே
படம்: காதல் ஓவியம்
இசை: இளையராஜா
பாடியவர்: எஸ். ஜானகி
ஒப்பனை அதிகமற்ற (தேவையற்ற) ராதா குளக்கரையில் துவைத்துக் காயப்போட்டது நாயகனின் துணிகளோடு பலப்பல இளம் உள்ளங்களையும் தான்..ம்ம்ம்..
மழையெனப் பெய்யும் இசையும் ,மென் காமமும் சில்லென்று நனைக்கிது நமை…ஆரத்தழுவும் காதலின் இதத்தில் குளிரும் காதல், போர்வையும் காதல், கதகதப்பும் காதலே…இளங்காலையில் கேட்டு விட்டால் விரல் பற்றிக்கொள்ளும் தோழியைப் போல் நாளெல்லாம் நம்மோடே வரும் கீதம்..நாதம் என் ஜீவனே..
நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே
உந்தன் ராஜராகம் பாடும் நேரம் பாறை பாலூறுதே
ஓ பூவும் ஆளானதே (2)
அமுத கானம் நீ தரும் நேரம்
நதிகள் ஜதிகள் பாடுமே
விலகிப் போனால் எனது சலங்கை
விதவையாகிப் போகுமே
கண்களில் மௌனமோ கோவில் தீபமே
ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே
மார் மீது பூவாகி விழவா விழியாகி விடவா
நாதம் என் ஜீவனே…
இசையை அருந்தும் சாதகப் பறவை
போல நானும் வாழ்கிறேன்
உறக்கம் இல்லை எனினும் கண்ணில்
கனவு சுமந்து போகிறேன் .
தேவதை பாதையில் பூவின் ஊர்வலம்
நீயதில் போவதால் ஏதோ ஞாபகம்
வென்னீரில் நீராடும் கமலம்
விலகாது விரகம்
நாதம் என் ஜீவனே…
தொகுப்பு
..ஷஹி..
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments