கருணாநிதி ஸ்டாலின் யார் தலைவர்? பொதுக்குழு போர்

stalin karunanidhi dmk pothukuzhu
பொதுக்குழுவில் நடந்த போட்டிச் சண்டைகளைப் பார்த்து கலைஞர் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். “ஒரு தலைவர் இருக்கும்போதே தலைவர் பதவிக்குப் போட்டியா? யாரிடமும் பிச்சயெடுத்து தலைவர் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்க நான் தயாராயில்லை. வேண்டுமானால், வாக்குப்பதிவு நடத்தட்டும். நான் அந்த தேர்தலையும் எதிர்கொள்வேன்”. என்றார். “ வேண்டுமானல், அவரையே ( ஸ்டாலினையே) கட்சியை நடத்திக்கச் சொல்லுங்க.” என்று மூத்த தலைவர்களிடம் கூறினாராம். கூட்டம் முடிந்து காரில் ஏறப்kபோனவரை உதவிசெய்யும்பொருட்டு கையைப் பிடிக்கப்போன ஸ்டாலினை உதறி விட்டாராம், கலைஞர். அதைப் பார்த்த ஸ்டாலின் ஆதரவாளர்கள் அப்செட்டாம். “ 50 வயதிக்குள்ளேயே தலைவருக்கு தலைவர் பதவி கிடைத்து விட்டது. ஆனால், 60 வயதானாலும் எனக்கு அது கிடைக்காது போலிருக்கு” என்று நொந்து போய் , “எனக்கு எந்த பதவியும் தேவையில்லை இப்போது இருக்கும் பதவியையும் கொடுத்து விடுகிறேன் ” என்று சொன்னாராம், ஸ்டாலின்.
ஆட்சியாளர்கள் மாறினால், கட்டடங்களும் பூங்காக்களும் மாறும்தானே? உ.பி.யும் அதற்கு விதிவிலக்கல்ல. “ நான் பதவியேற்றால், மாயாவதி கட்டிய பூங்காக்களையும், நினைவு மண்டபங்களையும் மாற்றி, மருத்துவ மனைகளையும், பள்ளிகளையும் நிறுவுவேன்” என்கிறார், முலாயம்.
இதோ வந்து விட்டார், இன்னுமொரு வாரிசு. உ.பி.யில் பிரச்சாரத்துக்குப் போன ராபர்ட் வதேரா, “மக்கள் விரும்பினால் நான் அரசியலுக்கு வருவேன்” என்று கூறினார். இதை தீர்மானமாக தன்னுடைய பேட்டியில் மறுத்தார், பிரியங்கா. “ பத்திரிக்கையாளர்கள் ஏதாவது கேள்வி கேட்டு குழப்பியிருப்பார்கள். மற்றபடி, ராபர்ட்டுக்கு, பிஸினஸில்தான் ஈடுபாடு. அரசியலுக்கு வரமாட்டார்.” என்றார்.








சமீபத்திய பின்னூட்டங்கள்