/* ]]> */
Jan 252012
 
kanimozhi  கனிமொழி

kanimozhi கனிமொழி

 கனிமொழிக்கு கட்சியில் ஒரு முக்கியப் பதவியைப் பெற்று விட வேண்டும் என்பதில் ராஜாத்தி அம்மாள் மிகவும் பிடிவாதமாக இருக்கிறார். ஆனால், குடும்பத்தில் தயாளு அம்மாள்,  ஸ்டாலின், அழகிரி  மற்றும் செல்வி ஆகியோர் கனிமொழிக்குப் பதவி தரப்படுவதை கடுமையாக எதிர்க்கிறார்கள். இப்போது கனிமொழிக்கு இருக்கும் ‘கலைஞர்  முத்தமிழ்ப் பேரவை’ அமைப்பாளர் பதவியே போதும் என்பது குடும்பத்தினரின் வாதம். இது தவிர வீரபாண்டி ஆறுமுகம் மற்ற சீனியர் தலைவர்களுடன் சேர்ந்து .குடும்ப அரசியலை  பொதுக் குழுவில் எதிர்க்கப்போகிறார்களாம்.  இப்படி எழுகின்ற எதிர்ப்புகளைப் பார்த்த   ராஜாத்தி அம்மாள அன்பழகனின்  ‘பாசறை’ அறிவுப்புகளையும்  பார்த்து சலித்துப் போய், அன்பழகனைப் போனில் பிடித்து புலம்பித் தள்ளினாராம். அன்பழகனோ ” இவங்க குடும்ப மேட்டரில் என் தலையையும் உருட்டுறாங்க. இந்தப் பொதுக் குழுவோடு ஒதுங்கிக்கலாம்ன்னு பார்த்தா, தலைவர் விடமாட்டேங்குறார்.” என்று மற்ற சீனியர் தலைவர்களிடம் நொந்து போனாராம்.

ஆனால் கனிமொழியை ஆதரிக்கும் அணிகளும் இருக்கின்றன. கனிமொழியை சந்திக்கும் நாடார் அமைப்புகள் தங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவிப்பதோடு, அத்துடன், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி, கன்னியாகுமரி அல்லது திருநெல்வேலி முதலிய தொகுதிகளுள் ஏதாவது ஒரு தொகுதியில்  கனிமொழி போட்டியிடவேண்டும் என்று தெரிவிப்பார்களாம். அது தவிர தலித் அணியும் கனிமொழியை ஆதரிக்கிறதாம். அந்த தலித் அணிக்கு , ஸ்டாலினை கடுமையாக எதிர்க்கும், பரிதியை தலைமை தாங்க வைப்பார்களாம். இந்த அணி ‘கனிமொழி அணி’ என்று இருக்குமாம். ஆனால் கட்சி அளவில் யாருமே கனிமொழியை பதவியில் அமர்த்துவதை விரும்பவில்லையாம்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>