/* ]]> */
Aug 302011
 

கனவு பலன் – தலையில் எண்ணை வைக்கும் கனவு

கனவு பலன்

இது ஒரு சகோதரி moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பி வைத்த மெயில்:

வணக்கம் sir ,
என்னுடைய கனவில் நானும் என் சகோதரனும் தலைல் எண்ணெய் வைத்து ஏதோ  பரிகாரம் செய்வதற்காக ஏதோ ஒரு இடத்திற்கு குடும்பத்தோடு செல்கிறோம்  சிறிது நேரத்தில் அந்த எடம் ஈடுகாடக இருக்கிறது வரிசையில் நிற்கிறோம் அப்பொழுது என் மாமா தலை ஈல் எண்ணை வைத்து பிறகே  உள்ளே போகவேண்டும் என்று கூறுகிறார். நாங்கள் தயாராக இருகிறோம் ஆனால் அதோடு என் கனவு முடிந்து விட்டது. இக் கனவினால் ஏதேனும் கெட்ட நிகழ்வுகள் நடக்குமா ?

கனவின் பலன் :

இந்த மெயிலில் நான் சொல்லியபடி இந்த சகோதரி தன்னைப் பற்றிய வயது, குடும்ப உறுப்பினர்கள், படிப்பு என எந்த பின்னணியும் குறிப்பிடவில்லை. இருந்தாலும் கனவு கிட்டத்தட்ட டிபிகல் ஃப்ராய்ட் கனவுகளின் அடிப்படையில் அமைவதால் இதற்கு பலனை இங்கே அளித்திருக்கிறேன்……

சகோதரி…

இந்த கனவு உங்களுக்கு உணர்த்துவது என்னவென்றால் , உங்கள் குடும்பத்தைப் பற்றி உங்கள் குடும்பத்தாரைப் பற்றி ஏதோ ஒரு பயம் உங்கள் மனதை ஆட்டிப் படைக்கிறது. முக்கியமாக குடும்பத்தில் யாராவது வயதானவர்கள் இருந்தால் அவர்கள் உடல்நிலை உங்கள் முக்கிய கவலையாக இருக்கிறது. அப்படி யாரேனும் இருந்தால் அவர்களை அன்புடன் அனுசரணையுடன் பார்த்துக் கொள்ளுங்கள்.

தலையில் எண்ணை வைப்பது என்பது ஒரு சம்பிரதாயம்.. சனி நீராடுதல் என இதற்கு ஒரு பெயரே உண்டு. எண்ணை தேய்த்து குளித்தல் என்பது நீங்கள் வளர்ந்த முறையைப் பொறுத்த வரை தன்னைத் தானே புனிதப் படுத்திக் கொள்ளுதல். ஆக, உங்கள் சகோதரனோடு நீங்கள் எண்ணை தேய்த்து குளிப்பது என்பது நீங்களும் உங்கள் ஆல்டர் ஈகோவும் சேர்ந்து புனிதப்படுத்திக் கொள்ளுதல். ஆல்டர் ஈகோ என்பது கிட்டத்தட்ட மனசாட்சி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆக, ஏதோ ஒரு குற்ற உணர்வு உங்களை வாட்டுகிறது, குறிப்பாக , கனவில் மாமா வந்து மீண்டும் குளிக்க சொல்வதால் , நிச்சயம் நீங்கள் அந்த குற்ற உணர்வால் தவிப்பதையே காட்டுகிறது. நீங்கள் எண்ணை குளித்தும் கூட மாமா மீண்டும் குளிக்க சொல்வது என்பது, குற்ற உணர்வு நீங்கள் உண்மையால செய்த குற்றத்தினால் அல்ல… அது நீங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு நீங்கள் இல்லாததால் ஏற்படும் ஒரு பிரயாசம். இதைத்தான் ஆங்கிலத்தில் seeking perfection என்பார்கள். கனவில் இடுகாடு வருவதைப் பற்றி கவலைப் படத் தேவையில்லை. பொதுவாகவே கனவுகளில் இடுகாடு வந்தால் அது நன்மைக்கே ! இடுகாடும் ஒரு பழம் பரம்பரை நினைவே ! ஆகவே , இது மீண்டும் உங்கள் கவலைகள் உங்கள் குடுமப்த்தைப் பற்றியே என காட்டுகிறது! இடுகாடு வந்ததால் ஏதோ நிலம் / வீடு சம்பந்தப்பட்ட பிரச்சினை உங்களை யோசிக்க வைக்கிறது கவலை கொள்ள வைக்கிறது என காட்டுகிறது. இடுகாடு பொதுவாகவே நன்மையே குறிப்பதால் தொலைந்த சொத்துக்கள் திரும்ப கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது !

நீங்கள் செய்ய வேண்டியது :

குடும்பத்தாருடன் மனசு விட்டு பேசுங்கள் ! அவர்களைப் பற்றி உங்கள் கவலைகளை / பயங்களை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் ! முக்கியமாய், குடும்பத்தாருடன் அதிக நேரம் செலவிடுங்கள் ! உங்கள் கனவு உங்களிடம் சொல்லியது அது தான் ! எல்லாம் சுபமாகவே முடியும் !

தவறாமல் உங்கள் ஃபீட் பேக்கை moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள் !

[stextbox id="info"]

அபி எழுதிய “கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி ? ” இப்போது இ-புக் வடிவில்….

பேபால் ( Paypal) மூலம் வாங்க :
இபே ( Ebay) மூலம் வாங்க :

கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி? @ Ebay

[/stextbox]

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>