குரங்குகள் தாக்கும் கனவு பலன் – கனவின் அர்த்தங்கள் – அபி
Dear sir,
One week muthal naan oru kanavu kanden. Enoda work panura 2 ladies ennoda work mudichutu waraga. Elorum ona bus vanthom. Bus stand avanga weraya poitaga. Naan matum thaniya oru kadiku naduwe nandu waren. Antha katula niraya kurankuhal irrukuthu. Naan payathukonde odi waren. Antha kuankuhal enna palangalala (fruits) adikuthu. Naan odi wanthuten. Piragu naan oru palathukitta varen. Antha palam moodi iruku. Malai peiuthu. Naan malaila nananchukitte engenko poitu oru wetuku waren. Anga nirayaper irukaga. But ahula enoda sithy matumthan enaku ninaivil iruku. Entha kanavin artham enna?
அன்பு தோழி,
இந்த கனவிற்கு ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கின்றன..கனவின் முதல் இரு வரிகளிலிருந்தே உங்கள் அலுவலகம் சம்பந்தப்பட்ட ஏதோ பிரச்சினை உங்களை வாட்டுகிறது என தெரிகிறது. தனிமைப் படுத்தப்பட்டு விட்டோமா என்ற பயமே உங்கள் மனதில் பிரதானமாக இருக்கிறது. ஆகவே, அது கனவிலும் பிரதிபலிக்கிறது.
குரங்குகள் தாக்குவதைப் பொறுத்தவரையில், அவை உங்களை கனிகளைக் கொண்டு தாக்குவது ஒரு விநோதம். குரங்குகள் கற்களால் தாக்குவது போல் வராமல் , அவை கனிகளால் தாக்குகின்றன. அப்படியென்றால், உங்களூக்கு வரக் கூடிய ஆபத்து, வெளிப்படையாக வராமல், ஏதோ ஒரு நன்மை போல வருகிறது. அலுவலகம் சம்பந்தப்பட்ட எந்தக் காரியத்தையும் சற்று ஜாக்கிரதையாக கையாளுங்கள். மாற்றலோ, பிரமோஷனோ, புது வேலை வாய்ப்போ, எதுவாக இருந்தாலும் வருகிற மூன்று மாத காலம் ஏற்க வேண்டாம். அது நன்மை தருகிற மாதிரி வெளிப்படையாக இருந்தாலும் ஏதேனும் ஒரு ஆபத்து உள்ளிருக்கும்.
அடுத்ததாக நடக்கும் நிகழ்வு மழை. மழை வந்தது குரக்குகள் ஆபத்து விலகுகிறது. மழை என்பது வளத்தை குறிக்கும்.ஆகவே, உங்களுக்கு பொருளாதார ரீதியாக ஒரு நன்மை ஏற்பட போகிறது.
பிறகு நீங்கள் ஏதோ ஒரு வீட்டிற்குள் நுழைகிறீர்கள். அதில் சித்தி இருக்கிறார். இதன் மூலம் இந்த பொருளாதார நன்மை உங்களை விட உங்கள் குடும்பத்தினருக்குத்தான் அதிக பயன் தரப் போகிறது என தெரிகிறது.
ஆகவே வருகிற சில மாதங்களில் அலுவலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். ஒரு எதிர்பாரா பண வரவு காத்திருக்கிறது!
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments