/* ]]> */
Nov 022012
 
snake-dream kanavu palan tamil கனவு பலன்

பாம்பு கடித்து இறக்கும் கனவு பலன் – கனவின் பலன்கள் – kanavu palan

 பாம்பு கடித்து இறப்பது போல் வரும் கனவின் பலன் அறிய அனைவருமே ஆவலாயிருப்பீர்கள்… ஆனால் இதில் சங்கடம் என்னவென்றால் இது போன்ற கனவுகளை முழுமையாக சூழ்நிலை பாராமல் ஆராய்ந்து வெறுமனே பாம்பு கடித்து இறந்தால் இன்ன பலன் என சொல்ல முடியாது. இது போன்ற கனவுகளின் பலன் கனவுகளையும் கனவு காணும் மனிதர்களைப் பொறுத்தும் மாறுபடும்…

சமீபத்தில் ஒரு வாசகி அனுப்பிய கனவு இது…

snake-dream kanavu palan tamil கனவு பலன்

snake-dream kanavu palan tamil கனவு பலன்

எனக்கு இன்று காலை ஒன்பது மணிக்கு ஒரு கனவு நான் என் சித்தப்பாவுடன் நடந்து செல்கிறேன் அங்கு அவரை பாம்பு கழுத்தை சுற்றி தோளில் கடித்தது நான் அந்த பாம்பை கையில் பிடித்து போட முயன்ற போது அது என்னை வலது கையில் வளையல் போடும் இடத்தில் கூர்மையான பற்களுடன் என்னை கொத்தியது இரண்டு இரண்டு என ஆறு பதிவுகள் கையில் உடனே துணியை கட்டி நீண்டதுரம் நடந்து வந்தேன் அங்கே ஒரு விசேஷம் நடை பொறுகிறது நானும் என் சித்தப்பாவும் வந்தோம் எங்களுக்கு நடந்ததை கூறுவதற்குள் அவர்கள் நாங்கள் விசெத்திர்க்கு வந்தவர்கள் என் கவனிக்க தட்டு தடுமாறி சொன்னேன் என்னக்கும் சித்தப்பாவுக்கும் பாம்பு கடித்துவிட்டது என உடனே பக்கத்து தெருவில் சாமியார் அதாவது சித்த வைத்தியர் சித்தப்பா அங்கே இருந்துவிட்டார் அவருக்கு உடலெல்லாம் விஷம் எனக்கு கையில் என்னை அந்த சாமியாரிடம் அழைத்து சென்றது என் அண்ணன் அங்கு அவர் என்னை மந்திரம் சொல்ல சொல்லி கையில் சாதத்தை கொடுத்து பிடித்து வைக்க சொன்னார் நானும் செய்தேன் அந்த சாதம் வைலெட் நிறத்தில் மாறியது அவர் நான் பிழைக்க மாட்டேன் என்றார் நான் உடனே மருந்து கொடுக்காமல் எப்படி சொன்னீங்க என்றேன் அவர் உடனே என்னை படுக்க வைத்து மூலிகைகளை தடவினார் கைசியில் எல்லா நகைகளையும் கலட்ட சொல்ல நான் தாலியை மட்டும் கலட்டவில்லை பின்பு என் கண்களை மருந்தால் மூடவே என் கண்களை மூடவேண்டாம் என் அம்மாவை பாக்கணும் என்றேன் கடைசி வரை என் அம்மாவை பார்க்காமலே இறந்தேன் . ஆனால் என் சித்தப்பாவை அவர்கள் மருத்துவமனிக்கு அழைத்து சென்று காப்பாற்றினார்கள் . இதற்கான பலன் என்ன எனக்கு கவலை யாக இருக்கிறது பதில் அளிக்கவும்

கனவின் பலன் :

அன்பு ___________,

முதற்கண் கவலை கொள்ள வேண்டாம்… நீங்கள் இறந்தது போல் வந்த இந்தக் கனவின் மூலம் உங்கள் ஆயுளுக்கு எந்த ஆபத்தும் இல்லை. இப்போது உங்கள் கனவுகளை கொஞ்சம் விலாவாரியாக அலசலாம்…
பாம்பு கடிக்கும் கனவுகள் பொதுவாகவே ஒரு இனம்புரியா பயத்தையே உணர்த்தும்.. இந்தக் கனவில் நீங்களும் உங்கள் சித்தப்பாவும் இணைந்து போகையில் இருவரையுமே பாம்பு கடிக்கிறது.. இங்கே தான் உங்கள் கனவு மற்றவர் கனவை விட வித்தியாசப்படுகிறது. பொதுவாக ஒருவர் கனவு காண்கையில் பாம்பு தன்னைக் கடிப்பது போல் வரும். இல்லையேல் பாம்பு தன் கூட இருப்பவரை கடிப்பது போல் வரும்.. இருவரையுமே கடிப்பது போல் வருவது அபூர்வம்.. ஏன் என சற்றே ஆரய்ந்தால்.. உங்களுக்கு குடும்ப ஈடுபாடு அதிகம்.. உங்களைப் பற்றி அதிகம் கவலைப்பாடாமல் சதா குடும்பத்தைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பவர் நீங்கள்… அடுத்து இந்தக் கனவில் முக்கியம் பாம்பு எங்கு கடிக்கிறது என்பது… பாம்பு உங்கள் கையில் கடிப்பதாக குறிப்பிட்டுள்ளீர்கள்…அதுவும் வளையல் போடும் இடத்தி… வளையல் என்றாலே அது மாங்கல்யம் சம்பந்தப்பட்டது தானே… அதிலும் ஆறு பதிவுகள் என்பது வரை கனவில் தெளிவாக பார்த்திருக்கிறீர்கள்,,,உங்களுக்கு திருமணம் ஆனதா என நீங்கள் குறிப்பிடவில்லை… ஆனால் திருமணம் ஆகியிருந்தால் உங்கள் கணவர் பண விஷயம் சம்பந்தமாக கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் இது..
அடுத்த அம்சம் சித்த வைத்தியர் மந்திரம் சொல்லச் சொல்லி கையில் சாதம் கொடுப்பது சாதம் வைலட்டாக மாறுவது. இதன் மூலம் என்ன பலன் என்றால்… உங்கள் மனதில் உள்ள குழப்பத்திற்கு தீர்வு உங்கள் கையிலே தான் இருக்கிறது ஆனால் அது கை நழுவி போய் விடுமோ என நீங்கள் கவலை கொண்டிருக்கிறீர்கள் ! கவலை கொள்ள வேண்டாம். மனதில் உள்ள அவநம்பிக்கைகளை தூக்கி தூர வீசுங்கள் ! நம்பிக்கையுடன் செயல்படுங்கள் ! துன்பம் விலகும்!
இறுதியில் இறப்பது என்பது சுற்றி நடக்கும் பிரச்சினைகளில் உங்களால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற உங்கள் கவலைதான் ! ஆகவே அதைப்பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டாம் ! அம்மாவை பார்க்காமலே இறப்பது என்பது ஒரு குறியீடு… உங்களுக்கு வர வேண்டிய சொத்தை யாரோ தட்டிப் பறித்து விட்டார்கள் அல்லது பறிக்கப் போகிறார்கள் என்பதே ! இதைப்பற்றி நீங்கள் அதிகம் கவலை கொள்ள வேண்டும்… காரணம் அது தவிர்க்க முடியாதது… !
உங்கள் கனவு பலன் வேண்டுமென்றால் உங்களை பற்றிய குறிப்பு , வயது , படிப்பு, குடும்ப பின்னணி ஆகியவற்றையும் உங்கள் கனவையும்  moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு மெயில் செய்யுங்கள் ! 
மேலும் உங்கள் கனவின் பலன்களை நீங்களே அறீந்து கொள்ள
http://goo.gl/dwwpaE

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>