/* ]]> */
Feb 272012
 

கனவு பலன் -

உடைந்த மோதிரம் அறுந்த பட்டம்

கனவின் பலன்

dream interpretation in tamil, tamil dreams, kanavu palan, kanavin palan, கனவு பலன்,

kanavu palan

வாசகி நமக்கு அனுப்பிய கடிதம் :
கணம் ஆசிரியர் அவர்கட்கு,

எனது மோதிர கல்லை கழற்றி ஒருவரிடம் காட்டுகிறேன் பிறகு அந்த கல்லை இடுக்கி கொண்டு திரவம் ஒன்றில் கழுவுகிறேன் அது நீர் போல தான் உள்ளது கழுவி எடுக்கும் போது அந்த கல் உடைகிறது முழுவதுமாக உடைய வில்லை இருந்தாலும் அது ஓரளவு உடைந்து கிடக்கிறது.

நான் வணங்கிய கோவில் ஒன்று கற்பகிரகமும் ஒரு பரிவார மூர்த்தியும் பாழ் அடைந்து கிடக்க கனவு கண்டேன், நன்றாக பறந்த பட்டம் ஒன்று கீழே வந்து குத்தவும் பிறகு நான் அதை கையில் எடுத்துவிட்டேன் பழுது அடையவில்லை ஆனால் என் கையில் வந்ததும் அதன் நிறம் சிவப்பாக மாறியது முனைய நிறம் வெள்ளையும் நீலமும் கலந்த கட்டம் போட்ட பட்டம், ஒரே மனசு சஞ்சலமாக உள்ளது வலது கண்ணும் துடிக்கிறது, ஒரே பயமாக உள்ளது தயவு செய்து எனக்கு பதில் விரைவில் தருவீர்களா நான் என பரிகாரம் செய்ய வேண்டும்.
அன்பு வாசகி,

உங்கள் கனவுக்கு பலன் :

சிறது மன சஞ்சலமான நேரம் இது உங்களுக்கு. மன அழுத்தம், மன சஞ்சலம் எல்லாம் மாறி மாறி உங்களை வாட்டுகிறது. எங்கே போனாலும் ஒரு பாதுகாப்பின்மை மன நிலை     (  feeling of insecurity)  வந்து விடுகிறது. இது தான் உங்கள் கனவின் வழியே பிரதிபலித்திருக்கிறது.
கனவில் அறுந்த பட்டம் கையில் கிடைப்பது ஏதோ ஒரு கடந்த கால நிகழ்வு மீண்டும் உங்களை வந்து பாதிக்கக்கூடிய சாத்தியக்கூற்றை உணர்த்துகிறது. மேலும் அது கையில் கிடைத்ததும் ரத்த நிறமாக மாறுவது உங்கள் குற்ற உணர்வை பிரதிபலிக்கிறது.
மோதிரக் கல்லைப் பொறுத்தவரை கனவு சிம்பாலிசமும் இந்திய கலாசாரத்தையும் சேர்த்துப் பார்க்கையில் இந்தக் கனவு திருமணம் சம்பந்தப்பட்ட உறவைக் குறிப்பதாகவே படுகிறது. மோதிரம் உடைவது என்பது திருமணம் சம்பந்தப்பட்ட உங்கள் கவலைகளை வெளிக்காட்டுகிறது. திரவம் என்பது கண்ணீர் என்றும் கொள்ளலாம். நிறைய அழுதிருக்கிறீர்கள் என நினைக்கிறேன்…

பரிகாரம் :

இந்தக் கனவைப் பொறுத்தவரையில் கொஞ்சம் ஆபத்தைக் குறிக்கும் கனவுதான். ஆகவே நீங்கள் உடனே கடவுள் நம்பிக்கை இருந்தால் உங்கள் இஷ்ட தெய்வத்தை நேரில் சென்று தரிசித்து வந்தால் ஓரளவு மன சஞ்சலம் விலகும். போகையில் குடும்பத்தாருடன் ( திருமண உறவுடன் ) செல்வது நலம். மேலும் ஒரு புண்ணிய காரியம் செய்து உங்கள் குற்ற உணர்வை போக்கிக் கொள்ளுங்கள். ஏதோ ஒரு நன்கொடை அல்லது இல்லாதவர்களுக்கு உதவி என உங்களால் முடிந்ததை செய்யுங்கள் ! அதோடு இந்தக் கால கட்டத்தில் கொஞ்சம் முன் ஜாக்கிரதை உணர்வோடு நடந்து கொள்ளுங்கள். தியானம் மாதிரி மனதை அமைதி படுத்தும் பயிற்சி செய்யுங்கள் !
இவற்றை கூடிய விரைவில் செய்தால் நல்லதே நடக்கும் !
- அபி

உங்கள் கனவுக்கு பலன் வேண்டும் என நினைத்தால் உங்களைப் பற்றியும் கனவு பற்றியும் விபரங்களுடன்  moonramkonam@gmail.com  என்ற முகவரிக்கு எழுதுங்கள் !

tags : கனவு பலன், கனவு பலன்கள், kanavu palangal, kanavu palan, kanavin palan, மோதிரம்,அறுந்த பட்டம்,

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  7 Responses to “கனவு பலன் – உடைந்த மோதிரம் அறுந்த பட்டம் கனவின் பலன்”

 1. konja naalagave adikadi thaneer kanavu varugirathu. neeril azhivathupol. itharku artham solumaru ketkiren.

 2. 5head snake en kanavarai kottumpadi avar kanavil varugiratu, itarkku enne artam

 3. Hi,

  Enaku lion yatho oru animal sapdura mathium nan atha pagathula erunthu pagura mathiyam & neraya singam paduthu erukura mathium dreams varuthu adan artham puriyavillai

 4. oru nal en kanavil nan kovilil swami kumubukiran poojari tiruneeru prasadam kail kodukum pozdhu tiurneerudun vinayagar, paramasivan, narayan vigragam en kail vandu vilugiradhu itharku ena palan.
  En father 2012 passed away adan piragu adikadi en kanvil varukirar adan artham puriyavillai

 5. en kanavil thalai vaarum bothu mudi kaththaiyaga aruvathu pol varukirathu..ithu pol 3 thadavai kanduviten..ithan palan ena?

 6. kanavil kodu & mukkuthi kalati mattuvadu pol kanavu vanthal enna palal

 7. for me dreams comes like i was given birth to child
  is there any specific palan for that? if so please help me to clear it

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>