கனவு பலன்
கணவனுக்கு திருமணம் ஆவது போல் கனவு பலன்
இது ஒரு வாசகி moonramkonam@gmail.com என்ற முகவரிக்கு அனுப்பிய மெயில்.
———————————————————————————————————————-
வணக்கம் …
எனது பெயர் ——— ..எனக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடம் ஆகிவிட்டது . நேற்று இரவு என் கனவில் என் கணவருக்கு வேறு ஒரு பொண்ணு கூட திருமணம் நடப்பது போல கனவு கண்டேன்.எனக்கு நிம்மதியே இல்ல.என்ன காரணம்அப்படி கனவு வருவதற்கு? ப்ளீஸ் பதில் அனுப்புங்க!
———————————————————————————————————————-
இது மாதிரி கனவுகள் எல்லாமே ஃப்ராய்டியன் பதிவுகளின் படி ஒரு வகை இன்செக்யூரிடி ஃபீலிங்க் தான் . சுய நம்பிக்கையின்மையே இந்த வகை கனவுகளில் பிரதிபலிக்கிறது. உடனே, வாசகியின் கணவர் இன்னொரு திருமணம் செய்து கொள்வார் என பயப்பட வேண்டாம். உங்கள் இன்செல்யூரிடி ஃபீலிங்க் இவ்வாறு வெளிப்பட்டிருக்கிறது. அவ்வளவே !
ஆனால் இந்த கனவுகளின் அடிக்கோடிட்ட சில தகவல்கள் என்ன? இப்போது நாம் பார்ப்போம்…
முதலில் ஏன் கணவர் ஏன் இந்தக் கனவில் வர வேண்டும்?
காரணம் , வாசகியின் மனதில் கணவரைப் பற்றிய அன்பு அதிகம் இருக்கின்றது. வாசகி தன் உலகமே கணவன் தான் என நமபியிருக்கிறார். வாசகி தனக்கு குழந்தை இருக்கிறதா என குறிப்பிடவில்லை. ஆனால், நாம் யூகிப்பது என்னவென்றால், குழந்தை இன்னும் பிறக்காமலிருக்கலாம். அந்தக் கவலை கூட இப்படி கனவின் வழி பிரதிபலித்திருக்கலாம்.
ஆக, ஒரு குழந்தை பிறந்தால் வாசகியின் ஒப்சசிவ் லவ் ( obsessive love) கணவன் மேலிருந்து கொஞ்சம் குழந்தை வழியும் ஓடினால், ஒரு வகை பேலன்ஸ் கிடைக்கும். நிம்மதியில்லை என குறிப்பிட்டிருக்கிறார். வாசகி, கணவனுடன் அதிக நேரம் செலவிடுவதில்லை என நினைக்கிறேன். வாசகியின் கணவன் மனைவியிடம் அதிக நேரம் செலவழித்து அன்பாக பேசி மனைவியின் இன்செக்யூரிடி ஃபீலிங்க்சை களைந்திட வேண்டும்.
அடுத்தது நாம் பார்க்க வேண்டியது, கணவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறாள் என்று… அந்த வேறொரு பெண்ணின் முகம் கனவில் தெரிந்ததா? அது தெரிந்த பெண்ணா? போன்ற விவரங்களை வாசகி தெரிவிக்கவில்லை. ஆனால், நாம் அனுமானித்ததில் இருந்து அந்த வேறொரு பெண் ஒரு முகமறியா பிம்பமாகத்தான் கனவில் வந்திருக்க வேண்டும். ஆகவே, இது வாசகி தன் வாழ்க்கையில் வரக்கூடிய ஆபத்துக்களைத்தான் இந்த பெண்ணின் வடிவில் உருவகித்திருக்கிறார். ஆகவே வாசகி, ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய காலம் இது. குறிப்பாக , பேச்சில் நிதானம் கடைபிடிக்க வேண்டும். உறவு முறை விவரங்களில் கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக பழக வேண்டும். இதுதான் இந்த பெண்ணின் பிம்பம் சிம்பாலிக்காக சொல்வது.
அடுத்ததாக கனவில் வந்த சம்பவம் – திருமணம். ஏன் திருமணம் கனவில் வந்திருக்கிறது ? திருமணம் உறவு முறைகளை சிம்பாலிக்காக குறிக்கும் ஒரு நிகழ்வு. அது கனவில் வந்ததன் மூலம் வாசகியின் கவலை ஆழ்மன ஏக்கங்கள் உறவு முறைகளைப் பற்றியது என தெரிகிறது.
வாசகி வேறெந்த விவரமும் குறிப்பிடவில்லை. வயது, படிப்பு போன்ற விவரங்களை குறிப்பிடவில்லை. இது போன்ற கனவு பலனகளை கேட்கும் வாசகர்கள் கூடுதல் விவரங்கள் அளித்தால் இன்னும் துல்லியமாக பலன்கள் கூறலாம்.ஆயினும் கொடுத்த விவரங்களை வைத்து நம்முடைய பலன்களஒ தொகுத்துள்ளோம்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments





kanavil coconut niraiya vandal,keeraigal,jasmine vandal kalyana kolathil marriagr anavanga lady vandal enna palan
en kanavil singam/puli ennai thurathiyadu. nanum odi oligirean meandum varugiradhu piragu adhu ennai kadi kinradu. piraku na koviluku selgirean. idhuku enna artham pls yaravadhu idharku aartham kurungal.