/* ]]> */
Nov 092011
 

இது எனக்கு ஒரு சகோதரி அனுப்பிய மெயிலின் சாராம்சம்.

kanavu

Dear Sir,

In my dream I saw a woman with white saree is looking at me with sad eyes. She didnt tied her hair and also her hair is so long. She had a lamp. She took medicine and went to sleep in front of me. I was so scared of her. Even I never seen her in my life.

Could you please let me know why I saw her in my dream? I am so scared of this dream

Thank you,

பெயர் மறைக்கப்பட்டுள்ளது

பொதுவாகவே இத்தகைய கனவுகளை நமது மூதாதையர் மோகினி கனவுகள் என சொல்வார்கள். வெள்ளைப் புடவை கட்டிக் கொண்டு வரும் மர்மப் பெண்ணைத்தான் அவர்கள் மோகினி எனக் குறிப்பிடுவார்கள். பொதுவாக, இத்தகை கனவுகளில் வரும் நிகழ்ச்சியை விட யாருக்கு எப்போது இந்த கனவு வந்தது என்பது மிக முக்கியம். இதே மாதிரி வெள்ளைப் புடவைக் கனவு ஒரு டீனேஜ் பயனுக்கு வந்தால் அதற்கு ஃப்ராய்டின் முறைப்படி விளக்கமே வேறு. ஆனால் இந்த கனவு வந்திருப்பது ஒரு சகோதரிக்கு. இதில் முக்கியமாய் நாம் கவனிக்க வேண்டிய வார்த்தைகள் – சோகக் கண்கள், கட்டப்படாத கூந்தல், நீண்ட கூந்தல், நான் பயந்தேன்… நான் பார்த்ததேயில்லை. இதை சற்று ஆழமாக யோசித்தால், சகோதரிக்கு தன் சுய பிம்பம் தான் மோகினியாய் வந்திருக்க வாய்ப்பிருக்கிறது.அதன் குறீயிடு தான் “இதற்கு முன் பார்த்ததேயில்லை” என்ற அழுத்தம். இந்த சகோதரிக்கு, தன் உடல்நிலை பற்றியோ அல்லது தனக்கு நெருக்கமானவர்களின் உடல்நிலை பற்றியோ ஆழ் மனது கவலை இருக்கிறது. கவலை உடல்நிலை பற்றியது மட்டுமல்ல என்பதைத்தான் அந்த நீண்ட கூந்தல் சிம்பல் காட்டுகிறது. கவலை அதையும் தாண்டி வாழ்வியல் முறைகளையும் சமுதாயத்தில் நம் அந்தஸ்து என்னாவ்து போன்ற கவலைகளையும் காட்டுகிறது. அந்தஸ்து பற்றிய கவலையே கட்டப்படாத கூந்தல் வழியாய் பிரதிபலிக்கிறது. ஆனால் இந்தக் கனவில் உள்ள ஒரே பாசிடிவ் விஷயம் , அந்த பிம்பம் மருந்து குடிப்பதுதான். ஆக, இந்தக் கனவு சகோதரிக்கு தெரிவிப்பது என்னவென்றால், நிச்சயம் சகோதரியை ஆட்டிப்படைக்கும் பிரச்சினைக்கு தீர்வு இருக்கிறது. அந்த தீர்வு சகோதரி ஆர அமற யோசித்தால் கிடைக்கும். இந்தக் கனவின் அர்த்தமாக நாம் சொல்லக் கூடியவை:

1. இந்தக் கனவு ஒரு ஆபத்தை அல்லது கவலையை உணர்த்துகிறது.

2. அந்த ஆபத்தை தீர்க்கும் மருந்து / தீர்வு உங்கள் கையில் இருக்கிறது !

3. நிதானம் கடைபிடிப்பது நல்லது.

tags : kanavu palan, kanavin palan, mohini, mohini kanavu, vellai pudaivai, dream interpretation, dream meanings, கனவு பலன், கனவின் பலன், மோகினி, மோஹினி, வெள்ளைப் புடவை, கனவின் அர்த்தம், கனவுகள் மூலம் பயன்பெறுவது எப்படி?, கனவுகள் மூலம் பலன் பெறுவது எப்படி?

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>