
கமல் அஜித்
ஆஸ்கார் அவார்டைக் குறிவைத்து தயாரிக்கப்படும் படத்தில், கமல் நடிக்கிறார். நடிக்கிறார். அதே படத்தில் ‘தல’யை நடிக்கவைக்கும் முயற்சி ந்டந்துகொண்டிருக்கிறது. இது மட்டுமில்லாமல், மோகன்லால் மற்றும் ரவிதேஜாவும் நடிக்கிறார்கள். தலைவனும் தலயும் இணையப்போகும் இந்தப்படம் நிச்சயம் பெருத்த வெற்றியடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷ்ருதி ஹாசன்
ஹிந்திப் படங்களில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹசன் அத்தோடு நிற்காமல் மியூஸிக்கில் அவருக்கு உள்ள திறமை ஹிந்திப் பட உலகுக்கும் தெரியவேண்டும் என விரும்புகிறார். பின்னணிப் பாடகியாகும் தீவிர முயற்சியில் இருப்பதோடு, ஒரு மியூஸிக் ஆல்பம் தயாரித்து வெளியிடும் முயற்சியிலும் பிஸியாக இருக்கிறார்.

இஷா ஷெர்வானி
இஷா ஷெர்வனி ‘விஸ்வரூபம்’ படத்தில் கமலுடன் நடிக்கிறார். ஆனால் அதற்குள்ளாகவே அவர் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி விடுவார் போல. ‘ மாற்றான்’ என்னும் படத்தில் சூர்யாவுடன் ஒரு பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார். அது மட்டுமின்றி, விக்ரம் நடிக்கும் ஒரு இந்திப் படத்திலும் நடிக்கிறார்.

ராணி முகர்ஜி
ரானி முகர்ஜிக்கு இந்த 2012 -ம் ஆண்டு மிகவும் யோகமான ஆண்டாகும். ஆதித்யா சோப்ராவுடனான இவரது காதலுக்கு வீட்டினரின் சம்மதம் கிடைத்து விட்டது. தனது காதலர் குடும்பத்துடன் அவர் வெளிநாடு சுற்றுப் பயணம் போய்த் திரும்பியிருக்கிறார்.

பிந்து மாதவி
‘தென்மேற்குப் பருவக்காற்று’ என்னும் படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பதையடுத்து, ‘நீர்ப்பறவை’ என்ற தனது அடுத்த படத்தை தொடங்கியுள்ளார். இந்தப் படத்தில் பிந்துமாதவி ஹீரோயினாக நடிக்கிறார். இவரது கண்கள் பாரமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இயக்குனர் புகழாரம் சூட்டியிரிக்கிறார்.
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments