/* ]]> */
Aug 072011
 

1. சன் டிவி கலாநிதிமாரனை கைது செய்யாமல் விடமாட்டோம் என்ற நோக்கில் காய்கள் நகர்த்தப்படுகின்றன. சக்ஸேனா மீதான புகார்களில், செட்டில்மெண்ட் ஆகிவிட்டதால், வேறு எப்படியாவது கலாநிதியை அரெஸ்ட் பன்ண ரெடியாகுதாம், போலீஸ் வட்டாரம். மதுரையில் வைகை டிவி காந்தி என்பவர் கொல்லப்பட்டார். இவர் கலாநிதியின் கல்லூரி கால நண்பர். இந்த காந்தியின் தம்பி சரவணன், பொட்டு சுரேஷுக்கு வேண்டியவர். இந்த சரவணன்தான் எஸ்.சி.வி.( சன் குழும கேபிள் டிவி ) லிங்கை மதுரை ஏரியாவில் கவனிச்சுக்கிட்டிருந்தார். இந்த நிலையில் , ராமநாதபுரத்தைச் சேர்ந்த கேபிள் டிவி சங்கத் தலைவர் மான்கொம்பு நடராஜன்  என்கிறவர் தனக்கு எஸ்.சி.வி. தரப்பிலிருந்து மிரட்டல்னும் கலாநிதி மமாறன் தூண்டுதலினால், மதுரையில் இருந்த போலீஸ்அதிகாரி ரஜினி குமாரவேல், என்னைத் தாக்கினார்னும் புகார் கொடுத்திருக்கிறார். பொட்டு சுரேஷ் ஆதரவு போலீஸான ரஜினிகுமாரவேலும் கலாநிதிக்கு எதிராக வாக்குமூலம் தர ஏற்பாடுகள் நடக்குது. பொய்ப்புகாரோ மெய்ப்புகாரோ போலீஸ் தரப்பில், கலாநிதிக்கு எதிராக மூவ் பண்ண வேலைகள் நடக்குது.

நெல்லையில் நேற்று (ஜூலை4-ம்தேதி)சன் குழுமத்தின் உள்ளூர் கேபிள் டிவி நிறுவனத்தில்  போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நெல்லை வண்ணாரப்பேட்டையில் சன் குழுமத்தின் ‘கரண் ‘ ‘ கரண் மியூசிக் ‘ என்ற உள்ளூர் கேபிள் டிவி சேனல்கள் இயங்குகின்றன. பாளையங்கோட்டை உதவிக் கமிஷனர் அலுவலகத்தில், உரிய ஆவணங்களோடு ஆஜராகுமாறு, சேனல் பொறுப்பாளர்களிடம் வலியுறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.

2. ” என்ன செய்வீர்களோ தெரியாது. நான் ஸ்பெஷல் கோர்ட்டில் ஆஜராகமாட்டேன். தீர்ப்பு எனக்கு சாதகமாக வரவேண்டும். ” என்று சொல்லியிருப்பது யாரென்று உங்களுக்குப் புரிந்திருக்கும். தனது வழக்கறிஞர் டீமிடம் இப்படி சொல்லியிருப்பது, தமிழக முதல்வர் ஜெயலலிதாதான். 2001-2006-ல் ஜெ. ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கு சென்னை நீதிமன்றத்தில் இழுத்தடிக்கப்பட்டது என்பதால், திமுக பொதுச் செயலாளர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில்,  இந்த வழக்கை கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவேண்டுமென உத்தரவிட்டது,  உச்சநீதிமன்றம். இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை மீண்டும் புலனாய்வு செய்யவேண்டும் என்று தமிழக தலைமைச் செயலர் மூலம் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த  அரசாணை சட்ட விரோதமானது என்று மீண்டும் மனுதாரர் மனுச் செய்ததில், கர்நாடக சிறப்பு நீதிமன்றம்  இது சம்பந்தமாக கர்நாடக  சிறப்பு நீதிமன்ற அரசு வழக்கறிஞர் ஆச்சாரியாவைத் தவிர வேறு யாரும் இந்த வழக்கில் தலையிடக்கூடாது; எந்த மறு விசாரணையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் தலைமைச் செயலாளர் பிறப்பித்த மறு  விசாரணை உத்தரவுக்கு   தடை உத்தரவு பிறப்பித்தது.  எனவே, இனிமேல் வழக்கை தாமதப்படுத்த முடியாது. ஜெயலலிதா 313 ஸ்டேட்மெண்ட் கொடுக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியிருக்கிறார்., என்கிறார்கள். கடந்த 1-ம் தேதியன்று  ஜெ. சார்பில் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், 313 ஸ்டேட்மேண்டுக்காக நேரில் ஆஜராக வேண்டியதில்லை என்றும், 313/5 பிரிவின்படி கேள்விகளுக்கு பதில் எழுதியோ அல்லது வீடியோ கான்ஃபரன்ஸிங்  மூலமாகவோ  ஸ்டேட்மெண்ட் வாங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை வருகிற  8-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படியே விசாரணை நடைமுறைகள் உள்ளன என்பதைச் சுட்டிக் காட்டும் சட்ட  வல்லுனர்கள் , 313 ஸ்டேட்மெண்ட் தொடர்பான வழக்கமான நடைமுறையைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருப்பதையும் எடுத்துக் காட்டுகிறார்கள். இந்த வழக்கு இப்படி தள்ளிப் போனதில் டென்ஷனான ஜெ. தான் நாம் மேலே குறிப்பிட்டதுபோல வழக்கறிஞர் டீமிடம் சொல்லியிருக்கிறார்.

2. வேலூர் மேற்கு மா.செ. வும் ஜோலார்பேட்டை எம்.எல்.ஏ.வுமான ஆளும் கட்சி எம்.எல்.ஏ.மீது இரண்டு முறை புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையே என குமுறிக்கொண்டிருக்கிறார்கள், வீரமணியின் கார்மெண்ட்ஸ் கம்பெனிக்குப் பக்கத்தில், கூல் ட்ரிங்க்ஸ் மற்றும் ஹார்ட்வேர் கடை வைத்திருக்கும் வெங்கடேசனும் இவர் மகன் செந்தில்குமாரும்.

” கூல் ட்ரிங்க்ஸ் வியாபாரத்துக்காக ஏலகிரி மலைக்குச் சென்றபோது அங்குள்ள கடைக்காரர்கள் எங்களை  அடித்துவிட்டார்கள். ஏலகிரி காவல்நிலையம் எங்கள் புஹாரை சட்டை செய்யவில்லை. எங்களை அடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என எங்கள் எம்.எல்.ஏ. வீரமணி சொல்லியிருப்பதை அறிந்து அதைப்பற்றிக் கேட்பதற்காக , எம்.எல்.ஏ. வீட்டுக்குப் போனபோது, ‘ உன் கடை இருக்கும் இடத்தை எனக்குக் கிரயம் செய்து கொடு’ என்றார். முடியாது என்று சொல்லிவிட்டு வந்துவிட்டேன். பிறகு புரோக்கர்கள் அணுகினர். மீண்டும் எம்.எல்.ஏ.  என்னை ஒருநாள் என்னைக் கூப்பிட்டனுப்பினார். அப்போது போலீஸாரும் உடனிருந்தனர். ‘ இந்த இடத்தை எனக்குக் கிரயம் பண்ணீக் கொடுக்காவிட்டால், ஏதாவதொரு கேஸைப் போட்டு உன்னை உள்ளே தள்ளிடுவேன்’ என்று என்னை மிரட்டினார். அதன்பிறகுதான் போலீஸில் புஹார் கொடுத்தேன். இன்றுவரை நடவடிக்கை இல்லை. வீரமணி எம்.எல்.ஏ. வோ ‘ ஏலகிரியில் தகறாறு என்று வந்தார்கள். நான் இருதரப்புக்கும் சமாதானம் செய்து வையுங்கள் என்று சொன்னேன். என் புகழைக் கெடுக்க எங்க கட்சி ஆட்களே இவர்களைத் தூண்டிவிட்டு இப்படிப் புஹார் கொடுக்க வைக்கிறார்கள்’ என்கிறார். . மேலும், ‘அந்தப் புஹாரில் நிறைய பொய்த் தகவல்கள் இருக்கு. அதை விசாரித்துக்கொண்டிருக்கிறோம் ‘என்கின்றனர், போலீஸார்.  ஆளும் கட்சியினர் மீது புஹார் என்றால்தான் இப்படி ஆர அமர விசாரித்தபடி இருப்பார்கள். எதிர்கட்சின்னா  இந்நேரம் வீடு புகுந்து விடிகாலை 5-மணிக்கு அரெஸ்ட் பண்ணிடுவோம்ல்ல என்கிறார்கள்.

3. திமுக-வைச் சேர்ந்த  கிருஷ்ணகிரி மா.செ. செங்குட்டுவனை  மாற்றியே தீரவேண்டும் என்று அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட நிர்வாகிகளும், மாவட்டத்தில் இருக்கும் 10 ஒ.செயலாளர்களும், 2 ந.செயலாளர்களும்,   கையெழுத்துப் போட்டு கட்சித் தலைமைக்கு ஒரு புகார் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.  இதற்கு கட்சித் தலைமை ரெஸ்பான்ஸ் பண்ணாட்டி அறிவாலயத்தின் முன் உண்ணாவிரதம் இருப்பார்களாம்.

Tags : SUN TV Director Kalanidhi Maran who is the nephew of Karunanidhi is likely to arrested say some media sources .Police aln for the same…

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>