காலை வணக்கம்
இன்றைய பாடல்: கண்ணன் வந்து பாடுகின்றான்
படம்: ரெட்டை வால் குருவி
இசை: இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியது: எஸ். ஜானகி
(நினைவிருக்கா இந்து நானும் நீயும் இந்த பாட்டு ட்ரை பண்ணி” பவ் ” வாங்கினது? எவ்ளோ முயற்சித்தாலும் உச்ச ஸ்தாயியில் காதல் நிலா ஆஆ ஆன்னு நம்மால முடியவே முடியாதே..ஹா ஹா…ப்ரிங்க்ஸ் பாக் லாட்ஸ் ஆஃப் ஹாப்பி – பவ் மெமரீஸ் திஸ் ஸாங்க்)
ராதிகாவின் அட்டகாசமான , இன்னிபிஷன்ஸ் இல்லாத பெப்பி நடனமும் , தாளம் போடவைக்கும் மெட்டும்..வாவ் எத்தனை அருமையான காம்பினேஷன்..வெளுத்து வாங்கியிருக்கிறாரே ராதிகா..இவரைப் போல நடிப்புத்திறனும் பிரமாதமான உடல் மொழியும் இப்போ யாருக்கு இருக்கு? குறும்புகுப்பு சண்டைக்கு ரெடியா?
பாடல் வரிகள்
கண்ணன் வந்து பாடுகின்றான்
காலமெல்லாம்
கண்ணில் என்ன கோபமென்றான்
காதல் சொன்னான்
காற்றில் குழல் ஓசை
வீசும் பூ மேடை மேலே
கண்ணன்
கீதங்கள் சிந்தும் கண்கள் மூடுதே
பாதங்கள் வண்ணப் பண்கள் பாடுதே
மோகங்கள் என்னும் கண்ணன் தேரிலே
ராகங்கள் இன்பக்கள்ளில் ஊறுதே
காதல் என்னும் ஓ ஓ
காதல் என்னும் கூட்டுக்குள்ளே
ஆசைக்குயில் கொஞ்சுதம்மா
இவள் வண்ணக்கொடி
சின்னஞ்செடி
கண்ணன் தொட
சந்தம் பாடி சொந்தம் தேடி
சொர்க்கங்கள் மலர்ந்ததோ
கண்ணன் வந்து
வானத்தில் செல்லக்கண்ணன்
பாடுவான்
கானத்தில் சின்னப்பெண்ணும்
ஆடுவாள்
ஆயர்கள் மத்துச்சத்தம் போலவே
ஆனந்த முத்தம் சிந்தும் நேரமே
மாலை நிலா ஆ ஆ ஆ
மாலை நிலா பூத்ததம்மா
மௌன மொழி சொல்லுதம்மா
ஒரு அந்திப்பூவில்
சிந்தும் தேனில்
வண்டு பேசும்
தென்றல் வீசும்
கண்ணன் பாட
கண்கள் மூட
கன்னங்கள் சிவந்ததோ
கண்ணன் வந்து..
தொகுப்பு
ஷஹி
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments