/* ]]> */
Oct 312011
 


காலை வணக்கம்

இன்றைய பாடல் :எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா..

படம் : கலைஞன்

பாடியவர்கள்: யேசுதாஸ், எஸ்.ஜானகி

இசை: இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

பிரமாதமான கிளாசிக்கல் டச் உள்ள பாடல் ..பாடலின் நடு நடுவே இளையராஜாவின் கரகர ஹம்மிங் கேட்க அத்தனை சுகம் ..இந்த பிந்தியா என்ன ஆனார்? ஆளையே காணலையே?

“சுகங்கள் மெதுவாய் நீ தரவேண்டும்

நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்” என்று ஜானகி கொஞ்சுவது விரசம் தொட்டுவிடக்கூடிய அபாயத்திலும், காதலின் உச்சத்திலும் சஞ்சரிக்கும் ஒருதேவ கணம்..எந்தன் நெஞ்சில்..ம்ம்ம்..

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீ தானா

எண்ணம் எங்கும் நீ பாடும் திர்திரு தில்லானா

இசையின் சுவரங்கள் தேனா

இசைக்கும் குயில் நீ தானா

எந்தன்..

பனியில் நனையும் மார்கழிப்பூவே

எனை நீ பிறிந்தால் ஏதொரு வாழ்வே

உனக்கெனப் பிறந்தவள் நானா

நிலவுக்குத்துணை இந்த மானா

வாழ்ந்தேனே உறவின்றி முன்நாள்

வந்தாயே உறவாக இந்நாள்

சுகங்கள் மெதுவாய் நீ தரவேண்டும்

நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

உதடுகள் உரசிடத்தானே

வலிகளும் குறைந்திடும் மானே

நான் சூடும் நூலாடை போலே

நீ ஆடு பூமேனி மேலே

எந்தன் நெஞ்சில் ஹோய் ம்ம்ம்…

எந்தன் நெஞ்சில் …

தொகுப்பு

..ஷஹி..

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>