/* ]]> */
Mar 262012
 

எனக்கு  வேண்டும்  வரங்களை

இசைப்பேன்  கேளாய் கணபதி

மனதில் சலனம் இல்லாமல்

மதியில்  இருளே  தோன்றாமல்

நினைக்கும்   பொழுது

நின்  மவுனநிலை வந்திட

நீ  செயல்  வேண்டும்.

கனக்கும்  செல்வம் , நூறு வயது

இவையும்  தர   நீ   கடவாயே!

–பாரதியார்

எல்லாவித இடையூறுகளையும் நீக்குதற் பொருட்டாகவும், அந்த ஆனைமுகத்தனை மிக்க பணிவுடன் வணங்கி பின் வரும் எனது அனுபவங்களை எழுத முற்படுகிறேன்.
எல்லாம் வல்ல எம்பெருமானின் அருளாலும் ,எனது இனிய ஷிர்டி பாபாவின் வழிகாட்டுதலாலும்,அடியேனுக்கு ஏற்பட்ட ஈடுஇனை அற்ற
திருக்கயிலாய தரிசனத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வாய்ப்பளித்த இறைவனுக்கு நன்றி.

திருக்கயிலாயதரிசனத்தை விரும்பும் யாத்திரிகர்களுக்கு உற்சாகத்தையும் வழிகாட்டுதலையும் பின் வரும் தொகுப்பு அளிக்கும்; மேலும்,பயணம் மேற்கொள்ள வாய்ப்பில்லாத ஆன்மீக வாசகர்களுக்கு திருக்கயிலாய யாத்திரை சென்று வந்த உணர்வினைத் தருகின்றது.இத்தொகுப்பை வெளியிடுவதற்கு அருள்புரிந்த ரிஷப வாகனின் பொற் பாதங்களைப் பணிகின்றேன்.

ஓம் நமசிவாய!

‘சிவ சிவ என் கிலர் தீவினையாள்ர்
சிவசிவ என்றிட தீவினை மாளும்
சிவசிவ என்றிட தேவரும் ஆவர்
சிவசிவ என்னச் சிவகதிதானே

திருக்கயிலாயம் அமைந்துள்ள இடம் —சீனர்களின் ஆதிக்கத்தில் உள்ள திபெத்தில் இமயமலையின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 20,000அடி(6714மீட்டர்) உயரத்தில் அமைந்துள்ளதால் அனைவரும் எளிதாக செல்லக்கூடிய இடம் இல்லை;காற்றழுத்தம் குறைவு,பிராணவாயு குறைவு என்பதாலும்,நடைப்பயணம் மூலமே அடைய முடியும் என்பதாலும்,நல்ல உடல் நலம் உள்ளவர்கள் மட்டுமே செல்ல முடியும்.வருடத்தில் பாதி நாட்கள் பனி மூடி இருப்பதாலும், பணம் அதிகம் செலவாகும் என்பதாலும்,பலர் இந்த யாத்திரையை மேற்கொள்ள முன் வருவதில்லை. எனவே,அத்தகைய அன்பர்கள் படித்து இன்புறவே அவனருளாலே அவன் தாள் வணங்கி எழுதுகிறேன்..
இந்து தர்மப்படி தீர்த்தயாத்திரை செல்வது விதிக்கப்பட்ட ஒன்று. தீர்த்தயாத்திரைகளின் சிகரம் ”திருக்கயிலாயம்”.
புவியியலின்படி, உலகத்திலேயே மிக உயரமானமலை ”இமயமலை”தான்.இம்மலை சுமார் 30மில்லியன் வருடத்திற்கு முன் தோன்றியது.என்று கணிக்கப்பட்டிருக்கிறது.இம்மலை சுமார் 2000கி.மீ. தூரம் விரிந்து பரந்துள்ளது.அதன் உச்சியிலே பரம பவித்ரமான கயிலாயத்தையும்,மானசரோவர் ஏரியையும் கொண்டுள்ளது.
மானசரோவரில் நீராடுவதும் கயிலாயமலையை தரிசிப்பதும்,ஒருவருடைய பாவங்கள் எல்லாம் சூரியனைக் கண்ட பனி போல விலகி விடுகின்றது என்றும் அவர்களுக்கு மறுபிறவி கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது.எவன் ஒருவன் கயிலாயத்தைக் கண்டு தரி சனம் செய்கிறானோ அவனுடைய 21 தலைமுறைகள் முக்தி அடைகின்றன.மேலும், மானசரோவரின் மண்ணானது எவருடைய உடம்பில் படுகிறதோ (அ) யார் அந்த புனித நீரில் நீராடுகிறார்களோ அவர்கள் பிரம்மலோகத்தை அடைகின்றார்கள்.ஏரியின் புனித நீரைப் பருகுகிறவர்கள், சிவசாயுஜ்யத்தை அடைவதுடன் 100 ஜன்ம பாவங்களிலிருந்தும் விடுபடுகின்றனர்.

ஒருவர் கயிலாய யாத்திரை செய்தால், அது அவரது வாழ்வின் மிகப்பெரிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை.

தொடரும்..

..பாபா நளினி..

 

 

 

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>