/* ]]> */
Nov 292011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் :கொடியிலே மல்லியப்பூ

படம்: கடலோரக் கவிதைகள்

பாடியவர்கள் : ஜெயச்சந்திரன் , எஸ். ஜானகி

இசை : மேஸ்ட்ரோ தான் !

ஏதோ டீச்சர் வேடம் போடவே பிறந்தார் போல பாத்திரத்தில் சிக்கெனப் பொருந்தி விட்ட ரேகா. பளிச் ஃபீசர்ஸ் , அம்சமான முக வெட்டு என்று பார்க்க இதம் . என்னவோ எண்ணெயும் மையும் சேர்த்துப் பூசினார் போன்ற முகத்துடன் சத்யராஜ்..ம்ம்..ஓகே !

டாப் ஸ்கோர் லொகேஷனுக்குத் தான் . பார்க்கப் பார்க்க கொஞ்சமும் சலிக்காத கடல் …உவர்ப்பும் சில்லிப்புமான காற்று இதோ ஸ்க்ரீனிலேயே உணர முடிகிறது. ஏனோ தானோ என்று இசையமைக்கப்பட்ட பாட்டானாலும் கூட இந்த மாதிரி ஒரு பாக்ரவுண்டில் கண்டிப்பாய் சோபிக்கும் எனும் போது அட்டகாசமான இது போன்ற காம்போசிஷன்கள் காலத்தால் அழியாது நிற்கும் தானே ?

கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே

எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே

பறிக்கச்சொல்லித் தூண்டுதே பவழமல்லித் தோட்டம்

நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம்

கொடியிலே ..

மனசு தடுமாறும் அது நெனச்சா நெறம் மாறும்

மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தட போடும்

நித்தம் நித்தம் ஒன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்

மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்க சேரும்

பொத்தி வச்சா அன்பு இல்ல

சொல்லிப்புட்டா வம்பு இல்ல

சொல்லத்தானே தெம்பு இல்ல

இன்பதுன்பம் யாரால

பறக்கும் தெச ஏது இந்தப்பறவ அறியாது

உறவோ தெரியாது அது ஒனக்கும் புரியாது

பாறையில பூ மொளச்சு பாத்தவுக யாரு

அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயுசு நூறு

காலம் வரும் வேளையில

காத்திருப்பேன் பொன் மயிலே

தேரு வரும் உண்மையில

சேதி சொல்வேன் கண்ணால

கொடியிலே மல்லியப்பூ…

ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:

 kodiyile malligappoo manakkudhe maane

edukkavaa thodukkavaa thavikkiran naane
parikkach chollith thoondudhe pavazhamallith thottam
nerunga vidavillaiye nenjulkullak koochcham
kodiyilae malligappoo manakkudhe maane
kodukkavaa thadukkavaa thudikkiren naane

manasu thadumaarum adhu nenachchaa neram maarum
mayakkam irundhaalum oru thayakkam thada podum
niththam niththam un nenappu nenjukkuzhi kaayum
maadu rendu paadha rendu vandi enge serum
poththi vechchaa anbu illa sollipputtaa vambu illa
sollaththaane thembu ille inba thunbam yaaraala — kodiyile

parakkum desaiyedhu indhap parava ariyaadhu
uravum theriyaadhu athu unakkum puriyaadhu
paaraiyile poomolachu paarthavuga yaaru
anbu konda nenjaththukku aayisu nooru
kaalam varum velaiyile kaaththiruppen ponmayile
thedhi varum unmaiyile sedhi solven kannaala– kodiyile

 

 

 

tags

sathyaraj, reka, ilaiyaraja, kadalora kavithaigal, jeyachandran, s.janaki, tamil love songs, sugaragam, kaalaip paniyum konjam isaiyum, tamil film song lyrics, kodiyile malliayp poo song lyrics, kodiyile malliyap poo song, kodiyile malliayap poo video, barathiraja

சத்யராஜ், ரேகா, இளையராஜா, கடலோரக்கவிதைகள், ஜெயச்சந்திரன், எஸ். ஜானகி, காதல் பாடல்கள், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், தமிழ் சினிமா பாடல் வரிகள், கொடியிலே மல்லியப் பூ, கொடியிலே மல்லியப் பூ பாடல் வரி, பாடல் வரி, விடியோ, பாரதிராஜா, சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>