/* ]]> */
Feb 182012
 

காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி திரை விமர்சனம்

காதலில் சொதப்புவது எப்படி சினிமா விமர்சனம்

 

Kadhalil Sodhapuvathu Yeppadi review, காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்
காதலில் சொதப்புவது எப்படி விமர்சனம்
அமலா பால் சித்தார்த் : kadhalil sodappuvathu eppadi

எதிர்பார்ப்புகள் :

காதலில் சொதப்புவது எப்படி தமிழிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டிருக்கும் படம். தெலுங்கில் பெயர் லவ் ஃபெயிலியர். இந்தப் படத்தின் இயக்குநர் பாலாஜி மோகன். காதலில் சொதப்புவது எப்படி என பாலாஜி மோகன் எடுத்த குறும்படம் செம ஹிட்டாக , இப்பொது சித்தார்த் அமலா பால் நடிக்க திரைப்படமாய் வந்திருக்கிறது. இந்தப் படத்தால் பெரிதும் கவரப்பட்டு சித்தார்த் தானே தயாரிக்க முன் வந்திருப்பது கூடுதல் ஸ்பெஷல்.

நடிப்பு :

சித்தார்த்

அமலா பால்

இசை  : தமன்

கேமரா : நீரவ் ஷா

எடிட்டிங்க் : டி.எஸ் சுரேஷ்

கதை திரைக்கதை இயக்கம் : பாலாஜி மோகன்

தயாரிப்பு : சித்தார்த்

காதலில் சொதப்புவது எப்படி ? குறுப்படம்… இதைப் பார்த்தால் முழுப்படத்தின் தீமைப் பற்றிய ஐடியா கிடைக்கும்…

கதை

அருண் (சித்தார்த்) இஞ்சினீரிங்க் படிக்கும் மாணவன். அவன் நம்மிடம் அவனுக்கும் அவன் காதலி பார்வதி ( அமலா பால்) க்கும் என்ன பிரச்சினை என சொல்கிறான். எப்படி அவளை சந்தித்தேன் என்பது முதல் தொடங்கும் அருண், எப்படி பார்வதி வன மனதை கொள்ளையடித்தாள் என விளக்குகிறான். ஈகோ அவர்களிடையே வளர, காதலர்கள் “மோதலர்கள்” ஆகிறார்கள். அருண் வருத்தமடைகிறான். அவன் காதல் தோல்வியால் அவதிப்படுகையில், அவன் நண்பன் வாழ்க்கையும் அதே பாதையில் போவதைப் பார்க்கிறான். நண்பன் வாழ்க்கை பார்த்து அவன் காதலில் அவன் செய்த தவறுகளை உணர்கிறான். அவன் காதலின் ஆழத்தை உணர்கிறான். அந்த உணர்தலுடன் அருண் அவன் காதலை என்ன செய்தான் என்பதுதான் க்ளைமேக்ஸ்.

நடிப்பு

சித்தார்த்  : இது சித்தார்துக்கே செய்யப்பட்ட ரோல் போல பொருந்துகிறார். காதல் குழப்பத்தையும் பிரயாசையையும் அழகாக வெளிப்டுத்தியிருக்கிறார்.

அமலா பால் : அமலா பாலுக்கு மைனாவுக்கு பிறகு சவாலான ரோல். நடித்திருக்கிறார் என்பதை விட அந்த பார்வதியாகவே மாறியிருக்கிறார் என்பது தான் உண்மை. அவார்டுகள் அள்ளுவார்!

ஒளிப்பதிவு

நீரவ் ஷா இந்தப் படத்தை தயாரித்ததாலேயோ என்னவோ ஸ்பெஷல் கவனம் செலுத்தியிருக்கிறார். ஒவ்வொரு ஃப்ரேமும் நீட்டாக வந்திருக்கிறது.

இசை :

தமனுக்கு இது கொஞ்சம் சவாலான ப்ளாட். ஆனால் நிறைவாய் செய்திருக்கிறார். பாடலகளின் மெலடியும் பின்னணி இசையின் ஆழமும் சூப்பர்.

இயக்கம் :

குறும்படத்தில் தான் செய்ததை அழகாக முழு படமாக செய்திருக்கிறார் பாலாஜி மோக. எந்த வித காம்ப்ராமைசும் செய்யாமல் முதல் சினிமா எடுத்ததற்கு அவருக்கு மூன்றாம் கோணம் சார்பில் ஸ்பெஷல் பாராட்டுக்கள். பாடல் காட்சிகளும் அழகாய் படமாக்கியிருக்கிறார்.  இரண்டாம் பாதி திரைக்கதை கொஞ்சம் இழுத்தாலும் கூட பல புதிய முயற்சிக்களால் மனம் கவர்கிறார். சுய விளக்கம் (  self narration) யுத்தியை அழகாய் கையாண்டிருக்கிறார். இளைஞர்களின் ஃபீலிங்க்ஸ் புரிந்து படத்தில் சொல்லியிருக்கிரார். வெல்டன் பாலாஜி !

பார்க்கலாமா? :

 குறுமபடம் பார்த்தபின் என் எதிர்பார்ப்புக்கு ஈடு கொடுக்கவில்லை என்றாலும் கூட , புதுமைகளுக்காகவும் இளைஞர்களின் வாழ்க்கையை இயல்பாய் சொல்லியிருக்கும் விதத்திற்காகவும் கட்டாயம் பார்க்கலாம் !

ஃபைனல் வெர்டிக்ட்

காதலில் சொதப்புவது எப்படி ? – காதல் அழிவதில்லை !

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>