/* ]]> */
Sep 172011
 

ஹாய் காலை வணக்கம்…

இன்றைய பாடல்: தென்மேற்குப் பருவக் காற்று

படம்: கருத்தம்மா

பாடியது: உன்னி க்ரிஷ்ணன்,சித்ரா

இசை: ஏ.ஆர் ரஹ்மான்

பாடலாசிரியர்: வைரமுத்து

விருப்பப்பாடல்: மூன்றாம் கோணம் பானுவுக்கு

தென் மேற்குப் பருவக்காற்று

தேனிப் பக்கம் வீசும் ஒரு சாரல்

முத்துச் சாரல்

தெம்மாங்கு பாடிக்கொண்டு

சிலுசிலுவென்று சிந்துதம்மாதூறல்

முத்துத் தூறல்

வெங்காட்டுப் பட்டுக்கள்ளி

பட்டென்று மொட்டு விட

செங்காட்டு சில்லிச்செடி

சில்லென்று பூவெடுக்க.

தென்மேற்கு…

வானோடும் மண்ணோடும் இல்லாத வண்ணங்கள்

பெண்ணோடும் மண்ணோடும் நான் காண்கிறேன்

தாலாட்டில் இல்லாத சங்கீத ஸ்வரங்கள்

பாராட்டும் உன் பாட்டில் நான் கேட்கிறேன்

மழைத்துளி என்ன தவம் தான் செய்ததோ

மலர் கொண்ட மார்போடு தொட்டாடுதே

மழைத்துளி தொட்ட இடம் நீ தீண்டவோ

நினைக்கையில் உள்ளூர கள்ளூறுதே

தென்மேற்கு…

நீ என்றும் நானென்றும் இரு வார்த்தை ஒன்றாகி

நானென்ற ஓர் வார்த்தை உண்டானதே

ஆணென்றும் பெண்ணென்றும் இரு வார்த்தை ஒன்றாகி

ஆள் என்ற ஓர் வார்த்தை உண்டானதே

காதல் என்னும் மந்திரத்தின் மாயம் என்ன

கள்ளும் முள்ளும் இப்போது பூவானதே

வானவில்லின் துண்டொன்று மண்ணில் வந்து

யாருக்கும் சொல்லாமல் பெண்ணானதே

தென்மேற்கு..

தொகுப்பு

ஷஹி

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>