/* ]]> */
Nov 102011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல்: பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள

படம் : காக்கிச் சட்டை (1985)

பாடலாசிரியர்: வைரமுத்து

இசை: இளையராஜா

பாடியவர்கள்: பி. சுசீலா, எஸ். பி. பாலசுப்ரமணியம்

வெகு சுமாரான பிக்சரைசேஷன், நாடகத்தனமான செட்டிங்ஸ், உடைகள் என்று ஏகப்பட்ட மைனஸ்கள் இருந்தாலும் அவற்றை எல்லாம் தூக்கி சாப்பிட்டுவிடும் படியான விஷயங்கள் பலவும் உள்ள பாடல்..அம்பிகாவின் அழகு, கமலின் கம்பீரம் இவற்றோடு வைரமுத்துவின் அட்டகாசமான வரிகள்.

மோஸ்ட் ரொமான்டிக் என்று மெச்சிக்கொள்ளத்தக்க இசை..இசைக்கு ஏற்றார் போல ஆடத்தூண்டும் மெட்டு அருமை . “ஆசைத்தீயைத் தூண்டாதே போதைப் பூவைத் தினம் தூவாதே” காதலும் விரகமும் ஒன்றைஒன்று மிஞ்சும் வண்ணம் இத்தனை அழகு சொட்டச்சொட்ட வைரமுத்துவைத் தவிர வேறு யார் எழுதிவிட இயலும்?

பட்டுக்கன்னம் —-தொட்டுக்கொள்ள—-ஒட்டிக்கொள்ளும் என்று வார்த்தைகளுக்கு இடையிலான சந்தவெளியை அதிகம் நிரப்புவது மோகமா? காதலா?—–

 

பட்டுக்கன்னம் தொட்டுக்கொள்ள ஒட்டிக்கொள்ளும்

ஒட்டிக்கொண்டு கட்டிக்கொள்ள உள்ளம் துள்ளும்

தென்றல் வந்து உன்னைக்கண்டு

மெல்ல மெல்ல ராகம் ஒன்று

பாடுதம்மா ஹோஹோஹோய் (2)

நீல நதிக்கரை ஓரத்தில் நின்றிருந்தேன்

ஒரு நாள் உன் பூவிதழ் ஈரத்தில்

என்னை மறந்திருந்தேன் பல நாள்

வானத்து மீன்களை மேகம் மறைத்தது போல்

தினமும் எந்தன் மோகத்தை நாணத்தில்

மூடி மறைத்திருந்தேன் மனதில்

நாணம் யாவும் நூலாடை

நானே உந்தன் புது மேலாடை

மங்கை இவள் அங்கங்களில்

உங்கள் கரம் தொடங்கலாம் நாடகமே

ஹோ ஹோஹோய் (பட்டுக்)

கற்பனை கொஞ்சிடும் காவியச்சந்தங்களே

அடடா இந்தக் காவியக் கோவிலைப் பார்த்து

எழுதியதோ தலைவா

புன்னகை சிந்திடும் பூந்தமிழ் ஓவியமே

கிளியே உந்தன் பூவுடல் பார்த்தபின்

சிற்பம் வடித்தனரோ கனியே

ஆசைத்தீயை தூண்டாதே

போதைப் பூவை தினம் தூவாதே

அந்தியிலே வெள்ளி நிலா

அள்ளித்தரும் சுகங்களே

ஆயிரமே ஹோ ஹோஹோய்…

ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:

Lyrics:

pattu kannam thottu koLLa otti koLLum
otti koNdu katti koLLa uLLam thuLLum
thenRal vanthu ennidaththil
mella mella raagam onRu paaduthammaa…
hOiii …hOii..(pattu)neela nadhikkarai Oraththil ninRirunthaen…
oru naaL – unthan
poovidhazh eeraththil ennai maRanthirunthaen…
pala naaL
vaanaththu meengaLai maegam maRaiththadhu pOl…
dhinamum – unthan
mOgaththai naaNathil moodi maRaiththirunthaen manadhil
naaNam yaavum noolaadai
naanae unthan pudhu maelaadai
manggai ivaL angganggaLil
unggaL karam thodanggalaam
naadagamae……hOiii..hOii…

(pattu)

kaRpanai konjidum kaavadi santhanggaLae..
adadaa
intha kaaviya kuyilai paarththu ezhudhiyadhO..
thalaivaa
punnagai sinthidum poonthamizh Oviyamae..
kiLiyae
unthan poovudal paarththapin siRpam vadiththanarO…
kaniyae
aasaiththeeyai thooNdaadhae
bOdhaip pUvaith thoovaadhae
anthiyilae veLLi nilaa
aLLith tharum suganggaLae..
aayiramae… hOi.. hOi..

(pattu)

 தொகுப்பு
..ஷஹி..

காக்கிச்சட்டை, கமல், அம்பிகா, வைரமுத்து,. இளையராஜா, சுசீலா, எஸ். பி. பி, எஸ். பி. பாலசுப்ரமணியம், சுகராகம், பாடல் வரி, விடியோ, s. p. b, s. p. balasubramaniam, sugaragam, song lyrics, ilaiyaraja, suseela, susila, kaakisattai, kamal, ambika

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>