
குரு பெயர்ச்சி பலன் 2012 guru peyarchi palangal 2012
அனைத்து ராசிக்கும் பலன்கள்
குருப் பெயர்ச்சி பலன்கள் மே மாதம் 2012:
திருக் கணிதப்படி நந்தன ஆண்டு வைகாசி மாதம் ,4-ம் நாள் வியாழக்கிழமை (17.5.12)செனனை நேரப்படி காலை மணி 9.37க்கு குரு பகவான் மேஷ ராசியை விட்டுப் பிரிந்து , ரிஷப ராசியில் பிரவேசிக்கிறார். வாக்கியப் பஞ்சாங்கப்படி 17.5.12. அன்று மாலை 6.11-க்கு ரிஷபத்துக்கு பிரவேசம் செய்கிறார். விரிவான முன்னுரை ஏற்கெனவே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இந்த குருப் பெயர்ச்சியில், மேஷம், மகரம், விருச்சிகம், கன்னி, கடகம், முதலிய ராசிகள் நற்பலன்கள் பெறப்போகின்றன. மீனம், கும்பம், தனுசு, துலாம் , சிம்மம், ரிஷபம் மற்றும் மிதுன ராசிககு கெடுபலன்களும் நிகழவிருக்கின்றன. ஒரு முக்கிய விஷயத்தை இங்கு குறிப்பிட வேண்டும். புத்தாண்டு பலன்களும் குருப் பெயர்ச்சி பலன்களும் கிட்டத்தடட் ஒன்றையொன்று ஒத்திருக்கும்– இரண்டும் முன்னும் பின்னும் ஒரு மாதம் தான் வித்தியாசம் என்பதைத் தவிர. இரண்டு காலமும் ஒத்துப்போகும். புத்தாண்டு ஏப்ரல் மாதமும் குருப்பெயர்ச்சி மே மாதமும் பிறப்பதால், பலன்களில் பெரிய மாற்றமில்லை., புத்தாண்டு ராகு-கேது , சனிப் பெயர்ச்சி பலன்களை உள்ளடக்கிக்கொண்டுள்ளது. !
இனி கிரகங்களின் மூர்த்தி பலத்தைப் பற்றிப் பார்க்கலாம்.
குரு ஸ்வர்ண ( பொன்)மூர்த்தியானால், முழு சுபத் த்ன்மை கொண்டவர். ரிஷபம், துலாம் மற்றும் மீனம் இந்த பெயர்ச்சியில் முழு சுபத் தன்மை பெறுகிறார்கள். ராசிகள் முழு சுபத் தன்மை பெறும்போது கிரக பெயர்ச்சியில் ,நற்பலன்கள் வருவதாக இருந்தால், நன்மைகள் அதிகப்படும். கெடுபலன்கள் நிகழ்வதாக இருந்தால், கெடு பலன்கள் கொஞ்சம் குறையும்.
குரு ரஜத (வெள்ளி) மூர்த்தியானால், முக்கால் சுபத் தன்மை கொண்டவர். கடகம் , விருச்சிகம், கும்பம் முதலிய ராசிகள் முக்கால் சுபத் தன்மை பெறுகிறார்கள். இதன்மூலம் கடகம் ,விருச்சிகம் ஆகிய இரு ராசிகளுக்கும் ஏற்கெனவே ந்ற்பல்ன்கள் கியடைப்பதால், ஸ்தான பலமும் மூர்த்தி பலமும் சேர்ந்துகொள்வதால், சுபமே. ஆனால், கும்ப ராசிக்கு ஸ்தான பலம் இல்லாமல் போவதால், முக்கால் பங்கு மூர்த்தி பலம், கெடு பலன்களை வெகுவாகக் குறைக்கும்.
குரு தாம்பிரம்(தாமிரம்) மூர்த்தியானால், அரைப் பகுதி சுபத் தன்மை பெறுவார். மிதுனம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் இந்த வகையில் வருகின்றன. மிதுனத்துக்கு கெடு பலன் பாதியாகக் குறைந்து விடும். மற்ற இரு ராசிகளுக்கும் ஸ்தான பலம் இருப்பதால், கொடுக்கிற சுபப் பலன்கள் கொன்சமே குறையும். பேரும்பாலாக நற்பலன்களே நிகழும்.
குரு லோக (இரும்பு ) மூர்த்தியானால், கால் பங்கு சுபத் தன்மையையே அளிக்கக் கூடியவராகிறார். மேஷம், சிம்மம் தனுசு ஆகிய ராசிகள் இந்த வகையில் வருகின்றன. மேஷத்துக்கு கால் பங்கு மூர்த்தி பலம் போதுமானதாக இல்லை என்றாலும், ஸ்தான பலமும் ஆதித்ய பலமும் இருப்பதால் பாதகம் இல்லை. சிம்ம ராசிக்கு கால் பங்குதான் மூர்த்தி பலம் என்பதோடு ஸ்தான பால்மும் கிடையாது என்பதால் பத்தாம் இடத்துக் குரு பணம், பொறுப்பு, நிர்வாகம்சம்பந்தமான குறைபாடுகளை சமாளித்தாக வேண்டும். தனுசு ராசிக்கும் குருவின் கெடுபலன்களைத் தடுக்க மூர்த்தி பலம் போதுமானதாக இல்லை.
மற்றபடி இன்னொரு விஷயத்தையும் கவனித்தாக வேண்டும்.
குரு ஒரு ராசியில் உச்சமாகவோ ஆட்சி அலல்து நட்பு வீட்டிலோ இருந்தால், அந்த ராசிக்கு நற்பலன்கள் நிகழ்வதாக இருந்தால் அவை கூடுதலாகக் கிடைக்கும். கெடு பலன்கள் நிகழ்வ்தாக இருந்தால் கெடு பலன்கள்குறையும். மாறாக ஒரு ராசியில் குரு சஞ்சரிக்கும்போது, அந்த ராசி பகை வீடாகவோ, நீச்ச வீடாகவோ இருந்தால், அந்த ராசிக்கு நற்பலன்கள் குறைவாக வரும். கெடுபலன் வருவதாக இருந்தால் அவை அதிகமாகும்.
இந்த விதிகளை கவனத்தில் கொள்ளவும்.இனி பலன்களைப் படித்துப் பயனடையும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பிரசித்தி பெற்ற குரு ஸ்தலங்களுக்குச் சென்று ,தட்சிணாமூர்த்தியை வணங்கிப் பயனடையுங்கள்!
வாழ்க வளமுடன்!
ராசி வாரியாக அனைத்து ராசிக்கும் விரிவான குரு பெயர்ச்சி பலன்
Guru peyarchi Palangal 2012 in tamil for all 12 rasis
இது மாதிரி ஜோதிட பதிவுகள் உங்கள் மெயிலுக்கே வர வேண்டுமா
Delivered by FeedBurner
Tags : guru peyarchi palangal for all 12 rasis mesham, rishabam, mithunam, kadagam, simmam, kanni, thulam, viruchagam, thanusu, magaram, kumbam , meenam, mesha rasi, rishaba rasi, mithuna rasi, kadaga rasi, simma rasi, kanni rasi, thula rasi, viruchaga rasi, thanusu rasi, magara rasi, kumba rasi, meena rasi, rasi palan,
ராசி பலன் | குரு பெயர்ச்சி ராசி பலன் | மாத பலன் | மேஷம், ரிஷபம் | மிதுனம் | கடகம் |சிம்மம் | கன்னி | துலாம் |விருச்சிகம் | தனுசு | மகரம் | கும்பம் | மீனம் |
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments