/* ]]> */
Jun 012012
 

ஜூன் மாத ராசி பலன்  அனைத்து ராசிகளுக்கும்

Matha Rasi_Palan
Matha Rasi_Palan

ஜூன் மாத ராசி பலன்:

மேஷம்:
மன உளைச்சல் மிகுந்து காணப்படுவீர்கள். . இனம் புரியாத பயத்தின் காரணமாக இடமாற்றத்தை நீங்களே தேடிப் போய் மிகுந்த கஷ்டத்துக்கு உள்ளாவீர்கள். வீணான ஆசைகளும் வேண்டாத எண்ணங்களும் உங்கள் மன நிம்மதியைக் கெடுக்கும். கண்களுக்கு ட்ரீட்மெண்ட் தேவைப்படும். காதலில் ஈடுபட்டு சங்கடப்படுவீர்கள். சிறுநீரகம் சம்பந்தமான தொல்லை ஏற்படும். எந்த விதமான ரிஸ்க்கும் எடுக்கவேண்டாம். ஸ்பெகுலேஷன் துறையில் ஈடுபடவேண்டாம். அலுவலக வேலை சம்பந்தமான ஆசைகள் ஈடேறாது. வழக்குகள் மூலமாக சிறிது பணம் கைக்கு கிடைக்கலாம். சொத்துகள் வாங்குவதன் மூலம் பணத்தை முதலீடு செய்யலாம். அரசியல்வாதிகளுக்கும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் இது ஏற்ற மாதமல்ல. மாணவர்கள் கடுமையாக உழைக்கவேண்டியிருக்கும். எதிர்பார்க்கும் லட்சியத்தை அடைய கடுமையாகப் போராட வேண்டியிருக்கும்.

ரிஷபம்:
அளவுக்கதிகமான செலவுகளும், சிரமங்களும் உங்கள் வாழ்க்கைத்துணையுடன் உங்களுக்கு கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தும். ஜீரணக் கோளாறுகளும் ஜுரம் போன்ற சிறிய வியாதிகளும் சுகவீனத்தைக் கொடுக்கும். பெண் என்றால் ஆணிடமோ ஆணென்றால் பெண்ணிடமோ பேசும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். ரிஸ்க்கான வேலையில் உள்ளவர்களுக்கு உயிருக்கான ஆபத்து உண்டாகும். எச்சரிக்கை தேவை. பெண்களுக்கு காதல் தோல்வி ஏற்படலாம். அலுவலகப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு தடைப்படும். உங்கள் சமூக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படலாம் என்பதை நீங்கள் அசட்டையாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ரியல் எஸ்டேட்காரர்களும் அரசியல்வாதிகளும் இந்த மாதம் பெரிதாக எதையும் எதிர்பார்க்க முடியாது. மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண முடியும். விளையாட்டுத் துறை ப்ருமை தராது.

மிதுனம்:
முயற்சிகளில் வெற்றி, தொழிலில் முன்னேற்றம், குழந்தைப் பிறப்பு என்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிகழ்வுகளாக நடக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். நீங்கள் மிகவும் பொறுமையாக இல்லாவிட்டால் குடும்பத்தில் கருத்து வேற்றுமைகளைத் தடுக்க முடியாது. சிறுவயதுப் பெண்கள் தந்தை வயதில் உள்ளவர்களுடன் காதலில் ஈடுபடுவதைத் தடுத்துக்கொள்ளவேண்டும். சொத்துக்களிலிருந்து வருமானம் வந்தாலும் அதன்மூலம் வரும் செலவினங்கள் பெரிதாக இருக்கும்.நீங்கள் உங்கள் அறிவுத் திறமையை வெளிக்காட்டி உங்களுக்குண்டான மரியாதையை நிலைநிறுத்திக்கொள்வதோடு, மற்றவர்களின் கவனத்தையும் உங்கள் பக்கம் திருப்பிக்கொள்வீர்கள். உங்கள் கீழ் பணியாற்றுபவர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உங்கள் அலுவலக அந்தஸ்துக்கு பங்கம் ஏற்படும் அபாயம் உள்ளதால், எப்படியாவது அதைத் தடுத்து நிறுத்திக்கொள்ள வழி தேடுங்கள். மாணவர்கள் படிப்பிலும் நேர்முகத் தேர்வுகளிலும் சிறந்து விளங்குவார்கள்.

கடகம்:
மனக்கவலைகள், ஆரோக்கியமின்மை ஆகியவை உங்கள் மன நிம்மதியைக் குலைக்கும். உங்கள் நெருங்கிய நண்பரோ அல்லது நெருங்கிய சொந்தக்காரரோ இயற்கை எய்தலாம். குடும்ப நல்லுறவு பாதிக்கப்படும். இருந்தபோதும் காதல் உறவுகள்பெண்கள் உணர்ச்சி வசப்படாமல் இருக்க்வேண்டும். சுய சம்பாத்தியத்த்தினால் கிடைத்த சொத்துக்கு சில பாதிப்புகள் ஏற்படலாம். பணப் பிரச்சினைகள் ஒரு பக்கம் இருந்தாலும், ஓரளவுக்கு வருமானமும் வந்துகொண்டுதான் இருக்கும். உங்கள் மேலதிகாரிகளிடம் எதிர்வாதம் செய்யவேண்டாம். நீங்கள் நண்பர்களிடம் எதிர்பார்க்கும் உதவிகள் உங்களுக்கு கிடைக்கும். அரசியல்வாதிகள் பிரகாசிப்பர். ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இது உகந்த மாதம் அல்ல. மாணவர்கள் க்ரூப் ஸ்டடி செய்து பயனடைவர். கல்வி சார்ந்த விருப்பங்கள் நிறைவேறும்.

சிம்மம்:
தொழிலில் லாபம் கிடைக்கும். காயங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்படும். அவைகளுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்த நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டியது அவசியம். நோயில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்களுக்கு ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பெண்கள் விபத்துகளிலிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள எச்சரிக்கை அவசியம். வெகு காலமாக உங்களுக்கு இருந்து வந்த பணமுடைகள் இப்போது .தலையெடுக்கும். உங்கள் பணியிடங்களில் உங்களுக்கு எதிராக உருவாகும் சூழ்நிலைகளுக்காக நீங்கள் பெரிதாக எதுவும் எதிர்ப்பு காட்ட வேண்டாம். எந்த புதிய தொழில் தொடங்கும் முயற்சியிலும் ஈடுபடவேண்டாம். ரியல் எஸ்டேட் துறையில் உள்ளவர்கள் அரசியல்வாதிகளுக்கு இது ஏற்ற மாதம். மாணவர்கள் படிப்பில் மட்டுமின்றி விளையாட்டுத் துறையிலும் பிரகாசிப்பீர்கள்.

கன்னி:
இடமாற்றமும் தொலைதூரப் பிரயாணமும் ஏற்படும். உடல் உபாதைகளும் வாழ்க்கைத் துணையுடன் கருத்து மோதலும் உருவாகி உங்களை சங்கடப்படுத்தும். வாழ்க்கைத் துணையுடன் சண்டை வரும். உஷ்ண சம்பந்தமான நோய் தாக்கும். ரத்தத்தில் தொற்று ஏற்பட்டு நோய் வாட்டும். சரியான வைத்தியம் இல்லையானால் , உயிருக்கே ஆபத்து ஏற்படும். நீங்கள் பெண்ணாயிருந்தால், ஒரு ஆணின் மூலமாகவோ , நீங்கள் ஒரு ஆணாயிருந்தால் ஒரு பெண்ணின் மூலமாகவோ தொல்லைகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தில் அக்கறை தேவை. பெண்கள் பொறுமை காப்பதன் மூலம் குடும்ப அமைதியைக் காப்பாற்ற முடியும்.பண விவகாரங்களை மிகவும் ஜாக்கிரதியாகக் கையாண்டால் மட்டுமே பண விரயத்தைத் தடுக்க முடியும். உங்கள் பணியிடத்தில் எந்தவிதமான கருத்து வேறுபாடுகளையும் வளர்த்துக்கொள்ளவேண்டாம். அரசியல்வாதிகளுக்கும் ரியல் எஸ்டேட்காரர்களுக்கும் இது உகந்த நேரமல்ல. ஆராய்ச்சியாளர்களுக்கு இது வெற்றி கிட்டும் காலம்.

துலாம்:
குடும்பத்திலும் அலுவலகத்திலும் பலவித சிக்கல்களைத் தீர்த்து வைப்பீர்கள். குடும்பத்தில் திருமண பந்தம் பலப்படும். காதல் விவகாரங்கள் திருமணத்தில் முடிவடையும். பெண்கள் உறவினர்களிடமும் அண்டை அயலாரிடமும் நல்லுறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். வீணான செலவுகளைக் குறைத்துக்கொள்ளவும். அதிகார பதவியில் இருக்கும் ஒரு நணப்ரின் மூலம் உங்களுக்கு உதவி கிடைக்கும். கூட்டுவியாபாரம் சிறக்கும். புதிய சொத்துக்களில் முதலீடு செய்வீர்கள். உங்கள் சாதுரியத்தின் மூலம் வேறுபட்ட கருத்துக்கள் உடையவர்களை உங்கள் வழிக்குக் கொண்டுவரௌவீர்கள். உங்கள் நிலைமை மாறி, உங்களுக்குப் புகழும் கௌரவமும் கிடைக்கும். ரியல் எஸ்டேட்காரர்கள் நல்ல லாபம் காண முடியும். அரசியல்வாதிகளுக்கு இது ஏற்ற தருணம் அல்ல. மாணவர்கள் கடும் உழைப்பின் மூலம் கல்வியின் சிகரத்தை எட்டிப் பிடிப்பார்கள். விளையாட்டுகளிலும் போட்டிப் பந்தயங்களிலும் குறிப்பிடத்தக்க வெற்றியடைய முடியும்.

விருச்சிகம்:
வியாதிகள் முற்றிப்போய் தொல்லை கொடுக்கும். கான்ஸர் போன்ற உயிர்க்கொல்லி நோயில் கஷடப்படுபவர்கள் தகுந்த தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டிய்து அவசியம். நீர்நிலைகளுக்கு அருகில் உள்ள இடங்களில் எவ்வித முதலீடும் செய்யவேண்டாம். உங்கள் பிசினஸ் பார்ட்னர் ஒருவர் இறந்து போகலாம். பெண்கள் தங்கள்வீட்டைச் சீரமைத்து, புதிய விலை உயர்ந்த பொருள்களை வாங்கிப் போட்டு வீட்டை அழகுபடுத்துவர். பலவழிகளிலும் உங்களுக்கு சொத்து சேரக்கூடிய வாய்ப்பு உண்டு. முக்கிய விஷயங்களில் முடிவெடுக்குமுன் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கவும். ஏனென்றால் உங்கள் முடிவு தவறாகப் போகும் ஆபத்து உள்ளது. உங்கள் எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். ரியல் எஸ்டேட்காரர்கள் கஷ்டப்படுவார்கள். அரசியல்வாதிகளுக்கு ந்ல்ல நேரம். மாணவர்களுக்கு மனம் நிலைகொள்ளாமல் அலைபாயும் என்பதால், கடின முயற்சி எடுத்தால் மட்டுமே வெற்றிகாண முடியும். திரும்பத் திரும்ப ரிவைஸ் செய்தால் மட்டுமே நினைவில் நிற்கும்.

தனுசு:
காயங்கள், சின்னச் சின்ன உடல்நலக் குறைகள் உங்கள் சுக சௌகர்யங்களைக் குறைக்கும். குடும்பத்தில் குழந்தைப் பிறப்பு, திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். சர்க்கரை வியாதியும் சிறுநீரகக் கோளாறுகளும் உங்களைப் படுத்தும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கும் அசௌகர்யம் ஏற்படும். உங்களுக்கு வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். உங்களுடைய திறமைக்கு முழு அங்கீகாரம் கிடைத்து அது வெளி உலகிற்குத் தெரியவரும். உங்களுடைய பணியில் ஆர்வம் காட்டி ப்ரும் முன்னேற்றம் அடைவீர்கள். வீணான முயற்சிகளைத் தவிர்க்கவும். ரியல் எஸ்டேட்காரர்களுக்கு இது உகந்த மாதமல்ல. அரசியல்வாதிகளுக்குப் பரவாயில்லை. மாணவர்கள் மேற்கல்வியைத் தொடர தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும்.

மகரம்:
விவகாரமான ஆட்களிடமிருந்து ஒதுங்கியிருங்கள். குறிப்பாக ஆணாயிருந்தால், பெண்ணிடமிருந்தும், பெண்ணாயிருந்தால் ஆணிடமிருந்தும் நிச்சயம் விலகியிருக்கவேண்டும். ஒரு விபத்து ஏற்படலாம் என்பதால், நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது மட்டுமில்லாமல், இன்ஷ்யூரன்ஸ் சம்பந்தப்பட்ட ஆவணங்களை சரிபார்த்து வைத்துக்கொள்ளுங்கள். குடும்பத்தில் ஒருவருக்கு பெரிய வியாதியோ அல்லது உயிருக்கு ஆபத்தோ ஏற்படும். இருதய நோயை மெடிகல் செக்கப் மூலம் கன்ட்ரோலில் வைத்துக்கொள்ளுங்கள். வாழ்க்கைத் துணையின் உடல் நலத்தை கவனத்தில் கொள்வது அவசியம். இந்த மாதம் கடன் வாங்குவது ஆபத்தில் முடியும். எதிர்பாராத வருமானம் வரும் என்றாலும் பணம் வரும் வழி அவ்வளவு நல்லதாக இருக்காது. உங்கள் மீது பொய்க்குற்றச்சாட்டு வர வழியுண்டு என்பதால், ஆவணங்களைக் கையாளும்போது ஜாக்கிரதையாக இருக்கவும். கூட்டுத் தொழிலில் பிளவு ஏற்படும். ரியல் எஸ்டேட் துறையில் இருப்பவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இது ஏற்புடைய மாதமல்ல. மாணவர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை எதிர்பார்க்க முடியும். வேண்டாத விஷயங்களில் ஈடுபட்டு சக்தியையும் நேரத்தையும் வீணாக்ககூடாது.

கும்பம்:
குடும்பத்தில் உடல் நலமின்றி இருக்க்கும் ஒருவரை குடும்பத்தார் பிரிய வேண்டியிருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் ஏற்படும் டென்ஷனை அவருடன் மனமொத்து அவருக்குக் கொடுக்கும் ஒத்துழைப்பின் மூலம் நீங்கள் சரி செய்ய முடியும். ஆன்மீக விஷயத்தில் ஈடுபாடு கொள்வீர்கள். உஷ்ண சம்பந்தமான வியாதிகளால் கஷடபடும் வாய்ப்பு தெரிகிறது. கண் நோய் பிரச்சினை கொடுக்கும். பெண்களுக்கு ஆண் நண்பர்களால் அவமானம் நேரும். வருமானம் குறையும். ஒப்பந்தங்களால் பிரச்சினை ஏற்படும். வழக்கு விவகாரங்களை தவிர்க்கவும் அல்லது ஒத்திப்போடவும். உடன் வேலை செய்பவர்களிடம் நீங்கள் கண்டிப்புடன் இல்லாவிட்டால், அவர்கள் உங்களுக்கெதிராக மாறக்கூடும். அவர்களால் உங்கள் வியாபாரம் கெடும். அரசியல்வாதிகள் சிறப்பார்கள். ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்.மாணவர்கள் சிறிதளவு முயற்சி மேற்கொண்டால்கூட பெரும் வெற்றி பெறுவார்கள். விளையாட்டுத் துறையிலும் சிறந்து விளங்குவார்கள்.

மீனம்:
குடும்பத்தில் திருமண உறவுகள் சிறக்கும். ஆனால் குடும்பத்தில் நடக்கும் தீமைகளுக்கும் உங்களையே பொறுப்பாக்குவார்கள். இளையவர்கள் உங்களை மதிக்கவில்லையே என்ற குறை இருக்கும். மற்றவர்களுக்கும் அதேபோன்ற குறைகள் உங்களிடம் இருக்கும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் இருக்கும். வருமானம் பெருகும். கடன்களிலிருந்து நிவாரணம் கிடைக்கும். தொழில் உற்பத்திக்குத் தேவையான பொருள்களை வாங்கி ஸ்டோர் பண்ணிக்கொள்வீர்கள். வேலை தேடுவோருக்கு நல்ல வேலை கிடைக்கும். சிலர் கடல் கடந்து செல்லும் யோகம் கிடைக்கும். அனைத்து பிரச்சினைகளையும் சமாளிக்க நல்ல துணையாட்கள் கிடைப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை சார்ந்தவர்களுக்கு இந்த மாதம் நன்றாக இருக்கும். அரசியல்வாதிகளுக்கும் இந்த மாதம் சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமாக இருப்பதால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று ஜொலிப்பார்கள். ஆனால், ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டோருக்கு வளர்ச்சிக்கு நிறைய தடைகள் இருக்கும்.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>