/* ]]> */
Jul 262011
 

 ஜோதிடம் – செவ்வாய் தோஷம்

இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?

செவ்வாய் தோஷம்

செவ்வாய் கிரகம்:-

செவ்வாய் ஒரு தீய கிரகம். எங்கு நின்றாலும் கெடுதியே. செவ்வாய் ஒருவரது ஜாதகத்தில்  2,4,7,8,12ஆகிய இடங்களில் இருந்தால், தோஷம் உண்டாகிறது. அந்தச் செவ்வாயே மேஷம், விருச்சிகம், கடகம், மகரம் ஆகிய இடங்களில் இருந்தால், தோஷப் பரிகாரம் ஏற்படுகின்றது என்றும் கூறப்படுகின்றது. சூரியன் வீடாகிய சிம்மத்தில், செவ்வாய் இருந்தாலும், தோஷப் பரிகாரம் உண்டாகிறது என்றும் கூறுகிறார்கள். செவ்வயைக் குரு, சனி  போன்ற கிரகங்கள்  பார்வை செய்தாலும்,  சேர்ந்து இருந்தாலும், தோஷ பரிகாரம் உண்டு என்றும் ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதையெல்லாம் முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்தும் உண்டு.

செவ்வாய், இரத்தம், நெருப்பு ஆகியவற்றின் காரகன் ஆகும். அதோடு கொடிய கிரகமும் ஆகும். அந்த செவ்வாய் எங்கு இருந்தாலும் கெடுதியே ஏற்படுகின்றது. செவ்வாய் மட்டுமல்ல. சனி,ராகு, கேது போன்ற அசுபர்களும் தோஷத்தையே கொடுக்கிறார்கள். செவ்வாய்க்கு மட்டும் பரிகாரம் என்று கூறுவதை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. மேஷம், கடகம், விருச்சிகம், மகரம் போன்ற இடங்களில் செவ்வாய் இருந்தால், கண்டிப்பாக கெடுதி உண்டாகிறது. ஒரு உதாரண ஜாகத்தை ஆராய்ந்தபோது, மேஷ லக்கினத்தில் பிறந்த ஒரு பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. அவருக்கு சந்திர திசையில் சுக்கிர புத்தி  நடைபெற்றபோது  திருமணம் நடந்தது. அந்தப் பெண்ணுக்கு எட்டாமிடமான விருச்சிகத்தில் செவ்வாய் வீற்றிருந்தார்.    அந்த ஜாதகருக்கு சந்திர திசையில் சுக்கிர புத்தி முடிவடைந்ததும், அதாவது  திருமணம் முடிந்து  ஓராண்டு முடிவதற்குள்ளாகவே செவ்வாய் திசை வந்து செவ்வாய் புத்தி நடைபெற்றபோது அந்த செவ்வாய் புத்தியிலேயே கணவருக்கு மரணம் உண்டாகியது. பெரிய விபத்தில் சிக்கி அவர் மரணம் அடையும் நிலை ஏற்பட்டது.  பெண்ணின் ஜாதகத்தில் எட்டில் உள்ள செவ்வாய் அந்தப் பெண்ணுக்கு  தன் சுய புத்தியிலேயே தன் மாங்கல்யம் இழக்கும் அவல நிலையை ஏற்படுத்தியது. இது ஏன் இங்கே கூறப்படுகிறது என்றால், விருச்சிகத்தில் செவ்வாய் இருந்தாலும்கூட அது யோகமான பலன் எதையும் தந்துவிடுவதில்லை.  விருச்சிகம் எட்டாம் இடமாக அமைந்துவிடும்போது அந்த எட்டாமிடத்துக்குரிய கெடுதியைத்தான் கொடுக்கிறதேயொழிய விருச்சிகம் என்பதால் நற்பலன் எதுவும் வந்துவிடுவதில்லை.

இதுவும் தவிர ஜாதகத்தில் செவ்வாய் வேறு ஒரு கிரகத்தோடு சேர்ந்து காணப்பட்டால், தோஷத்தின் கடுமை குறைகிறது. செவ்வாயும் சூரியனும் சேர்ந்து எந்த இடத்தில் இருந்தாலும் அந்தப் பெண் மாங்கல்யத்தை இழக்கிறாள். செவ்வாயும் சனியும் சேர்ந்து  ஏழில் காணப்பட்டால், அவள், திருமணமான சில  வருடங்களிலேயே  கணவனை இழக்கிறாள். எனவே செவ்வாய் எந்த கொடிய கிரகத்துடன் காணப்பட்டாலும், அந்த தோஷதின் கடுமையான பலன்கள் கூடுகிறது. ஆனால், செவ்வாய்க்கிழமையில் ஒருவர் பிறந்ததாலேயே ஒருவருக்கு செவ்வாய் தோஷம் ஏற்பட்டுவிடாது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

  2 Responses to “செவ்வாய் தோஷம் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?”

  1. Mankaliyathosam man Emma
    seyvathu

  2. Yes this true

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>