காலை வணக்கம்
இன்றைய பாடல்: ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்
படம் : ஜானி(1980)
இசை : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன்
பாடியவர் : ஜென்சி
ஸ்ரீதேவியின் அழகு உச்சத்தில் இருந்த கால கட்டம் இது தான் என்று நினைக்கிறேன். அவர் அறிமுகம் செய்த உடுத்தும் கலாச்சாரமும் தான் . இப்படி ஒரு கஷ்மீர் சில்க்கும் முத்து ஆபரணங்களும் அந்த ஏழு கல் மூக்குத்தியும் (ஸ்ரீதேவி பெயரால் தான் இன்னமும் குறிப்பிடப்படுகிறது ) காணக் கண்கள் போதவில்லை . கொள்ளை அழகு !
தலையும் தான் செமையாக இருக்கிறார் .
ஜென்சியின் குரல் ம்ம்ம்…குழந்தைத்தனம் மாறாத அழகுக் குரல். அதே போன்ற தோற்றம் உள்ள ஸ்ரீதேவிக்கு சரியான பொருத்தம் . பாடல் எழுதியவர் கங்கை அமரனாம் . பிரமாதம் ! ஆஹா ஆஹா ஹா ..என்று ஜென்சி உருகும் போது சேர்ந்து உருகுவது நேயர்களும் தான் . மிக இனிமையான மனது…
ஒரு இனிய மனது இசையை அணைத்துச்செல்லும்
இன்பம் புது வெள்ளம்
அந்த சுகம் இன்பச்சுகம் அந்த மனம் எந்தன் வசம்
ஒரு இனிய …
ஜீவனானது இசை நாதமென்பது முடிவில்லாதது
வாழும் நாளெல்லாம் எனை வாழவைப்பது இசை என்றானது
ஆஹா ஆஹாஹா
எண்ணத்தில் ராகத்தின் மின்சாரங்கள்
என்னுள்ளே மோனத்தின் சங்கமங்கள்
இணைந்தாடுது இசை பாடுது
ஒரு இனிய மனது ..
மீட்டும் எண்ணமே சுவையூட்டும் வண்ணமே
மலர்ந்த கோலமே
ராக பாவமே அதில் சேர்ந்த தாளமே மனதின் பாவமே
ஆஹா ஆஹாஹா..
பருவ வயதின் கனவிலே பறந்து திரியும் மனங்களே
கவி பாடுங்கள்—உறவாடுங்கள்..
ஒரு இனிய மனது ..
ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:
Inbam Puthu Vellam
Antha Sugam Inba Sugam, Antha Manam Enthan Vasam (Oru…)
Jeevan Aanathu Isai Natham Enbathu, Mudivillathathu…
Vazhum Nall Ellam Ennai Vazhavaipathu, Isaiyendranathu
AaAaAaAa…
Ennathil Raagathin Min Swarangal,Ennulae Monathin Sangamangal Innainthaduthu
Isaipaduthu
Meetum Ennamae Suvaiyuttum Vannamae, Malarntha Kalamae
Ragabavamae Athil Sertha Thalamae, Manathin Thabamae
AaAaAaAa…
Paruva Vayathin Kanavilae Paranthu Thiriyum Manangalae Kavi Padungal
Uravadungal
tags
sridevi, rajni, ilaiyaraja, gangai amaran, jensi, kaalaipaniyum konjma isaiyum, oru iniya manathu, oru iniya manathu song lyrics, oru iniya manathu song video, johny songs, johny song lyrics, johny song video, sugaragam
ஸ்ரீதேவி, ரஜினி, இளையராஜா, கங்கை அமரன், காலைப் பனியும் கொஞ்சம் இசையும், ஒரு இனிய மனது பாடல் வரி, ஒரு இனிய மனது , ஒரு இனிய மனது விடியோ, ஜானி படப் பாடல், ஜானி, ஜானி பாடல் விடியோ, சுகராகம்
ஃபேஸ்புக் ரிப்ளை
Powered by Facebook Comments