/* ]]> */
Sep 262011
 

 

ஜெயலலிதாவின் ஜாதகம்:

jayalalitha horoscope

விரலசைவில் வெற்றியைக் குவிக்கும்  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஜாதகத்தைப் பார்க்கலாம். பெயரிலேயே ஜெயத்தைக் கொண்ட இவர் பிறந்த தேதி, 24.2.1948. பியர்ந்தநேரம்  பிற்பகல்  2.34மணி. தமிழ் சர்வசித்து வருடம் மாசி மாதம்12 அயனாம்சம் 23:7:47:(லகரி)ஜென்ம நட்சத்திரம் மகம் 3-ம் பாதம் திதி (சுக்கில)பௌர்ணமி யோகம் சதி கண்டம் கரணம்பவம் அயனமுத்தராயணம் பாவக மாற்றம். குரு (விருச்சிகம்ஜனன கால இருப்பு திசை கேது 28 நாள்.

இவருடைய ஜாதகத்தை ஆராயும்போது சட்பலம் ரூபங்களில்செவ்வாய் குரு சுக்கிரன் பூர்ண பலம்பெற்றிருக்கிறது. ஜாதகத்தில் விதி என்ற லக்கினத்தையும் குரு பார்ப்பதும், ராகு செவ்வாயின் வீட்டில் 11ல் இருப்பதும், ஜனன காலத்தில் குரு 5-ம் பார்வை பார்ப்பதும், ர்செவ்வாய் சந்திரன் சேர்க்கை பெற்று அமைந்ததால்,வழக்குகள் பல வந்து  6,11க்குரிய செவ்வாய் (வ)சந்திரன் (2க்குரிய) குரு 7ல் ( கால புருஷனுக்கு 9க்குரியவர் பலமாக இருந்து சட்பல ரீதியாகவும், பூர்ண பலம் 8, 4 பெற்றதோடு அஷ்டவர்க்கம் ரீதியாக அதிக பட்சமாக 7 பரல்கள் பெற்று இருந்ததால், அனைத்து வழக்குகளிலும் ஜாதகருக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முடிந்தது.

ஜாதகரின்  ஜாதகப்படி, மிதுனத்தின் அமைப்பு அவரை உணர்ச்சிவசப்படுபவராகவும்,  பிரபலமானவராகவும்  விளங்கவைக்கிறது. மேலும் பலம் வாய்ந்ததாக விளங்கும் சந்திர லக்கினமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டியதே. மிதுனத்தைப் பொறுத்தவரை, 7-மிடத்திலுள்ள குரு ஒரு அசுபராகி பாதகமான மகரத்தில் இருப்பது நல்லதல்ல. சந்திர லக்கினத்திலிருந்து 7-மிடத்தில் சூரியன் அமைந்திருப்பது பெண்களுக்கு நல்லதல்ல. ராசிக்குரிய வீடு சந்திரனுடைய வீடாகி, அதில் சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்து அமைந்து குருபார்வை பெறுவது மட்டுமல்லாமல், லக்கினாதிபதியும், இரண்டாம் வீட்டின் அதிபதியுமான புதனுடைய பார்வை பலமும் பெறுகிறது. சூரியனுடைய பார்வை பலமும் பெறுவதால், ஜாதகருக்கு, பெயர், புகழ், எந்தஸ்து அனைத்தும் அமையப்பெற்றுள்ளது.  இதனால், ஜாதகருடைய சிம்ம ராசி பலம் பெற்று விளங்குகிறது. சந்திரன் ,செவ்வாய் சேர்க்கை சந்திர மங்கள யோகத்தை ஏற்படுத்துகிறது. இந்த சேர்க்கை சிம்மராசிக்கு பெரிய பலத்தைக் கொடுக்கிறது.  12ம் வீடான விரயத்தில் சனி அமர்ந்திருப்பது இவருடைய எதிரிகளை துவம்சம் செய்கிறது. சனியுடன் இணைந்திருக்கும் ‘ப்ளூடோ’  கொண்ட எண்ணத்தில் உறுதிகொண்டவராக இவரை  விளங்க வைக்கிறது.  2012 ஆகஸ்ட்டில் இவருக்கு ராகு திசை முடிகிறது. முடியப்போகும் நேரத்தில் இவருக்கு ஒரு பேரதிர்ஷ்டம் காத்திருக்கிறது.

Tags : Jayalalitha horoscope analysis, Jayalalitha horoscope, J.Jayalalitha birth place and date,  ஜெயலலிதா ஜாதகம், ஜெயலலிதா ஜாதக பலன், ஜெயலலிதா பிறந்த தேதி பிறந்த இடம், வி.ஐ.பி ஜாதகம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>