/* ]]> */
Nov 152011
 

ஜார்கண்ட் சைனிக் பள்ளியின் ஜூனியர் மாணவர்கள் சீனியர் மாணவர்களால் அடித்துத் துன்புறுத்தப்பட்ட விவகாரம் சானலுக்கு சானல் பற்றிக் கொண்டு எரிகிறது. குழந்தைகள் ஒருவரை ஒருவர் அடித்துக்கொள்வதில் நாம் ஆச்சர்யப்படுவதற்கு என்ன இருக்கிறது?

“அடி உதவுவது போல் அண்ணன் தம்பி கூட உதவ மாட்டான்”

என்று பழமொழிகளில் கூட வன்முறையைக் கொண்டாடும் கலாச்சாரம் அல்லவா நம்மது? வீட்டில் நடக்கும் வன்முறையை விடவா? மனைவியை அடிப்பது- கேட்டால் எனக்கில்லாத உரிமையா என்பது ? இப்போதுமா! என்று அதிசயப்படவேண்டாம் எங்கள் ஊர் பக்கம் வாருங்கள் காட்டுகிறேன்.

மருமகளை மாமியார் அடிப்பதெல்லாம் கூட இங்கு சகஜமாக நடப்பது தான். குழந்தைகளை பெற்றோர் அடிப்பது மட்டுமென்ன ? அடியாத மாடு தான் படியாதே?

 

விசிட்டிங் டீச்சராக நான் பணிபுரிந்து வரும் ஒரு பள்ளியில் ஆசிரியைகளுடன்  பாடவிஷயங்கள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தேன் சென்ற வாரத்தில் ஒரு நாள். பார்த்துக்கொண்டிருக்கும் போதே வகுப்பைக் கவனித்துகொண்டிருந்த ஆயாம்மா  நீண்ட கழி ஒன்றினால் குழந்தைகளை சரமாரியாக அடித்தார்.

ஐயோ !நிறுத்துங்கள்! என்று நான் பதறிய  போதும் “எவ அவ” என்பதான ஒரு முகபாவம் தான் காட்டினாரே தவிர ,குற்றஉணர்ச்சியின் ஒரு துளி கூட அவர் முகத்தில் இல்லை. இத்தனைக்கும் அவர் அடித்தது எல்.கே.ஜி குழந்தைகளை.

ஒரு மனிதனை இன்னொருவன் அடிப்பதையும், ஒருவனை ஊரே கூடி அடிப்பதையும் காமெடி என்ற பெயரில் ரசிப்பவர்கள் அல்லவா நாம்?அநாகரிகத்தின் உச்சகட்டம் அல்லவா இது? வெட்கப்பட வேண்டிய விஷயம் இல்லையா?

பெற்றவர்களுக்கு பிள்ளையை அடிக்கும் உரிமை இல்லை எனும் போது பள்ளிக்கு என்ன உரிமை இருக்கிறது?

சர்வ சாதாரணமாக பெரியவர்கள் ஒருவரையொருவரும் ,இளையோரையும் அடிக்கும் போது.. அது என்னவோ அதிகாரத்தின் உச்சம், ஆளுமை சம்பந்தப்பட்ட சமாச்சாரம் என்று தானே பிள்ளைகள் புரிந்து கொள்வார்கள்?

ஒவ்வொரு குழந்தையும் இறைவனின் அருட்கொடை , ஒவ்வொரு மனிதனையும் இறைவன் அவனுக்குரிய தன்மானத்தோடு தான் படைக்கிறான், இறைவனின் பிரதிநிதியே ஒவ்வொரு பிள்ளையும் என்பது புரிந்தால் எப்படி ஒருவரையொருவர் இழிவு செய்ய மனம் வரும்? கனியிருப்பக் காய் கவரலாமா?

ஏதோ தங்கள் உயர்வை , ஆளுமையைக் காட்டிக் கொள்வதாக நினைத்து அந்தப்பள்ளி மாணவர்கள் ஜூனியர்களை அடித்திருக்கிறார்கள். இதற்கு பெற்றோர், பள்ளி மற்றும் சமூகமாகிய நாம் தான் முழுபொறுப்பேற்க வேண்டும். இந்தக் கேவலமான வன்முறைக் கலாச்சாரம் ஒழிய ஆவன செய்ய வேண்டும்.

“அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பது

“திருமாலின் அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்பதன் சிதைவே!

ஆதங்கத்துடன்..

..ஷஹி..

tags..

சைனிக் பள்ளி, ராகிங், பழமொழி, திருமால், ஜார்கண்ட், எல்.கே. ஜி

sainik school, ragging, pazamozi, thirumal, L.K.G

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>