/* ]]> */
Jan 292012
 

மல்லுக்கட்டான ஜல்லிக்கட்டு

 

பொங்கல் அலங்காநல்லூர் ஜல்லிகட்டு alanganallur jallikattu pongal

அலங்காநல்லூர் ஜல்லிகட்டு

வழக்கம்போலவே , இந்த வருடமும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு, களை கட்டியபடியே தொடங்கியது. அது ஒரு அதிமுக கட்சி விழா போலவே நடந்தது. எங்கு பார்த்தாலும் அதிமுக கட்சிக்கொடிகள் பறந்தன. கருப்பைய்யா எம்.எல்.ஏ. விழாவை நடத்தினார். விழாக் கமிட்டியின் தலைவரும் உறுப்பினர்களும் கூட அதிமுக கட்சியினர்தான்.  போட்டி ஆரம்பமானது. போட்டியாளர்களைப் பார்த்த எம்.எல்.ஏ. அதிர்ச்சியடைந்தார்.  ஓபன் மைக்கிலேயே சத்தம் போட்டார்.” என்ன, இது?  ஏன் எல்லோரும் நான் கொடுத்த  டி-ஷிர்ட்டுகளைப் போட்டுக்கொள்ளவில்லை?” என்று வெகுண்டார்? அவையெல்லாம் ‘அம்மா’வின்  படத்துடன், கட்சி சின்னமும் போடப்பட்டிருந்தது. எனவே தொண்டர்களிடம் போய் அந்த டீ-ஷிர்ட்டுகளை எடுத்துவரச் செய்தார். அடுத்த கணம் அவரே எடுத்து வர புறப்பட்டார். அங்கிருந்த கலெக்டர் சகாயம் ” அந்த டீ- ஷர்ட்டுகளைத்தான் அனைவரும் போடுவார்கள் என்றால், போட்டியை நீங்களே நடத்திக்கொள்ளுங்கள். நான் இருக்கமாட்டேன்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார். உடனே சுதாரித்துக்கொண்ட எம்.எல்.ஏ. தன் எண்ணத்தை விட்டுக்கொடுத்து  பின்வாங்கினார். கலெக்டர் சகாயமும்” முதலமைச்சர் படம்  மட்டும் போட்டிருப்பது தவறில்லை. ஆனால், கட்சி சின்னம் இருப்பதை அனுமதிக்க முடியாது.” என்று விளக்கினார்.  கலெக்டருக்கு முதலமைச்சரிடம் உள்ள செல்வாக்கை மனதில் வைத்து எம்.எல்.ஏ. நைஸாக ஜகா வாங்கினார். கொஞ்ச நேரம் அமளியாகி, எஸ்.பி. அஸ்ரா கார்க் உள்ளிட்டோர்  சமாதான முயற்சியில் இறங்கியதால், அமைதியானது.

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>