/* ]]> */
Jan 222012
 

ஜெய்ப்பூரின் இலக்கியத்திருவிழாவிற்கு சல்மான் ருஷ்டி வருவாரா மாட்டாரா என்பது எத்தனை சர்ச்சைகளை கிளப்பினதோ அதே அளவினதான பரப்பரப்பை ஓப்ரா வின்ஃபேரேயின் வருகை ஏற்படுத்தியிருகிறது .

இன்று (22/1/12) மாலை என். டி . டி வியில் “தி ஓப்ரா எஃபெக்ட் “என்ற ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெரும் பார்வையாளர் கூட்டத்துக்கு மத்தியில் பர்கா தத்துடன் ஓப்ரா உரையாடினது அட்டகாசமான ஒரு நிகழ்ச்சியாக இருந்தது . அழகான குர்தாவில் வித்தியாசமான ஓப்ரா . மேடைக்கு அவர் வரும் போதே பார்வையாளர்கள் மத்தியில் அத்தனை உற்சாகமும் பரபரப்பும் . கலைநிகழ்ச்சிகள் என்ற பெயரிலான கூத்துக்களுக்கு மத்தியில்  தனிமனித புகழ் பாடும் நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்களின் பரபரப்பையே பார்த்து சலித்திருந்த கண்களுக்கு அத்தனை இதமும் புத்துணர்ச்சியும் !

என். டி .டி வியில் ஓப்ரா வின்ஃப்ரேயின் நேர்காணல்

உலகின் மிகவும் விரும்பப்படும், ரசிக்கப்படும் தொலைக்காட்சி  ஆளுமையான ஓப்ரா தன்னுடைய வெளிப்படையான ,மிக இயல்பான பேச்சினால் உலகின் ஒட்டு மொத்த கவனத்தையும் தன் பேரில் மட்டும் அல்லாமல் தான் உலகின் முன் எடுத்து வைக்கும் கேள்விகளின் மீதும் திருப்பும் வல்லமை பெற்றவர் . பாரக் ஒபாமா ஓப்ராவின் ஆதரவில் தான் இத்தனை பெரிய வெற்றி பெற்றார் என்று பர்கா தத் சொல்ல கூட்டத்தில் அத்தனை ஆரவாரம் ஓப்ரா முகத்தில் வெட்கம் !

இந்தியாவின் போக்குவரத்து நெரிசலும், இந்தியர்கள் சாலை விதிகளை மீறுவதையும் பார்வையாளர்களுக்கு வெட்கம் வர சொன்னார் ஓப்ரா ! சிவப்பு விளக்கு எரிகிறது நீங்கள் பாட்டுக்கு போய்க்கொண்டே இருக்கிறீர்கள் என்று கூட்டத்தைப் பார்த்து அவர் கேட்க கொல்லென்ற சிரிப்பு !

இந்தியாவில் அவரை மிகவும் கவர்ந்த விஷயங்களையும் பட்டியலிடத் தவறவில்லை ஓப்ரா.

இங்கு மக்கள் ஆன்மீகம் பேசுவது மட்டும் இல்லை ஆன்மீகத்தோடே வாழ்கிறார்கள் ( people just dont talk religion ..they live religion) என்றார் .

அபிஷேக் ஐஷ்வர்யாவை தன் தொலைக்காட்ச்சி நிகழ்ச்சியில் பேட்டி கண்ட போது “எப்படி பெற்றோருடனே வசிக்கிறீர்கள் ?( how do you live with your parents ) ” என்ற கேள்விக்கு “உங்களால் எப்படி அவர்களை ஒதுக்கி வாழ முடிகிறது?” என்று அபிஷேக் எதிர் கேள்வி கேட்டதை நினைவு கூர்ந்தார் .இங்கு குடும்ப உறவுகள் பேணப் படுவதையும் பெரியவர்கள் மதிக்கப்படும் விஷயத்தையும் வெகுவாக சிலாகித்தார் . அதே சமயம் குடும்ப உறவுகளை இத்தனை மதிக்கும் பூமியில் கணவன் இறந்து விட்டான் என்பதற்காக மட்டும் ஒரு பெண்ணை எப்படி ஒதுக்குகிறீகள் என்பது போன்ற  பதில் தர முடியாத கேள்விகளை வீசவும் அவர் தயங்கவில்லை .

வறுமையை ஒழிப்பதற்கான மிகப் பெரிய ஆயுதம் கல்வி தான் என்றதுடன் தனக்கான வாழ்வை , தன் வாழ்வு பற்றின முடிவுகளை தானே எடுக்க இயல்வதே ஒரு பெண் பூரண சுதந்திரம் பெற்று விட்டதற்கான அடையாளம் என்றார் . நாம் என்னவாக நினைக்கிறோமோ அதுவாக ஆகிறோம் என்றவர் ..தான் அலையாக விரும்பாமல் கடலாக விரும்பியதே தன் வெற்றியின் ரகசியம் என்றது கூட்டத்தில் மிகுந்த ஆர்ப்பரிப்பை ஏற்படுத்தியது . எதைச்செய்தாலும் மிகச்சிறப்பாக செய்தலே வெற்றியின் தாரக மந்திரம் என்றார் .

ஓப்ரா வின்ஃப்ரே தன் தொலைக்காட்சி நிகழ்சியில் அறிமுகம் செய்த புக் கிளப் ( book club) என்ற புத்தகங்கள் அறிமுகம் மிகப்பெரிய ஒரு எழுச்சியை உலகமெல்லாம் ஏற்படுத்தி இருக்கிறது . புத்தகங்கள் வாசிப்பது தனக்கு மிக விருப்பமானது மற்றும் மனிதர்களின் வாழ்வில் மாறுதல்களை கொண்டு வரக்கூடியது என்று பேசியவர், டோனி மோரிசன் தான் வாழும் எழுத்தாளகளில் தனக்கு மிகப்பிடித்தமானவர் என்றார் .

ஓப்ராவின் இந்திய வருகை மற்றும் சல்மான் பற்றின கேள்விகள்

ட்விட்டர் பற்றின ஒரு கேள்விக்கு மிக ஹாஸ்யமாக பதில் அளித்தார் . இம்மாதிரியான தளங்கலில் ஓயாமல் நேரம் போக்குவது போதைப் பழக்கத்துக்கு ஆளாவது போன்றது .அந்த நேரத்தை ஆக்கப்பூர்வமாக செலவு செய்யலாம் என்றார் . பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தை காதல் மணமாக்கிக் கொள்ளும் திறன் இந்தியப்பெண்களிடம் மட்டுமே உள்ளது என்று புகழ்ந்தார் .

உலகமெல்லாம் உள்ள பெண்குழந்தைகளின் கல்விக்காகவும் பாதுகாப்புக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துள்ள ஓப்ரா எத்தனை பாசிடிவ் எனர்ஜியும் , மனிதநேயமும் கொண்டவர் என்பதும் சூழலை மிக இனிமையானதாக மாற்றிவிடக் கூடியவர் என்பதையும் கண்கூடாகக் காண முடிந்தது . கையில் கேள்விகள் குறித்து வைக்கப்பட்ட தாள் ஏதும் இன்றியே பர்கா தத் அனாயாசமாக தன்னுடன் உரையாடினது குறித்து மேடையிலேயே வெகுவாகப் புகழ்ந்தார் ஓப்ரா .

மிக வெளிப்படையாகவும் சிரித்த முகத்துடனும்  இருந்த ஓப்ரா  , பேட்டியாளர் மட்டுமல்லாமல் பார்வையாளர்கள் அனைவருடனும் கனெக்ட் செய்த வண்ணமாய் , அதாவது பார்த்துக்கொண்டிருந்த அத்தனை பேரும் தன்னுடன் தான் ஓப்ரா பேசுகிறார் என்று மனப்பூர்வமாய் உணரும் வண்ணம் பேசினார் . எளிமையும் உண்மையும் தான் வசீகரத்தின் வண்ணங்கள், தோலின் நிறமும் செயற்கைப் பேச்சுகளும் அல்ல என்பதை மறுபடியும் உணர்த்தியது அவரின் இந்த நேர்காணல் ! ஒரு சிறு வெற்றியில் நிலை மறந்து போகும் மனிதர்களுக்கு சரியான ஒரு பாடம் இது .

ஒரு கறுப்பினப் பெண்ணாக, வறுமைச்சூழலில் பிறந்து வளர்ந்து , அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுக்கும் சக்தியைப் பெற்றுள்ள பெண்ணாக மாபெரும் அவதாரம் எடுத்துள்ள அவரின் வெற்றி உலகப் பெண்களால் கொண்டாடப் பட வேண்டிய ஒன்று ! வீ லவ் யு ஓப்ரா!

..ஷஹி..

tags

oprah winfrey, ndtv, jaipur literary festival, salman rushdie, barga dutt, the oprah effect , obama, america

ஓப்ரா வின்ஃப்ரே , என். டி .டி வி, ஜெய்பூர் இலக்கியத் திருவிழா, சல்மான் ருஷ்டி, பாரக் ஒபாமா, ஒபாமா , அமெரிக்கா, இலக்கியத் திருவிழா, பர்கா தத்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>