/* ]]> */
Nov 132011
 

காலை வணக்கம்

இன்றைய பாடல் :காவியம் பாட வா தென்றலே

படம்: இதயத்தைத் திருடாதே (1988)

பாடியவர்: மனோ

இசை: இளையராஜா

“ஓடிப் போலாமா” என்று தமிழ்நாட்டையே கலக்கின கிரிஜா, ஹாண்ட்ஸம் நாகார்ஜூன் இணைந்து நடித்த ஒரு அழகான காதல் கதை இதயத்தைத் திருடாதே. ஓம் நமஹா பாடலில் அவர்களின் இருவரின் உதடுகளும் ஒட்டியதா இல்லையா என்பது அன்றைய பள்ளி கல்லூரி வளாகங்களின் ஹாட் டாபிக்.

காவியம் பாடவா பாடல் தெலுங்கு சாயலில் இருந்தாலும் கூட மிக இனிமையான ஒரு பாடல், லொகேஷனும் சரி இசையும் சரி அத்தனை அழகு. புகையாகப் பனி படர்ந்த பின்னனி- இருளும் ,துயரமும் சூழ்ந்திருக்கும் நாயகன் நாயகியின் எதிர்காலம் பற்றின ஒரு குறியீடாகத்தான் தெரியும். வெகு சோகமான எக்ஸ்பிரஷனில் பாடியவாறு வரும் நாகார்ஜூனை பாடலின் இறுதியில் துள்ளலும் துடிப்புமாக கிரிஜா கேலி செய்தவாறு ஓடுவது கண்களுக்குக் குளிர்ச்சி…பாடலும் தான்.

 

காவியம் பாடவா தென்றலே

புது மலர் பூத்திடும் வேளை

இனிதான பொழுது எனதாகுமோ

புரியாத புதிர் தான் எதிர்காலமோ

பாடும் நீலப்பூங்குயில்

மௌனமான வேளையில்

காவியம் …

விளைந்ததோர் வசந்தமே

புதுச்சுடர் பொழிந்திட

மனத்திலோர் நிராசையே

இருட்டிலே மயங்கிட

வாழ்கின்ற நாட்களே

சோகங்கள் என்பதை

கண்ணீரில் தீட்டினேன்

கேளுங்கள் என் கதை

கலைந்து போகும் கானல் நீரிது

காவியம் பாடவா…

புலர்ந்ததோ பொழுதிதுவோ

புள்ளினத்தின் மகோத்சவம்

இவை மொழி இசை தரும்

சுரங்களின் மனோகரம்

புதுப் பிரபஞ்சமே

மலர்ந்த நேரமே

அம்மாடி சொர்க்கம் தான்

முன்னாடி வந்ததோ

கசந்து போன காட்சி இல்லையே

காவியம் ..

ஆங்கிலத்தில் பாடல் வரிகள்:

kaaviyam paadavaa thenRalae

pudhu malar pooththidum vaeLai
inidhaana pozhudhu enadhaagumoa
puriyaadha pudhirdhaan edhirkaalamoa
paadum neelap poonguyil mounamaana vaeLaiyil

(kaaviyam paadavaa)

viLaindhadhoar vasandhamae pudhuppunal pozhindhida
manaththiloar niraasayae iruttilae mayangida
vaazhginRa naatkaLae soagangaL enbadhai
kaNNeeril theettinaen kaeLungaL en kadhai
kalaindhu poagum kaanal neeridhu

(kaaviyam paadavaa)

pularndhadhoa pozhudhidhuvoa puLLinaththin mahoathsavam
ivai mozhi isaitharum surangaLin manoaharam
pudhup prabanjamae malarndha naeramae
ammaadi sorggamdhaan munnaadi vandhadhoa
kasandhu poana kaatchi illaiyae

(kaaviyam paadavaa)

தொகுப்பு

..ஷஹி..

 

சுகராகம், காலைப்பனியும் கொஞ்சம் இசையும், காவியம் பாடவா தென்றலே, நாகார்ஜூன், கிரிஜா, மனோ, இளையராஜா, இதயத்தைத் திருடாதே, காதல் பாடல், பாடல் வரிகள், விடியோ

sugaragam, kalaippaniyum konjam isaiyum, kaaviyam padavaa thendrale, nagarjun, girija, mano, ilaiyaraja, idahyathai thirudathe, love songs, lyrics, video

 

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>