/* ]]> */
Aug 242011
 
irom&anna
  ஊழலை ஓழிக்க உறுதி பூண்டுள்ள அன்னா ஹசாரேவுக்கும் அவரது குழுவினரும் இந்திய அளவில் மட்டுமில்லாமல், உலக அளவில் பேசப்படுகின்றனர்.அவரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் குவிந்து அவருடன் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.ஊடகங்களின் [media] வெளிச்சம் முழுவதும் அவர் மேல் விழுந்துள்ளது.
          ஆனால் இந்தியாவின் இன்னொரு பகுதியில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்துவரும் ஒரு பெண்,மனித உரிமை ஆர்வலர்,கவிஞர்,பத்திரிக்கையாளர்,அரசியல் ஆர்வலர் மற்றும் காந்தியவாதியான இரோம் சர்மிளாவை ,இந்த நாடே புறக்கணித்துள்ளது.நம்அரசியல்தலைவர்களாலும்,மக்களாலும்,ஊடகங்களினாலும் புறக்கணிக்கப்படுவது வருத்தப்படவைக்கும் விஷயமே.
மணிப்பூர் மாநிலத்தில் அமலில் உள்ள ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தினால் [AESPA] அம் மாநில மக்கள் நரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.அந்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்பதே அவரின் கோரிக்கை.அரசின் கவனத்தை ஈர்க்கவும்,மக்களைத் திரட்டவும் தனி ஆளாக 4.11.2000-ல் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
 
    இம்பாலில் கைது செய்யப்பட்டு காவலில் உள்ள அவருக்கு குழாய் மூலம் கட்டாயமாக [nasal feeding] திரவ உணவளித்து வருகிறது அரசு.ஒவ்வொரு ஆண்டும் அவர் விடுதலை செய்யப்பட்டு,பின் கைது  செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டுள்ளது மணிப்பூர் அரசு.கற்பனைக்கு எட்டாத தைரியத்துடன் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாக உண்ணாவிரதம் இருந்து வரும் இரோம் சர்மிளா உண்ணாநோன்பினை கைவிடுவதாக இல்லை.இவர் தான் அம்மாநில மக்களுக்கு கலங்கரை விளக்கமாக திகழ்கிறார்.
 
2004-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு [UPA] பதவி ஏற்றவுடன் ,ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி திரு.ஜீவன் ரெட்டி தலைமையில் 5 நபர் குழு ஒன்றை அமைத்தது.அந்த குழு அச்சட்டத்தை திரும்பப்பெற பரிந்துரை செய்தது.பரிந்துரைக்கப்பட்டு ஆறு வருடங்களாகியும் அச்சட்டம் திரும்பப்பெறப் படவில்லை.இந்தியர்களாகிய நமக்கு,நமது அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள எவ்வித அடிப்படை உரிமையும் இன்றி நரக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள் மணிப்பூர் மாநில மக்கள்.
அப்படி என்ன தான் அச்சட்டத்தில் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.அங்கிருக்கும் ஆயுதப் படையினருக்கு கட்டற்ற அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.யாரை வேண்டுமானாலும் வாரண்ட் இல்லாமல் கைது செய்யலாம்,சுடலாம் etc.,
ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் 1958
1.குற்றம் இழைத்தோர் எனப்படுவோர் மட்டுமல்ல; குற்றம் செய்ய வாய்ப்புள்ளவர்களாக ஆயுதப்படையால் சந்தேகிக்கப்படும் எவரையும் நீதிமன்றப் பிடியாணை ஏதுமின்றிக் கைது செய்யலாம்; சிறையில் தள்ளலாம்.
    2. கைது செய்யப்பட்டவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைக்க ஆயுதப்படைக்குக் காலக்கெடு ஏதுமில்லை; நீதிமன்றத்தில் 24 மணி நேரத்திற்குள் நேர்நிறுத்த வேண்டும் என்பதுமில்லை.
    3. சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடு, அலுவலகம், தொழிலகம், வணிக நிறுவனம் என எவ்விடத்திலும் எந்நேரமும் தேடுதல் வேட்டை நடத்த ஆயுதப் படைக்கு அதிகாரமுண்டு. அந்நபர்களின் சொத்துக்களைக் கைப்பற்றவும் செய்யலாம்.
     4. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்டோர் பொது இடங்களில் கூடவும், ஆயுதமாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக ஆயுதப் படை கருதும் எந்தவொரு பொருளையும் பொது மக்கள் எடுத்துச் செல்லவும் தடைவிதிக்க அதற்கு அதிகாரமுண்டு.
       5. அரசுக்கு எதிரான போராட்டம் என்று இல்லை; ஒரு சிறு முணுமுணுப்பையும் பயங்கரவாதம் என்று முத்திரையிட்டுத் தண்டிக்க ஆயுதப் படையால் முடியும்.
  6. குற்றச்சாட்டிற்கு உள்ளாகும் ஆயுதப் படைவீரர்கள் மீது உடனடியாக வழக்கினைப் பதிவு செய்யவோ விசாரணை மேற்கொள்ளவோ மாநில அரசாலும் முடியாது; நடுவண் அரசின் அனுமதி வேண்டும்.
         சுதந்திரம்,ஜனநாயக உரிமைகள்,போராடும் உரிமை ஆகியவற்றில் உண்மையிலேயே நமக்கு அக்கறை இருந்தால்,எந்த ஒரு இந்தியனின் அடிப்படை உரிமைகள்மறுக்கப்படுகிறதோ,அங்கேஅவர்களுக்காககுரல்கொடுப்பவர்களுக்கு, இந்தியர்களாகிய நாம் அனைவரும் ஆதரவுக்கரம் நீட்ட வேண்டும்.
“போராட்டங்களும் போராளிகளும் பிறப்பதில்லை சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள்”.
தொகுப்பு:diet-b
படங்கள்:இணையம்

ஃபேஸ்புக் ரிப்ளை

பின்னூட்டம்

Powered by Facebook Comments

 Leave a Reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>